தன்னிலை படரும் கொடி – க. புனிதன்தன்னிலை படரும் கொடி

மாமரத்தில் கட்டியிருந்த
ஜானி நாயை பார்த்து
சர்வேஷ் குட்டி கேட்டான்
மழை வந்தால் குளிர் வந்து
ஜானிக்கு காய்ச்சல் வந்திறாதா
அவனுக்குத் தன்னிலை உணர்வு சுரந்து
கண்கள் கலங்கி இருந்தன
தன்னிலை உணர்வைச் குறைக்க
மாத்திரை இருந்தால்
போட்டுக் கொள்ளச் சொல்வார்கள்
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம்
வாடியவனுக்கு எல்லாம்
மாத்திரை கிடையாது

…க. புனிதன்