கவிதை புள்ளியிலிருந்து – க. புனிதன்கவிதையின் புள்ளியில் இருந்து
தாத்தா வானத்தில்
கொக்கு கூட்டம் பார்க்கும்
தருணம்
ஒரு எழுபது வயது நாகதாளி மரமும்
பார்க்கிறது
கவிதையின் புள்ளியில் இருந்து
ஒரு பாடல் அம்மாவை
பாடுகிறது
கவிதையின் புள்ளியில் இருந்து
ஒரு நாரை குளத்தில்
ஏற்படுத்திப் போன சலனம்

மாறாமல் இருக்கிறது
கவிதையின் புள்ளியில் இருந்து
கொய்யா கிளை போல்
வளைந்த குட்டி சைக்கிள்
மழலை தொட்டதும் பூ பூக்கிறது
கவிதையின் புள்ளியில் இருந்து
கோடை பூக்களில்
மழைக்கு பின் நிலாக்கள்
பூத்திருக்கிறது
கவிதையின் புள்ளியில் இருந்து
பழைய சாமான் போட்டிருக்கும்
வீட்டை கவிதையாக்குகிறது
பூனை

….க. புனிதன்

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)