இசைப்பாட்டு : காலம் நம் கையில்தானே
காலம் நம் கையில்தானே – காரல்
மார்க்ஸ் வழி பயணித்தால் தானே…(காலம்)
உலகில் தத்துவங்கள் பலவும் – கண்முன்
தோற்று நிற்கும் நிஜம் அறிவோம்
மார்க்சியத் தத்துவம் ஒன்றே – உலகில்
மாற்றத்தைக் கொண்டு வரும் நன்றே
தாதையத் தாதையத் தைய தரிகிடதத்தோம் தரிகிடதத்தோம்..(காலம்)
உலகின் நெருக்கடிகள் ஏனோ?-
உழைக்கும்
வர்க்கச் சுரண்டல் தானே!
தழைக்கும் கார்ப்பரேட் சார்பு
இழைக்கும் கொடுமைகள் நேர்வு
தாதையத் தாதையத் தைய
தரிகிடதத்தோம் தரிகிடதத்தோம்…(காலம்)
வாட்டிகன் போப் ஜான் பாலும்
நாட்டின் பொருளியல் மேதைகளும்
மார்க்சியம் படிக்கச் சொன்னார்
அது ஒன்றுதான் தீர்வுதரும் என்றார்
தாதையத் தாதையத் தைய
தரிகிடதத்தோம் தரிகிடதத்தோம்…(காலம்)
உபரி உழைப்புத் திருடர்கள்
உலகின் பெருமுதலாளிகள்
அவரே ஆள்வோரின் கூட்டு
உழைக்கும் மக்களுக்கு வேட்டு
தாதையத் தாதையத் தைய
தரிகிடதத்தோம் தரிகிடதத்தோம்…(காலம்)
வறுமைப் பிடியில் விடுவிக்க
வர்க்க அணிதிரட்சி அவசியம்
வறுமைப் பிடிக்குள்ளே உழன்று -மார்க்ஸ்
அருமை தத்துவம் கண்டார்
தாதையத் தாதையத் தைய
தரிகிடதத்தோம் தரிகிடதத்தோம்
(காலம்)
யானை தன் பலத்தை அறியா
உழைக்கும் வர்க்கமும் தெரியா
விவசாயி தொழிலாளி இணைந்தால்-
புரட்சி
வெற்றிக்கனி பறிக்கும் நிச்சயம்
தாதையத் தாதையத் தைய
தரிகிடதத்தோம் தரிகிடதத்தோம்…(காலம்)
எழுதியவர் :

பெரணமல்லூர் சேகரன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

