வாகை பூக்கள் மரத்தடி கரடி
தேநீர் கடையில்
நிற்பது போல்
குலை தள்ளிய
வாழை மரத்தடியில் நிற்கிறேன்
வாழை நாரில் செய்த
சணல் பையில்
சிறு பூக்களை பறித்து வருவது
போன்றது உன் முதும் அன்பு
காசு இல்லாதவன்
என பேசிய கடைக்காரனிடம்
உன் அன்பான சொற்களை
பேசினேன்
சில்லறை தேறியது கடையில்
சிகப்பு ஒயின் போல்
பூத்த வாகை பூக்கள் மரத்தடி
வாய் பேச தெரியா கரடி போல்
உன் முன் நிற்கிறேன்.
அமினா சேவல்கள்
காய்ந்து இருக்கும் இரவில்
கோழிக்குஞ்சுகள் சப்தம் போல் தோன்றுகிறது
நகைச்சுவை
கூண்டில் அடைய
இட வசதி இல்லாததால்
மரத்தில் அடைகின்றன
கோழிகள்
அவைகள்
தாராளமயத்தையும்
சகோதரத்துவம் சமத்துவத்தையும்
விரும்புகின்றன
தொடுதிரை பார்த்து
மனிதர்கள் போல்
கழுத்து வலிப்பதில்லை
இரை கொத்தும் கோழிகளுக்கு
நெருப்பு துண்டை கொத்துகின்றன
இளம் விடை சேவல்கள்
சேவலின் ஒலி வேலைப்பாடு
நுட்பமானது
காலை சூரியனுக்கு
முன் எழுந்து வாதாடுகின்றன
அமினா சேவல்கள்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

