க. பாண்டிச்செல்வி கவிதைகள் (நாற்று, வளையம்)

Ka. PandiSelvi Two Poems in Tamil Language. This Poems About Women Centric. Book day website is Branch of Bharathi Puthakalayamநாற்று

நடுகையில்
பச்சையாய்,
அறுவடையில்,
பொன்னிறமாய்
அரைத்து எடுக்கையில்
உமியென ஊதித் தள்ளுகிறாய்
கனமற்ற என்னை!வளையம்

சட்டகத்திற்குள் இருத்தல்
சட்டமன்று ,
வளையல் மாட்டி
வளையத்திற்குள் பூட்டி
அழகுபார்ப்பது
அவர்களின் பாதுகாப்பு வளையம் கருதி ,.
யோசி ,
தாமதிக்காதே..
அடித்து நொறுக்கு .,
அதில் வளையல் உடையலாம் .!
காயம்படலாம்..
வளையங்களின் ரணங்களைவிட
வளையல்களின் கீரல்
எவ்வளவோ தேவலாம் !..

க. பாண்டிச்செல்வி

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.