நூல் அறிமுகம்: க.நா.சுப்ரமண்யமின் *வாழ்ந்தவர் கெட்டால் (புதினம்)* – சுமா ஜெயசீலன்வாழ்ந்தவர் கெட்டால் (புதினம்)
க.நா.சுப்ரமண்யம்

போதிய அளவு படிக்காவிட்டாலும், சொத்து சுகம் சேர்க்கவும் அதைப் பெருக்கவும் சிலருக்குத் தெரியும் அப்படி ஒருவர். ஒரு தலைமுறை தழைத்தோங்கினாலும் அடுத்த தலைமுறை தடம் புரள்வதை கிராமங்களில் பெரும்பாலும் பார்த்திருப்போம்.. அப்படியான வாரிசு.

“ஆடம்பரமாகப் பெரிய மனிதர்கள் மாதிரி வாழப் பழகி விட்டார்கள். அப்பழக்கத்தை மறப்பதோ மீளுவதோ சிரமம் என்றுதான் சொல்லவேண்டும். நாம் சிறு வயதில் பணக் காரர்களாக இருந்து விட்டு வாலிபப் பருவத்தில் திடீரென்று ஒருநாள் ஏழைகளாகி விட்டால் சமாளித்துக் கொள்வதென்பது மிகவும் சிரமமான காரியம்தான். இப்படிப் பட்டவர்களில் நூற்றில் ஒருவர் இருவர் சமாளித்துக் கொண்டால் ஜாஸ்தி. அந்த ஒருவர் இருவர் சிரமப்பட்டுச் சமாளித்துக் கொள்வார்களே தவிர அதற்கு மேல் எதுவும் செய்யச் சக்தியற்றுப் போய்விடுவார்கள். அவர்களால் சாதாரண மனிதர்களாக வாழ்வதென்பது இயலாமலே போய்விடும்.”
வாழ்ந்து தடுமாறுகிறவர்களை புறக்கணித்து நடக்கும் சமூகம்.

என் மனதைக் கவர்ந்தவர் மணி, ரகுவின் நண்பர். என்னே ஒரு தெளிந்த பார்வை. உளவியலில் Mindfulness என்போமே அப்படியான தெளிவு.
ரகுவுடன் கலந்துரையாடி நடக்கும் போது படியில் இடறி வலியில் துடிக்கிறார் மணி. ரகு அதையும் அதன் தத்துவ விளக்கத்தில் சேர்த்து பேசும்போது மணிக்கு கோபம் வருகிறது. ஆனாலும், “கால் வலித்ததுதான் காரணமோ என்னவோ, எனக்கு ஒரு நிமிஷம் அவனிடம் கோபமே வந்துவிடும் போல் இருந்தது. கோபத்தைச் சற்று சிரமப்பட்டுத்தான் அடக்கிக் கொண்டேன். மறு விநாடி சிரித்தேன். ரகுவும் என்னுடன் சிரித்தான்.” என்கிறார்.

மற்றோர் இடத்தில்., ….நண்பனுக்கு பிடிக்காதவருடன் மணி பேசுகிறார். தெரிந்தால் நண்பன் நம்மை வெறுப்பானே என நினைக்கிறார், தான் தவறு செய்யவில்லையே என மனம் நியாயப் படுத்துகிறது. இருப்பினும்..

“ உண்மைதான்….தேடிப் போக வில்லை… மர்மம் ஏதாவது உண்டானால் அதை அறிந்துகொண்டுவிட இதுவே தக்க தருணம் என்று நான் எண்ணியது உண்மைதானே! அவருடன் சாமர்த்தியமாகப் பேச்சுக் கொடுத்து விஷயத்தைக் கிரகிக்க வேண்டும் என்று நான் எண்ணியது உண்டுதான். உண்மை தான்.” என ஏற்றுக்கொள்கிறார். இன்னும் நிறைய…

“காரணமற்ற கோபத்திற்கு தானே ஆழமும் அழுத்தமும் அதிகமாக உண்டு”