க. பாண்டிச்செல்வியின் முன்று கவிதைகள்

Ka. PandiSelvi Three Poems in Tamil Language. This Poems About Women Centric. Book day website is Branch of Bharathi Puthakalayamஎதிர் பார்ப்பு

கடவுளுக்கு,
காணிக்கை.

குருவிற்கு
தட்சணை.

காதலனுக்கு
முத்தம்.

கணவனுக்கு
வரதட்சணை.

மனைவிக்கு
சம்பாத்தியம்.

பிள்ளைகளுக்கு
ஆஸ்தி.

பெற்றோர்க்கு
அடைக்கலம்.

உறவினர்க்கு
உபசரிப்பு

தோழனுக்கு
தோள் கொடுப்பது.

இப்படி
ஏதாவது ஒன்றைக் கொடுத்துத்தான்
அன்பை
நிரூபித்துக் கொள்ள வேண்டியிருக்கு!.2
கூடுகளுக்கும்
கூடாரத்திற்கும்,
அர்ப்பணிக்கும் வாழ்வு
அற்புதமானது !

அலாரம் வைத்தது யார்?
அதி காலை கண் விழிக்க,
அந்திப் பொழுதில
கூடு அடைய
பறவைகளுக்கு!.

அஞ்சு ரூபா
பொம்மையில்
அழகாக மிளிர்கிறது
குழந்தையின் புன்னகை

குலுக்கிப் போட்ட
சோவியின் ஓசைகள்
எம் தெருக்களில்..
பள்ளி விடுமுறையில்.!

‌‌‌தவறி விழுந்த
நட்சத்திரங்கள்
தந்தை ஊட்டிய
சாதப் பறுக்கைகள்!ஆணவக்கொலை

தண்டவாளத்தைப் போல
தனித்தனியாக இருப்பதே
தேவலாம்!

தோல்வியுற்ற காதல்
பயிற்றுவிக்கிறது,
வெள்ளந்தி உள்ளத்தில்
சாதியின் கள்ளத்தனத்தை,

அவள் அள்ளித்தந்த,
அன்புப் பரிசை,
மதச்சாயத்தில் மூழ்கடித்தது.

நான் தந்த
நினைவு பொருட்களைக்
கண்முன்
கௌரவத் தீயில்
கொளுத்துகிறது.

பொசுக்குவதும்,
புதைப்பதும்,
உடலையும்,
உபயோகமற்ற பொருளையும்.

ஒருவருக்கொருவர்,
அள்ளித்தந்த காதலையும்,
அன்பின் ஆரத்தழுவலில்
அளவிட முடியாத
உணர்வுகளில்
பூத்துக் குலுங்கிய
நினைவுகளை கொளுத்த
ஏது நெருப்பு ?
எண்ணங்களைப் புதைத்திட
எங்கே பாதாளம். ! ?

க. பாண்டிச்செல்விஇப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.