இந்திய தாவர இயல் நிபுணர் (Indian Botanist) கே.எஸ் மணிலால் (K.S Manilal) - தாவர அறிவியல் ஆராய்ச்சி - பூக்கும் தாவரங்கள் - https://bookday.in/

உலகம் போற்றும் இந்திய தாவரவியல் நிபுணர் கே.எஸ் மணிலால் (K.S Manilal)

உலகம் போற்றும் இந்திய தாவரவியல் நிபுணர் கே.எஸ் மணிலால் (K.S Manilal)

தொடர் : 46 இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100

கட்டுங்கால் சுப்ரமணியம் மணிலால் கேலிகட் பல்கலைக்கழகத்தின் எமரிட்டஸ் பேராசிரியராக, தாவரவியல் அறிஞராக, தாவர வகைப் பிரித்தல் நிபுணராக உலகெங்கும் அறியப்பட்ட இந்திய விஞ்ஞானி ஆவார். நம்முடைய காலத்திலும் ஒரு இந்தியர் லண்டன் ராயல் சொஸைட்டியில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட முடியும் என நிரூபித்து காட்டியவர். தன் வாழ்க்கையில் 35 ஆண்டுகள் கடுமையான தாவரவியல் கண்டுபிடிப்பாளராக வாழ்நாளை கழிப்பவர் அறிஞர் கே.எஸ் மணிலால் (K.S Manilal).

மலபார் பிரதேசத்தைச் சேர்ந்த தாவரவியல் தகவல்களின் முதல் களஞ்சியமாகிய லத்தின் மொழியில் வெளிவந்த HORTUS MALABARICUS 1676 ஆண்டு பழமையான புத்தகத்தை நம் இந்திய மொழிகளுக்கு கொண்டு வந்தவர். பேராசிரியர் கே.எஸ் மணிலால் (K.S Manilal) ஆவார். இந்த புத்தகம் அருள் தந்தை மேத்யூஸ் என்பவரால் எழுதப்பட்டது. இந்த நூல் தாவரவியலுக்கு பெயரிட்டு அதில் பெரும் பங்களிப்பை செய்த லீனஸ்-க்கு முற்பட்ட நூலாகும். அருட்தந்தை மேத்யூஸ் இறந்த பிறகு இந்த புத்தகத்தை வெளியிட்டார்கள். இந்தியாவிற்கு வருகை தந்த அருட்தந்தை அப்போது மலபார் பகுதியில் டச்சு ஆளுநராக இருந்த என்ரிக் வான் ரீட் என்பவரின் உதவியோடு இந்த பகுதியில் முற்றிலும் சுற்றி திரிந்து இந்த பகுதியில் இருக்கும் அனைத்து தாவரங்களிலும் ஒவ்வொன்றை எடுத்துச் சென்று வகைப்பாட்டிற்கு உட்படுத்தி இந்த தாவரங்களுக்கு பெயரிட்டார் என்று வரலாறு சொல்கின்றது.

இந்திய தாவர இயல் நிபுணர் (Indian Botanist) கே.எஸ் மணிலால் (K.S Manilal) - தாவர அறிவியல் ஆராய்ச்சி - பூக்கும் தாவரங்கள் - https://bookday.in/

இந்திய தாவர இயல் நிபுணர் (Indian Botanist) கே.எஸ் மணிலால் (K.S Manilal) - தாவர அறிவியல் ஆராய்ச்சி - பூக்கும் தாவரங்கள் - https://bookday.in/

ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு இந்த நூல் முடக்கப்பட்டது.. இந்த நூலை நம்முடைய தாவரவியல் அறிஞர் மணிலால் முதலில் ஆங்கிலத்தில் 2003 ஆண்டு வெளியிட்டார். இந்த ஒரு புத்தகம் மேற்கு தொடர்ச்சி மலைக்கு தெற்கு மலபார் கடற்கரை முழுவதும் பல்லாயிரக்கணக்கான தாவரங்களின் பெயர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. இந்தப் பட்டியலில் ஏறத்தாழ 617 மூலிகை தாவரங்களின் பெயர்கள் அடக்கம். இந்த அரிய நூல் இன்றைக்கு உலகங்களும் பாட நூலாகப் போற்றப்படுகிறது. மணிலால் அதன் பிறகு 16 வகையான பூக்கும் தாவரங்களை அறிவியலுக்கு அறிமுகம் செய்தார். இந்த வகை தாவரங்கள் இவற்றில் பல நேர்த்தியான அபூர்வமான பண்புகளை வெளிக்கொண்டு வந்து இந்த பூக்கும் தாவரங்கள் மொட்டாகவும் பிறகு மலர்கின்ற விதமாவும் பிறகு காய்ந்து சருகாகும் விதமாகவும் ஒவ்வொரு படிநிலையிலும் ஒவ்வொரு வகை மருந்தாக பயன்படுவதை அவர் பட்டியலிட்டு இருக்கிறார். இந்த பூக்கும் தாவரங்கள் குறித்த அவருடைய மிக முக்கியமான கோட்பாடு தனியே ஆஞ்சியோ ஃபார் மீ என்கின்ற வகைப்பாட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. பறந்த இலைகள் கொண்ட மரங்கள் புதர்கள் மற்றும் கொடிகள் இதைத் தவிர நீர்வாழ் தாவரங்கள் ஆகியவற்றினுடைய பூக்கும் தன்மைகளை இந்தியாவினுடைய தாவர இயல் அம்சங்களோடு ஆராய்ந்து ஏறத்தால 198 ஆய்வுக் கட்டுரைகளை அவர் வெளியிட்டிருக்கிறார்.

உலகெங்கும் 16 குடும்பங்களாக இந்த பூக்கும் தாவரங்கள் அறியப்படுகின்றன பதின்மூன்றாயிரம் அறியப்பட்ட இனங்களோடு மணிலால் 1300 தான் கண்டுபிடித்த இனங்களை இணைத்து இருக்கிறார் என்றால் இவருடைய உழைப்பு நாம் புரிந்துகொள்ள முடியும். மணிலால் தன்னுடைய வாழ்க்கையில் இரண்டு முக்கிய ஆராய்ச்சி திட்டங்களின் கீழ் பணியாற்றினார். ஒன்று ஸ்மித் சோனியா நிறுவனத்தின் க்கு வழங்கப்பட்டது. இரண்டாவது நம்முடைய நாட்டின் பல்கலைக்கழக மானிய குழுவால் முன்வைக்கப்பட்ட மாதிரிகளை சேகரிக்கும் விரிவான திட்டம். இந்த இரண்டு ஆய்வுகளையும் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து.. அவர் ஆய்வகத்தில் மற்றும் வன பகுதிகளில் பல மணி நேரங்களை செலவிட்டு தீவிர உழைப்பின் மூலம் உள்ளூர் பெயர்களை தாவரவியல் பெயர்களோடு ஒப்பிடுகின்ற ஒப்பற்ற பணியை நிறைவு செய்தார்.

அறிஞர் கே.எஸ் மணிலால் (K.S Manilal) கேரளாவில் வகைப் பிரித்தல் தாவரவியல் ஆராய்ச்சி மற்றும் பல்லுயிர் ஆய்வுகளுக்கு முன்னோடியாக விளங்கியவர். கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் மேற்கு பகுதிகளை உள்ளடக்கிய 600 கிலோ மீட்டர் பரப்பளவை விரிவாக ஆய்வுக்கு உட்படுத்தி 1975 ஆம் ஆண்டு சுமார் 1000 வகையான பூக்கும் தாவரங்களை பதிவு செய்தார். இதில் இந்தியாவில் முதல்முறையாக பதிவு செய்யப்பட்ட பல இனங்கள் மற்றும் முக்கியமான அறிவியலுக்கே புதிய 7 இனங்கள் அடங்கும். இந்த தன் பணிகளின் அடிப்படையில் ஃப்லோரா ஆஃப் கேலிகட் என்கிற நூலை டேராடூனில் இருந்து அவர் வெளியிட்டார்.

இந்திய தாவர இயல் நிபுணர் (Indian Botanist) கே.எஸ் மணிலால் (K.S Manilal) - தாவர அறிவியல் ஆராய்ச்சி - பூக்கும் தாவரங்கள் - https://bookday.in/
அறிஞர் கே.எஸ் மணிலால் (K.S Manilal)

1970களில் அமைதிப்பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகின்ற வனப்பகுதியில் ஒரு நீர் மின்சார திட்டத்தை கட்டுவதற்கான முன்மொழிவை மத்திய அரசு மேற்கொண்ட பொழுது அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பேரழிவை சுட்டிக்காட்டி அதற்கான பிரம்மாண்ட போராட்டத்தில் இறங்கியவர்களில் மணிலாலும் ஒருவர். கேரள அரசு அப்போது அமைதிப் பள்ளத்தாக்கில் உள்ள தாவரங்களைப் பற்றி ஆய்வு செய்யவும் கண்டுபிடித்து அறிக்கை வெளியிடவும் ஒரு நிபுணர் குழுவை நியமித்தது. அமைதிப் பள்ளத்தாக்கில் உள்ள விலங்கினங்கள் பசுமை மாறா மழைக்காடுகள் இன்று அவற்றை வகைப்படுத்த முடியாது என்கின்ற சர்ச்சைகளுக்கு எதிராக 240 வகையான பூக்கும் தாவரங்களையும் ஏறக்குறைய 1000 வகையான அடிப்படை விலங்குகளும் அங்கு மட்டுமே காணப்பட முடியும் என்கின்ற ஆய்வறிக்கையை வெளியிட்டு சுற்றுசூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பை மீறி மத்திய அரசு செயல்பட முடியாது என்பதை எடுத்துச்சொல்லி அமைதிப் பள்ளத்தாக்கை காப்பாற்றிய அறிவியல் அறிஞர்களில் பேராசிரியர் மணிலாலும் ஒருவர்.

இலங்கை, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் மட்டுமே காணப்படுவதாக நம்பப்படுகின்ற பல தாவரங்கள் நீலகிரி என்கின்ற தமிழகத்தின் பகுதியில் முற்றிலும் இருந்து அழிந்துவிட்டதாக நம்பபட்டதற்கு எதிராக இந்த பகுதிகளில் மணிலாலின் தீவிர ஆய்வின் கீழ் 17 வகையான பூக்கும் தாவரங்கள் கண்டறியப்பட்டு பெருமை சேர்த்தன.

இந்திய தாவர இயல் நிபுணர் (Indian Botanist) கே.எஸ் மணிலால் (K.S Manilal) - தாவர அறிவியல் ஆராய்ச்சி - பூக்கும் தாவரங்கள் - https://bookday.in/
Silent Valley National Park (Kerala) – அமைதிப்பள்ளத்தாக்கு

மணிலால் பூக்களின் பரிணாம வளர்ச்சியின் அறிவியலை தன் கையில் எடுத்தார். பரிணாமவியலில் பூக்களின் தோற்றம் மற்றும் அதனுடைய வடிவம் எவ்வாறு கட்டமைக்கப்பட்டது. தென்னை அரிசி போன்ற பொருட்கள் ,சூரியகாந்தி பூக்கள் போன்ற மலர்கள், காபி கொட்டைகள் போன்ற ரூபியால் தாவரங்கள் பணப் பயிர்கள் பருப்பு வகைகள் வனப்பகுதிகளிலிருந்து மனிதரின் பயன்பாட்டு பகுதிக்குள் எப்படி நுழைந்தன என்பதற்கான சமூக பரிணாமவியல் அறிவியல் ஆய்வை முதல் முறையாக செய்து தன்னுடைய ஆய்வின் முடிவுகளை வெளியிட்டு சமூக விஞ்ஞானியாகவும் தன்னை நிலைப்படுத்திக் கொண்டார் பேராசிரியர் கே.எஸ் மணிலால் (K.S Manilal).

நாகர்கோவில் என்கிற தமிழகத்தின் பகுதியில் இவர் செய்த ஒரு ஆராய்ச்சி நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தெற்கு கேரளாவில் உள்ள கொல்லம் பகுதியிலும் கதிரியக்க தாதுக்கள் அதிகம் உள்ளன குறிப்பாக தோரியம் என்கிற ஒரு கதிரியக்க தாதுப்பொருள் அங்கு தோண்டி எடுக்கப்பட முடிந்த அளவிற்கு அதிகம் கிடைக்கிறது.ஆனால் இங்கே ஒரு அதிசயம் உள்ளது. விலங்கினங்களுக்கு மரபணு சேதம் இதனால் ஏற்படுகிறது என்று ஓரளவிற்கு தீர்மானித்த மணிலால் சூழலியல் துறையில் ஆராய்ச்சி நுட்பங்களை அறிந்து கொண்டு ஆய்வுகளை மேற்கொண்டார். இந்த ஆய்வுகள் நார்த் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் கடல் உயிரியல் ஆய்வகத்தில் அவரை கொண்டு போய் சேர்த்தன. லண்டன் ராயல் சொசைட்டி மணிலாளுக்கு இந்த பணிக்காக இரண்டு ஆண்டுகளுக்கு வருகை தரும் விஞ்ஞானி என்று சொல்லி ஒரு கப்பலையும் வழங்கியது!

இந்திய தாவர இயல் நிபுணர் (Indian Botanist) கே.எஸ் மணிலால் (K.S Manilal) - தாவர அறிவியல் ஆராய்ச்சி - பூக்கும் தாவரங்கள் - https://bookday.in/

இரண்டு வகையான கடல் பைட்டோ பிளாக் நிக் பாசிகள் கே.எஸ் மணிலால் (K.S Manilal) அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த பாசிகளில் கதிரியக்கத்தை தாங்குகின்ற சக்தி இருப்பதை அவர் பார்த்தார். இந்த இனங்கள் சுற்றியுள்ள கடல் நீரிலிருந்து கதிரியக்க தோரியம் சேர்மங்களை தங்கள் உடல் எடையை விட 40 மடங்கு அதிகமாக உறிஞ்சி தன்னகத்தே தக்க வைத்துக் கொண்டுள்ளதை அவர் கண்டுபிடித்தார். எனவே இந்த பாசிகளை அந்த பகுதியில் அதிகமாக வளர்த்து கைப்பற்றினால் அவைகளில் இருந்து தோரியம் என்கிற தாதுவை நாம் சுலபமாக எடுத்துவிட முடியும் என்பதுதான் அவருடைய அற்புத கண்டுபிடிப்பாகும்.

தன்னுடைய ஆய்வுக் கட்டுரைகளை அவர் அயல்நாடுகளில் வெளியிடாமல் இந்திய அறிவியல் அகாடமின் இதழ்களில் மட்டுமே பத்தாண்டுகளுக்கும் மேலாக வெளியிட்டு பிற நாட்டு விஞ்ஞானிகள் நம் நாட்டின் அறிவியல் ஆய்வு இதழ்களை படிக்க செய்தவர் என்பது மிக சிறப்பான ஒரு விஷயம் ஆகும்.

பேராசிரியர் கே.எஸ் மணிலால் (K.S Manilal) 1938 இல் செப்டம்பர் 17 அன்று கேரளத்தின் கொச்சின் பகுதியில் பிறந்தவர். அவர் சாகர் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பட் டத்தை தாவரவியலில் வென்றார்.. தனது முனைவர் பட்ட ஆய்வையும் அதே சாகர் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து சாதித்து காட்டியவர். அவர் தன்னுடைய கிராமத்தில் டாக்டர் ஹரிசிங் கௌர் விஷ்வா வித்யாலயா என்னும் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு சாகர் பல்கலைக்கழகத்திற்கு ஒரு அங்கமாக விளங்கும் மகாராஜா கல்லூரியில் தன்னுடைய மேற்படிப்புகளை அவர் எடுத்துச் சென்றார். அவருடைய அர்ப்பணிப்பை பாராட்டி ஆர்டர் ஆஃப் ஆரஞ்சு என்கின்ற மகாராணி விருதை நெதர்லாந்து அரசு அவருக்கு வழங்கியது. இந்திய அரசு அவருக்கு 2020 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுரையாளர் :

 உலகம் அறிந்த இந்திய கோட்பாட்டு இயற்பியலாளர் சுராஜித் சென் | World renowned Indian theoretical physicist Subhrajit Sen - https://bookday.in/
ஆயிஷா இரா. நடராசன்

 

 

 

 

 

 

 

 

 

தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: உலகம் அறிந்த இந்திய கோட்பாட்டு இயற்பியலாளர் சூரஜித் சென்

ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *