நூல் அறிமுகம் செய்வோம் - ரூ.10000 பரிசு வெல்வோம்: நீதிபதி கே.சந்துரு (எழுத்தாக்கம்: கமலாலயன்) எழுதிய "இந்திய அரசியலமைப்பு சட்டம் இன்று?" நூல் | Justice K. Chandru's Speech Indhiya Arasiyalamaippu Sattam Indru Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in நளினி மூர்த்தி

நூல் அறிமுகம் செய்வோம் – ரூ.10000 பரிசு வெல்வோம்: நீதிபதி கே.சந்துரு (எழுத்தாக்கம்: கமலாலயன்) எழுதிய “இந்திய அரசியலமைப்பு சட்டம் இன்று?” நூல்

நீதிபதி கே.சந்துரு (எழுத்தாக்கம்: கமலாலயன்) எழுதிய “இந்திய அரசியலமைப்பு சட்டம் இன்று?” நூல்

கடந்த ஆண்டு அக்டோபர் 12 13 14 தேதிகளில் ஓசூரில் நடைபெற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ் மாநாட்டுக் கருத்தரங்கில் அரசியலமைப்பை பாதுகாப்போம் என்ற தலைப்பில் மாண்பமை மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு அவர்கள் ஆற்றிய உரைக்கு எழுத்தாக்கம் அளித்துள்ளார் தோழர் கமலாலயன் அவர்கள் .

இந்திய அரசியலமைப்பை பாதுகாப்போம் என்னும் தலைப்பில் கருத்தரங்கு ஏற்பாடு செய்த நம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தோழர்களுக்கு முதலில் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் . இக்கருத்தரங்கில் உரையாட நீதிபதி கே.சந்துரு அவர்கள் வருகை புரிந்திருப்பது சிறப்பினும் சிறப்பு .ஐயா அவர்கள் ஆற்றிய உரையை படிக்கும் பொழுது நம் இந்திய அரசியலமைப்பை பற்றிய பயமும் பதற்றமும் நம்மை பற்றி கொள்ளத்தான் செய்கிறது.

உலகிலேயே மிக நீண்ட அரசியலமைப்பு என்று சொன்னால் அது நம் இந்திய அரசியலமைப்பு தான். நெகிழ்ச்சி தன்மையும் பல சட்ட திருத்தங்களும் மேற்கொண்டு சமத்துவ சகோதரத்துவ நாடாக இருக்க நமக்கு அளிக்கப்பட்ட பொக்கிஷம் இந்திய அரசியலமைப்பு சட்டம். ஆனால் அப்பேற்பட்ட அரசியலமைப்பு இன்று பல தீய சக்திகளால் ஆபத்தான சூழ்நிலையில் உள்ளது .அதை இன்று பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும் அதைத்தான் ஐயா அவர்கள் இவ்வுரையில் கூறியுள்ளார்.

ஒரு வழக்கறிஞராக இருந்த நீதிபதியாக மாறிய அய்யாவின் வாழ்வில் எத்தனை வழக்குகள் எத்தனை ஆர்ப்பாட்டங்கள் எத்தனை போராட்டங்களை சந்தித்து இருப்பார். அவரின் பொது வாழ்க்கை சிறுவயதிலேயே ஆரம்பித்து இருந்தது. அவர் தன்னுடைய 17 வயதிலேயே வெண்மணியில் ஏற்பட்ட துயரத்திற்கு விவசாய தொழிலாளியின் ஊர்வலத்தை முன் நின்று நடத்தியவர்.

அவரின் உரையை எழுத்தாக வாசிக்கும் போதே அவ்வளவு அழகாகவும் கருத்துக்கள் ஆழமாகவும் உள்ளது .உரையை நேரில் கேட்டால் எப்படி ஒரு உணர்ச்சிபூர்வமாக இருந்திருக்கும் என்று தோன்றியது. இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் டாக்டர் பி ஆர் அம்பேத்கர்அவர்கள்.

அவரின் அளப்பரிய பணி வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டியது .ஆனால் அவரையே ஒரு கூண்டுக்குள் வைத்து தானே நாம் போற்றுகிறோம். அவரையும் ஒரு சாதி தலைவர் என்று கட்டத்திற்குள் அடக்கி வைத்திருக்கிறது சமூகம்.

நமக்கான அடிப்படை வசதிகளை நாம் பெறுவதற்கு நமது அரசியலமைப்பு நமக்கு தேவை .ஆனால் அத்தகைய அரசியலமைப்பை பாதுகாப்பது இன்றைய சூழலில் மிக முக்கியமாக உள்ளது.இன்றைய அரசியலமைப்பு எந்த நிலையில் உள்ளது? அதை ஏன் பாதுகாக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் உள்ளது? அதை யாரிடமிருந்து பாதுகாக்க வேண்டும்? என்ற ஒவ்வொரு சம்பவங்களையும் முன்வைத்து அதற்கான விளக்கங்களையும் அளித்து எதிராளிகளுக்கு ஒரு கண்டன குரலாக பதிவு செய்துள்ளார் நீதிபதி அவர்கள்.

சாதாரண பாமர மக்கள் முதற்கொண்டு அனைத்து மக்களும் மக்களுக்கும் நீதி வழங்கும் நீதித்துறையே இன்று நியாயமற்று நடந்து கொண்டிருக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தின் இதயம் 32வது பிரிவு என்று டாக்டர் அம்பேத்கர் கூறினார் .அதாவது சாதாரண குடிமகனின் அடிப்படை உரிமைக்கு ஒரு இடையூறு வந்தால் கூட அவர் நேரடியாக உச்சநீதிமன்றத்தை நாடி வழக்கு தொடரலாம் அதுதான் பிரிவு 32 நமக்கு அளித்துள்ள மிக முக்கிய உரிமை .

அப்பேற்பட்ட மிகச் சிறப்பு வாய்ந்த உச்ச நீதிமன்ற நீதிபதியே அவர் ஒரு பட்டியல் இனத்தைச் சார்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக செருப்பை வீசி அவமதித்தார்கள் .ஒரு உச்சநீதிமன்ற நீதிபதிக்கு இந்த நிலைமை என்றால் பாமர மக்களின் நிலை? இதையெல்லாம் அறிந்தும் நாட்டின் பிரதமர் மௌனம் காத்தது அதனிலும் கொடுமை .எட்டு நாட்கள் கழித்து தான் சம்பவத்தை பற்றி அறிக்கை விடுகிறார். தலைமை நீதிபதி மீது செருப்பை எரிந்தவன் சொல்கிறான், எனக்கு கடவுள் தான் இப்படி செய்ய சொல்லி ஆணையிட்டார். நான் வேண்டும் என்று தான் செய்தேன். நீதிபதி சனாதனத்தை எதிர்ப்பதால் கடவுள் அவரை செருப்பைக் கொண்டு அடி என ஆணையிட்டார் நான் அதை செய்து முடித்தேன் என்று உளறுகிறார் இந்த படித்த மாமனிதன்.

சனாதானத்தை எதிர்க்க வேண்டும் என்றால் சாதிகளை அழிக்க வேண்டும் அப்பொழுதுதான் நம் நாடு ஒரு ஜனநாயக நாடாக இருக்க முடியும் என்று கூறிய துணை முதலமைச்சர் தலைக்கு ஒரு கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று கூறுகிறார் ஒருவர்.ஆனால் அவர் மீது எந்த வழக்கோ சட்டமோ பாய்சவில்லை என்றால் இன்றைய அரசியல் சட்டம் யாருக்காக உள்ளது என்ற கேள்வி நம்முள் விழுகிறது.

பல ஆண்டு காலம் ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த நம் நாடு சுதந்திரம் அடைந்து இந்திய சோசலிச ஜனநாயக நாடாக மாறிய பின்பும் பேச்சுரிமை, எழுத்துரிமை, கேள்வி கேட்கும் உரிமை,சங்கம் அமைக்கும் உரிமை என அனைத்தும் நம்மிடமிருந்து பறிபோகும் நிலையில் உள்ளோம்.இதை எல்லாம் மீட்டெடுக்க அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டும்.

அரசியல் புரிதலை மாணவர்களுக்கு இடையில் வளர்க்க வேண்டிய சூழலில் நாம் உள்ளோம் என்பது தெரிகிறது .இப்புத்தகத்தை வாசிக்கும் போது அரசியல் மீதும் அரசியலமைப்பு மீதும் பல கேள்விகள் நம்முள் எழும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்பு விவரம்
நூலின் பெயர்: இந்திய அரசியலமைப்பு சட்டம் இன்று?
ஆசிரியர்: நீதிபதி கே.சந்துரு | எழுத்தாக்கம்: கமலாலயன்
வெளியீடு:
பாரதி புத்தகாலயம்
விலை: ₹.50
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 நளினி மூர்த்தி

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *