ஒளிப் பேனாவால் கவிதை கற்றுக் கொள்பவன்
ரோஜா ரோஜா பாடலில்
ரோஜா தோட்டத்தின் பின்னணியில் தாஜ்மஹால் காணும் பொழுது
ஆக்ரா நதியில் மீன் பிடித்து
சுட்டுத் தின்பது போலத் தொன்மக் கனவு
தட்டான் தட்டான் வண்டி கட்டி பாடலில்
மழை பின்ணணியில்
சீமைக் கருவேல முள் மரக் கிளை மேல்
ஒன்றின் மேல் ஒன்றாக ஊரும்
சீமையெண்ணை வண்டுகளின் தொன்மம்
வெட்டி வேரு வாசம் பாடலில்
சிவாஜி காப்பு காய்த்த கையை
ராதா எண்ணெய் தொட்டு வருடும்
மயில் இறகின் தொன்மம்
பாடல்கள் தொன்மங்களாகவும்
சூரியன் எழும் இசையும்
குளம் அமைதியாகவும்
சேவல் பின்ணணியில்
ஒளி விளையாட்டாகவும்
கவிதை பிரதி எடுத்தலாகவும்
கிராமத்து அப்பாவி இளைஞர் கையில்
புல்லாங்குழலாகவும்
தானியங்கள் பின்னணியில் ஒளியைக்
கொத்தும் பறவையாகவும்
அறுந்த செருப்பு அணிந்த
பயணியாகவும்
படிமங்கள் ஒளிப் படங்களாகவும்
வா தாஜ் என்று தேநீர் கவிதையாகவும்
பஞ்சர் ஆன மகிழ்வுந்து சக்கரத்தை
மாற்றும் இளம் பெண்
அப்பாவை பார்த்துச் சொல்வதாகவும்
காசு இல்லப்பா என திருநங்கையைத்
தொட்டு ஆசீர்வாதம் செய்யும்
முதியவளாகவும்
குறியீடுகள் விளம்பரப் படங்களாகவும்
ஒளிப் பேனாவால் கவிதை கற்று கொள்பவன் நான்
…க. புனிதன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

