க. புனிதனின் கவிதை *என் பழையதைத் திருப்பிக் கொடு*

K. Punithan Poetry En Pazhaiyathai Thiruppikkodu in Tamil Language. Book Day is Branch of Bharathi Puthakalayam.என் பழையதைத் திருப்பிக் கொடு
***************************************

என் பழையதைத் திருப்பிக் கொடு
வழியில் பார்த்த தவளை
எனைக் கேட்டது

சிங்கம் பிடரி போல்
சேவல் தலையும்

புலியைப் போல்
பூனையின் நடையும்

பூனையின் தலை அசைப்பாய்
செடியில் பூக்களும்

முள்ளங்கி போல்
முயல் உருவமும்

சூரியன் போல்
தோன்றும்
காய்ந்த வேடி பூக்களும்

சிட்டுக்குருவி ஒலி போல்
கவிஞனுக்குத் தோன்றும் கவிதையும்

மூங்கில் இலை மேல்
பனி துளிகள் போல் காமமும்

நான் தொலைத்த வடிவம் என்றேன் அதனிடம்.

…க. புனிதன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.