விற்பனைப் பொருள்
*****************************
விற்பனைப் பிரிவின் பெண்கள் பகுதியில்
கால்கடுக்க நின்றபடி
வாடிக்கையாளர்களின் எண்ணங்களுக்கேற்ப
விரித்துப் போடுகிறாள்
பலவித ஆடைகளை.
நிறங்களில் திருப்தியுறாமலும் வடிவங்களில் விருப்பமற்றும்
விலைப் பட்டியலில் மனமற்றும்
ஓயாது அலையும் காற்றின்
தேடலைப் போல
அலையும் விழிகளை அமைதிப்படுத்த
நெடுநேரமாய் முயற்சிக்கும்
இளம்பெண்ணின் தேகத்தில்
வழியும் வேதனைக் குருதியை
என்ன செய்து மறைக்கப் போகிறாள்.
விரித்துப் போடுகிறாள்
பலவித ஆடைகளை.
நிறங்களில் திருப்தியுறாமலும் வடிவங்களில் விருப்பமற்றும்
விலைப் பட்டியலில் மனமற்றும்
ஓயாது அலையும் காற்றின்
தேடலைப் போல
அலையும் விழிகளை அமைதிப்படுத்த
நெடுநேரமாய் முயற்சிக்கும்
இளம்பெண்ணின் தேகத்தில்
வழியும் வேதனைக் குருதியை
என்ன செய்து மறைக்கப் போகிறாள்.
திரை
********
ரகசியங்களால் ஆனவனை
உன் மௌனத்தைக் கொண்டு
கலைக்கப் பார்க்கிறாய்.
காலடி தீண்டாத தெருக்களுக்குள்
உன் மௌனத்தைக் கொண்டு
கலைக்கப் பார்க்கிறாய்.
காலடி தீண்டாத தெருக்களுக்குள்
நுழையப் பார்க்கும் என் அத்துமீறலை
உனது புன்னகை கொண்டு ஆற்றுப்படுத்துகிறாய்.
சமூகப் புறக்கணிப்பில்
பீறிட்டெழும் எரிமலையென
அடங்கிக் கிடக்கும் என் அவாக்களை உனது மடியேந்தி
மழலையாக்கிவிடுகிறாய்.
என்னிடமிருந்து தாங்கிக் கொண்ட
எல்லா அழுத்தங்களையும்
என்ன செய்கிறாய்
எதுவுமே நிகழாதென்ற
முகக்குறிப்போடு.
உனது புன்னகை கொண்டு ஆற்றுப்படுத்துகிறாய்.
சமூகப் புறக்கணிப்பில்
பீறிட்டெழும் எரிமலையென
அடங்கிக் கிடக்கும் என் அவாக்களை உனது மடியேந்தி
மழலையாக்கிவிடுகிறாய்.
என்னிடமிருந்து தாங்கிக் கொண்ட
எல்லா அழுத்தங்களையும்
என்ன செய்கிறாய்
எதுவுமே நிகழாதென்ற
முகக்குறிப்போடு.
இளையவன் சிவா
மடத்துக்குளம்

