சாம்பல் நோய் – க. புனிதன்சாம்பல் நோய்

ஐந்தாயிர வருட
பழைமையான விவசாயி நான்
அதற்கு பிறகு
வந்த உங்கள் கடவுள் வழிபாட்டை தொன்மை என்கிறீர்கள் நீங்கள்
கட்டிவைத்த மாட்டை
வைக்கோல் குளிர்ந்த தவிடும் பொட்டும்
கொடுத்து வளர்க்கும் விவசாயி நான்
நீங்கள் அதை புராதன வழிபாடு
பொருள் ஆக்கிவிட்டீர்கள்
தெய்வம் எனும் பெயரில்
ஒற்றை பொம்மையை வைத்து கொண்டு
உருகி பாடும் கதாநாயகனை கொண்டு
உங்கள் மத வழிபாட்டை
வளர்த்து கொண்டவர் நீங்கள்
அவரை கொடி இலை நோய்க்கு
சாம்பல் அடித்து கொண்டிருந்தோம்
அப்போது நாங்கள்

….க .புனிதன்