Kadai Thirappu Vizha (Shop Opening Ceremony) Short Story By Hemalatha. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.



– ஏங்க இன்னும் நாலு நாள் தான் இருக்கு. விழாவிற்காக எல்லா ஏற்பாடும் நானே தான் செய்யணுமா ? நீங்கள் கூடமாட உதவக்கூடாதா.
– ஓ இதுக்குத்தான் இந்த கோவமா ? நான் ஒரு பத்திரிக்கைக்காரன் எப்பொழுதும் சுற்றிக் கொண்டே இருக்கணும். நீ படித்தவள் என்னை புரிந்து கொண்டு தோள் கொடுப்பவள் உன் மாதிரி மனைவி இருந்தால் தான் என் போன்றவர்கள் வெளியில் நிம்மதியாக வேலை பார்க்கலாம் என் வளர்ச்சிக்கு நீ தானே மீனா காரணம்
– சரி சரி இந்த ஐஸ் வைக்கிற வேலை எல்லாம் போதும். நான் உங்களைப் புரிந்து கொண்டவள் தான் அதனால் தான் குடும்பம் சந்தோஷமாய் ஓடுது
– நான் கொடுத்து வைத்தவன்
– நான் ? எனக்கு என்ன கொடுக்கப் போறீங்க ?
நீ கற்பனையே பண்ண முடியாத பரிசு. உன் கடையை நடிகை ஆஷா திறக்கப்போகிறார் விழாவிற்கு அழைக்கத்தான் போயிருந்தேன் அதுதான் லேட்
– ********
– ஏங்க சீக்கிரம் இங்க வாங்க, இதைப் பாருங்க உங்க தேவதை ஆஷா மரணம்னு டிவில  ஃபிளாஷ் நியூஸ் ஓடுது
– கடவுளே நாளைக்கு அவங்க படம் ரிலீஸ்.. நான் எடுத்த பேட்டி இன்று எங்கள் பத்திரிகையில்
– தற்கொலை
– அவங்க இரண்டு நாட்கள் முன்பு பார்த்த போது ரொம்ப ஜாலி மூட் லே இல்லை இருந்தாங்க
– வாட்ஸ்அப்ல பேட்டி பற்றி பதில் தரேன்னு உங்க கிட்ட சொல்லி இருந்தாங்க இல்ல, கடவுளே
– ஏதாவது வந்திருக்கா பாரு
– ஆமா அவங்க தற்கொலை மூட்லே உங்களுக்கு தான் மெசேஜ் செய்வாங்களாக்கும்
– இருடி ஏய் உண்மையாக தகவல் வந்திருக்கு
– படிங்க சீக்கிரம்
– “ மிஸ்டர் பரத் நான் நன்றாக ஏமாற்றப்பட்டு விட்டேன். என் கணவர் மோகனும் செகரட்டரி மாலாவும் ஏற்கனவே திருமணமானவர்கள். பணத்திற்காக என்னை ஒரு வருடமாக ஏமாற்றி உள்ளார்கள். என் பண இருப்புகள், வங்கி சொத்து விவகாரங்கள் எல்லாம் அவர் பெயரில் சிறிது சிறிதாக மாற்றி விட்டார்கள். எனக்கு இந்த விஷயம் தெரிந்தது அவர்களுக்கும் தெரிந்து அதிர்ச்சியாகி விட்டது. என்னை அழித்துவிட திட்டம் போட்டிருக்கிறார்கள். நான் வேறு யாரையும் அவர்களை மீறி தொடர்பு கொள்ள முடியவில்லை. உங்கள் மனைவியின் கடை திறப்பு விழா அன்று உங்களிடம் சொல்லிவிட தீர்மானித்தேன். அதனால்தான் உங்கள் பேட்டிக்கு நேரம் ஒதுக்கினேன். அன்றும் தனிமை கிடைக்காதலால் இந்த ஏற்பாடு. நீங்கள் பத்திரிகைகாரர் ஆனதால் தகுந்தபடி என்னை காப்பாற்றவும் “
– கடவுளே இது எப்ப வந்தது, நேற்று இரவு பதினொரு மணி …அடடா…நான் வைஃபை ஆஃப் பண்ணி விட்டதால் இப்போ தான் தெரிந்தது அதற்க்குள் காரியம் மிஞ்சி விட்டது
-என்னாங்க உங்க ஆபீஸ்ல இருந்து போன் அவசரமாம்
-மிக முக்கியமான செய்தியோடு வருகிறேன் என்று சொல். ஃபோட்டோகிராபர் மணியை ஆஷா வீட்டிற்கு வரச்சொல்
நடிகை ஆஷா வீட்டு முன்னால் ஒரே கூட்டம். உள்ளே  அவள் கணவரும் மற்றும் பலரும். கணவன் மோகனுக்கு மயக்கம் வரும்போல் ஆகி  அழுது துடித்துக் கொண்டிருக்கிறார். உடன் இருப்பவர் ஆசுவாசப்படுத்திக் கொண்டுள்ளார்
போலீஸ் விசாரணை. காரணம் யாருக்கும் தெரியவில்லை. நானும் சிஐடி மித்ராவும் முதலில் மாலாவுடன் ஓர் அறைக்குள் சென்று விசாரணை நடத்தினோம்
மிக சாதாரணமாக அவ்வப்பொழுது மோகனை பார்த்துக் கொண்டிருண்டோம். அவனுக்கு அங்கு இருப்பு கொள்ளவில்லை. நேரே இங்கு வந்தான்
மித்ரா நேரடியாக,
– மாலா எல்லாம் ஒத்துக்கொண்டு விட்டாள். நீங்கள் தான் மாஸ்டர் பிளான் ஆமே
– சண்டாளி ..நான் சொன்னால் இவளுக்கு புத்தி எங்கே போயிற்று? இவள் தான் ராத்திரி பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தாள்
– சபாஷ் இருவருக்கும் பங்கு உண்டு என எங்களிடம் வேறு சாட்சியும் உண்டு. இவ்வளவு சுலபமாக நான் எந்த கேஸ்சும் பார்த்ததில்லை
-நன்றி பரத்! உங்கள் பத்திரிகைக்கான பிரத்தியேகமான தகவலை நான் வெளியிடவில்லை. மாலை பதிப்பில் பார்த்துக் கொள்கிறேன். எனக்கு பார்ட்டி உண்டு தானே
-கட்டாயம் மித்ரா, முதலில் என் மனைவிக்கு செய்தி சொல்ல வேண்டும்
-ஓ அப்படியா
-அவள் எனக்கு நல்ல ஒரு தோழியும் கூட! அவள் ஒத்துழைப்பால் தான் நான் வெற்றி பெறுகிறேன்
*************
ஹேமலதா

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *