வெறுமனே இருத்தல்
விளையாட
குண்டு மணிகள் இருக்கின்றன.
அலங்காரத்திற்காக ரசிக்க
மயில் மாணிக்கம் செடி பூக்கள்
இருக்கின்றன.
காபி தூள் போட்டால்
ரோஜா செடி நன்றாக
வளரும் என்று தெரியும்.
வாழை நாரில்
உதிரிப் பூக்களை
வைத்துக் கட்டி வைத்தால்
இருந்தாலும் வெறுமனே இருக்கவே
பிடித்திருக்கிறது.
…க. புனிதன்

