அமரர் ஜெயந்தனின் சிறுகதைகளில் சிறிய விசயங்களே சமூகவியல் விஸ்வரூபங்களாகும. அவரின் மகன் சீராளன் ஜெயந்தன் சிறுகதைகள் அவரின் நுணுக்கத்தன்மையுடன் இணைந்துள்ளது அவரின் குறிப்பிடத்தக்கதான சிறுகதைப் பாணியாக  இருக்கிறது.

 ஒரு ரூபாயும்  குறும்ம்படமும் கதையில் சில்லறைபிரச்சினை தரும் மன உளச்சல்..  ஒரு திருடனும் ஒரு நாட்டாம்மையும் கதையில் ஒரு திருட்டு சம்பந்தமான விசரணை. இக்கதையில் வேதாளம் போன்ற கதாபாத்திரங்கள் மூலம் நடக்கும் வெளிவிசாரணை ஜெயந்தனின லாஜிக்கான விசாரணைகளை, பரிசீலனைகளை ஞாபகப்படுத்துகிறது.

வீடு திரும்புதலில் ஒரு சாவு சடங்குகளும் அதன் இறுதியில் இன்னொரு சாவு செய்தி வந்தடைவதும்  அதனால் அலுவலகச் சூழலில் தன்னை பொருத்திக்கொள்ள முடியாத மன அவஸ்தையும் வெளிப்பட்டிருக்கிறது. காரசேவு வாங்க ஆசைப்படும் ஒரு சிறுவனின் தத்தளிப்பு குடும்பச்சூழலில்பல்வேறு மடிப்புகளில் விழுந்துள்ளது. உறவினர் வீட்டு சாப்பாடிற்கு சென்று காயம் பட்டதைச் சொல்கிறது இன்னொரு கதை..

மின்னம்பலம்:ஜெயந்தன் படைப்பிலக்கிய ...
சீராளன் ஜெயந்தன்

மேரியோவில் குழந்தைக்கு கதை சொல்லி சாப்பாடு ஊட்டும் அனுபவத்தோடே தகப்பனின் சிறு வயது ஞாபகங்கள் ஊடாடுகினறன. நகரத்தின் புது வகையிலான உடல் சார்ந்த காதலையும் ஒரு கதை பரிசீலிக்கிறது. நகர வாழ்க்கையில் ஒரு திருடன் அகப்பட அதை தட்டிக்கேட்கும் ஒருவர் பழைய காவல் அதிகாரியாக இருந்தாலும்  செவாணியாகமல் போகும் துயரம் வெளிப்படுகிறது.

 ஓவியம் வரையும் அனுபவத்தோடே சில மன அவஸ்தைகளும்  எரிச்சல் கதையில் உள்ளது. சீராளனுக்கு அறிவியல் புனைகதையில் அக்கறை இருப்பதை பகல் நிலம் சொல்கிறது.அணுசக்தி வேண்டாம் என்ற மக்களின் கதறல்,இரவு பகல் அற்றுப்போய் விட்ட் உலகத்தில் நிய்யூட்டனும் அகத்தியனும் கதாபாத்திரங்களாகி சுவாரஸ்யமூட்டுகிறார்கள் இவ்வகைக்கதைகளில் இருக்கும் சீராளனின் ஆர்வம் இன்னும் விஸ்வரூபிக்கவேண்டும்.ஓவியனாக சிலருக்கு அறிமுகமானவர் சீராளன், கவிதையிலிருந்து உரைநடைக்கு அவர் தாவியிருப்பதில் நல்ல களங்கள் புதிய பாணி நோக்கில் இத்தொகுப்பில் கிடைத்திருக்கின்ன.

தனிமனிதர்களின் அவஸ்தைகளைச் சொல்பவை இவை. ஜெயந்தனின் சிறுகதைகள் இவற்றையே சமூகவியல் குரல்களாக பல சமயங்களில் உரத்தோ, கடைசி வாசகனும்புரிந்து கொள்ள வெண்டும் என்ற அக்கறையில் சொல்லப்படிருக்கும். ஆனால் இன்னொரு தலைமுறையைத் தாண்டி சீராளன் வெளிப்படுவதில் இந்த புதியத் தலைமுறையின் நோக்கமும் வெளிப்பாட்டு வித்யாசமும் தெரிகிறது..

நூல் : காயம் : சீராளன் ஜெயந்தன் சிறுகதைகள்

ஆசிரியர்: சீராளன் ஜெயந்தன்

விலை:ரூ. 150

வெளியீடு: யாவரும் ப்ப்ளிகேஷன்ஸ், சென்னை   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *