கோடை தென்றலும் தள்ளாடும் சில பூக்களும் – க. புனிதன்கோடை தென்றலும் தள்ளாடும் சில பூக்களும்

பிச்சைக்காரனை போல்
போய் நிற்கிறேன்
நகைச்சுவை சொற்களாய்
நிரம்புகின்றன தட்டில்
ஏழை வீட்டில்
கோடையில் நின்று போன
மலை அருவியின் வற்றிய சொற்களோடு
வந்திருக்கும் ஏழை
நம்பிக்கை தரும் சில கடவு சொற்களால்
தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறான்
ஏதுமற்ற வெறுமையை
வாழ்வின் சொற்களால்
நிரப்பிக் கொள்கிறார்
முதியவர்

….க. புனிதன்