அ.உமர் பாரூக் எழுதிய "காலத்தின் வரைபடம்" கவிதை | சிறந்த கவிதைகள் தொகுப்பு | Kaalathin Varaipadam – A. Umar Farooq | Tamil Motivational Poem | www.bookday.in

கவிதை:- காலத்தின் வரைபடம் – அ.உமர் பாரூக்

“காலத்தின் வரைபடம்” கவிதை

******************************************

நமது
சோம்பேறித்தனம் கண்டுபிடித்த
ஆகச் சிறந்த பொய்
‘அப்புறம் செய்கிறேன்’
என்பது.

அலமாரியில்
அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்
வாசிக்கப்படாத புத்தகங்களைப் போல,
தள்ளிப் போடப்படும்
செயல்கள்
மனதின் சுமைகளாய்
உறைந்து விடுன்றன.

காலமெனும்
முடிவுறாத நதியில்
பயணம் செய்ய விரும்புவர்கள்
கரைகளை
கடப்பதற்கான இடமாகவே
பயன்படுத்துகிறார்கள்…
பார்வையாளர்களுக்கு
அதுவே
நின்று வேரூன்றும்
இடமாக மாறிவிடுகிறது.

ஆயிரம் சொற்களைக் கொண்டு
கோபுரத்தை
உருவாக்கி விட முடியாது.
ஒரே
ஒரு கல்லோடு
தொடங்குவது கூட,
உச்சத்திற்கான பயணமே.

அடுத்த வேளைக்காக
அடுத்த நாளுக்காக
அடுத்தடுத்த காலத்திற்காக
செயல்களை
காக்க வைப்பவர்கள்
காத்திருத்தலுக்குள்
சமைந்து போகிறார்கள்…

அவர்கள்
செயல்கள் முழுமையடைவதில்லை.
இன்னொரு
நிறைவில்லாத நாளை
தமக்காக
அவர்களே
உருவாக்கிக் கொள்கிறார்கள்.

******************************************

📚 எழுதியவர் : 

✍🏻 – அ.உமர் பாரூக்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Show 2 Comments

2 Comments

  1. Alagar Samy

    அருமை தோழா ..தொடருங்கள்

  2. அ.கார்த்திகேயன், மதுரை

    அப்புறம் செய்கிறேன் என்று கூறாமல் விரைவில் ஒரு கவிதைத் தொகுப்பை வழங்குங்கள் தோழர்

    அருமை வாழ்த்துகள்

    மகிழ்வும் நிறைவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *