சித்துராஜ் பொன்ராஜ் அவர்களின் சிறுகதைகளை அவற்றின் தீவிரமும் ஆழமும் மற்றும் வெவ்வேறு கணங்களையும் கொண்டு உலக சிறுகதைகள் என்று சாதாரணமாக சொல்லிவிடமுடியும். வெவ்வேறு நாடுகளில் நிகழும் கணங்கள் என்பது ஒரு சாதாரண அடிப்படையான தகவல். ஆனால் அந்த கதை மாந்தர்கள் உலக மாந்தர்களாகவும்  அதன் கூறுகளோடும் கலாச்சாரத்  தன்மையோடும் இணைந்து சரளமாக இருப்பதுதான் அவருடைய கதையை எனக்கு சுகமாக அப்படி ஒரு முத்திரையை தர ஏதுவாகிறது.. பெரும்பான்மையான எழுத்தாளர்கள் அவர்களின் களங்கள் மாறுபடாமல் திரும்பத்திரும்ப தங்களை பாதித்த இடங்களை, களங்களை, ஊர்களை பற்றி  மட்டுமே கொண்டு காலங்காலமாக எழுதப்படுகிற சூழலில் சித்துராஜ் பொன்ராஜ் அவர்களின் கதைகளின் விரிவான களங்கள், கணங்கள் ஆச்சரியப்படுத்துகின்றன. அதற்கு காரணம் அவரின் தீவிரமான உலக இலக்கிய வாசிப்பும் வெவ்வேறு இடங்களில் ,நாடுகளில் அவர் பயணித்து அந்த விபரங்களை உள்வாங்கி சுலப்மாக அந்தக் கதைகளை மையமாகக் கொண்டிருக்கச் செய்வதாலும் ஆகும்.

இந்த தொகுப்பின் முதல் கதையே கொஞ்சம் அதிர்ச்சி தருகிறது  சுற்றுச்சூழல் என்ற முறையில் இந்த கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறது .பூஜ்ஜியத்தை கண்டுபிடிப்பவர்களுக்கு காமத்தில் பூஜ்ஜியமாக இருப்பதால் விளைவோ என்னவோ ஒரு பெரும் வன்முறை அவர்களால் எழுதப்படுகிறது .எண்ண முடியாத வெறுமைக்கு எழுத்து வடிவம் கண்டு எல்லா லாபத்தை காணப் போகிறாய் என்ற விவாதங்கள் இருந்தாலும் அவர்கள் சென்றடையும் இடம் அதிர்ச்சி தருகிறது.

 பல கதைகள் இரண்டு மூன்று தளங்களைக் கலந்து கலந்து கதை சொல்லும் இயல்பில் புதிய வடிவங்களாக மாறிவிடுகின்றன .மகள் பிரிவும் லாரி பிரச்சனையும் என்று எடுத்துக் கொள்கிற ஒரு கதையை அப்படிச் சொல்லலாம் .ஒரு கதையில் அதுமட்டுமல்ல எல்லா பொம்பளையும் தான் அடிமைத்தனமும் சொல்றியா இல்ல அலங்காரம் உங்களுக்கு மட்டுமல்ல .. வயிறு பின் பக்கம் தொடையெல்லாம் அலங்காரம் தான்.. அலங்காரம் என்பது பற்றிய ஒரு வளமான விஷயமாக இக்கதையில் இருக்கிறது. விரல்களை வெட்டி அர்ப்பணம் செய்யும்  ஒருவனின்   மனநிலை பாதிப்பு என்று இதை எடுத்துக் கொள்ளலாம். மனநிலை பாதிப்பான மனிதர்கள் பல கதைகளில் தென்படுகிறார்கள்

  மாணவர் என்ற கதையில் இத்தாலியை கிழவருக்கு பாலியல் ரீதியாக சிறுவனிடத்தில் ஈர்ப்பு ஏற்படுகிறது .ஓடிப்போன பெற்றவர்கள் .அந்த கிழவன் ஒரு சிறுவனை அதற்காக வைத்துப் படுத்துகிறான் ஆனால் அந்த சிறுவனின் நிராகரிப்பு அந்தக் கணவானை சாதாரணமாக குப்புற தள்ளிவிடுகிறது. இந்த தொகுப்பின் தலைப்பு உள்ள கடல் நிச்சயம் திரும்ப வரும் என்ற கதை ஒருவகையான கற்பனையும்  தொன்மமும் கலந்த உலகமாக மாற்றப்பட்டுள்ளது .கடலுக்கு அடியில் ராஜராஜன் உலகம் இருப்பதாக சொல்லப்படுகிறது .கடல் மாசும் வேறொரு கோணத்தில் அலசப்படுகிறது .இதில் காட்டப்படும் அதிகாரத்தின் பன்முகத்தன்மை அதிர்ச்சியை தருகிறது.  நான்கு ஆண்டுகளாக கடுமையான கட்டாய கருத்தடை அமலில் இருந்தது அப்படியும் ஆலயத்தின் அறிவுறுத்தலை மீறி பெறப்பட்ட குழந்தைகள் பிறந்தவுடன் நகரத்துக்கு வெளியே கடலை நோக்கி நின்றுகொண்டு இருந்த 15 அடி கம்பங்களில் கயிற்றால் ஏற்றி வைக்கப்பட்டு சாகடிக்க பட்டனர் என்ற விவரங்களில் அதிர்ச்சி தருகின்றன. இக்கதையில் வரும் மணிமேகலை தெய்வம் வேறு ஒரு வகை படிமமாக விழுந்து வைக்கிறது .இன்னொரு கதையில் நீலப்படம் நடிக்கும் பெண் அவனின் இருப்பு சார்ந்த நிறைய கேள்விகள் எழுப்பப்படுகின்றன .அதுபோல் நீலப்படம் பார்க்கிற மனிதர்களும்  அவர்களின் விசித்திர உணர்விலும் சில கதைகளில் சொல்லப்படுகின்றன .மூன்று லாரி வீடு என்ற கதையில் வரும்  கிழவர் ஒரு துன்பமாகவே மாற்றப்படுகிறார் .மாந்திரீக தாந்திரீக செயல்களால் அவர் அலைக்கழிக்கிறார். அதிர்வு ஏற்படுத்துகிறார். அம்மா கள்ள உறவு கொண்டிருக்கிறாள் அதை சின்ன வயதில் பார்த்த பாதிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. திரைப்படம் பார்த்தாலும் அது ஒரு கதாபாத்திரமாக மாறி ஆசுவாசம் பெறுவதும் அந்தக் கிழவருக்கு சாதாரணமாக இருக்கிறது .வாழ்க்கையில் மிகவும் தாழ்மையான நிலைக்கு தள்ளப்பட்ட அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்யத் துணிவார்கள் ஏனென்றால் அவர்கள் விழுவதற்கு அதிக தூரம் இல்லை. அப்படி இருந்தாலும் அது அவ்வளவாக படாது அந்த துணிச்சலை ஒருவகையில் மந்திரம் போல் செயல்பட்டு அற்புதங்களை நிகழ்த்தி விடுகிறது என்பதற்கு சாட்சியாக கதாபாத்திரங்கள் இந்த கதைகளில்லாம் தென்படுகின்றன .குண்டு பொம்பளை உடல் குறைய பிரயத்தனப் படுவதும் அவள் அப்படி ஆவதற்கு பின்னணியிலுள்ள விஷயங்களும் ஒரு பன்னாட்டு உணவுப்பொருள் உடைய பிரயோகத்தில் இருக்கும் கபட தன்மையில் காட்டப்படுகிறது .தனக்கு பிடித்த எழுத்தாளர்களில் விரல் துண்டுகளை கொண்டு வருகின்ற பெண் கூட அப்படித்தான்.

 இந்த சிறுகதைகளில் பல தொன்மக் கதைகள் தொடர்ந்து துரத்திக் கொண்டே இருக்கின்றன ஒ.ரு கதையில் வருகிற பரிஷத் என்ற அரசன் அவனுக்கு ஏழு நாட்களில் பாம்புகளால் மரணம் சம்பவிக்கும் என்ற சாபம் ஏற்படுகிறது. இதுபோல் பல்வேறு சாதனைகளையும் பல்வேறு தொன்மக் கதைகள் மூலம் சொல்லி அதிலிருந்து விழுவதற்கான கதாபாத்திரங்கள் தவிப்பும் சொல்லப்படுகிறது .மிகக் கவனமாக கையாளப்பட வேண்டிய பட்டம் பெண்ணும் கால்களுக்கிடையில் மெல்ல தவிக்கும் உள்ளூரில் சுகம் இவ்வளவு அருமை வாய்ந்த மனிதரையும் வழக்கு செய்யக் கூடியது என்று ஒரு கதையில் ஒரு பகுதி இருக்கிறது அந்த ஆசை அலைக்கழிக்கிற் மனிதர்களைப் பற்றிய பல கதைகள் உள்ளன. ஒரு கதையில் விவாகரத்து கோருகிறார் ஒரு பெண். தம்பதி தொடர்ந்து ஒரே அறையில் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள் .ஆனால் அந்தப் பெண் அவனை இருப்பை நிராகரிப்பதற்கான காரணமாய் அவனுக்கு ஒரு நிலத்தைக்  கண்டுபிடித்து அதை நிறைவேற்ற முயற்சிக்க…… இந்த சிக்கலை மிக நுணுக்கமாக சொல்வதில் ஒரு பெண்ணை அன்பாக வைத்து குடும்பம் நடத்துவதில் உள்ள இமாலய சிக்கல்கள் எல்லாம் சாதாரணமாக சொல்லிப் போகிறார்.

.சில  கதைகளில் தன்னிலை விளக்க வடிவம் சிறப்பாக இருக்கிறது. வெவ்வேறு வடிவங்களாக கதைகள் சொல்லப்படும் வேண்டும் என்பதில் சியோல் கதையும் வெவ்வேறு vaடிவங்களை நிரப்பி கொண்டு போவதும் ஒரே கதையை வெவ்வேறு தளங்களை மாறிமாறி உபயோகிப்பதும் கதைகளின் சுவாரசியமான வாசிப்புக்கு பயன்படுகின்றன .அவற்றில் தேக்கமென்ற எந்த தடையும் ஏற்படுவதில்லை .

இந்தக் கதைகளின் ஊடாக பிராமண வாழ்க்கை சார்ந்த வார்த்தைகள் ,பழம் இலக்கிய வாசிப்பில் ஊறிப்போன வார்த்தைகள் போன்ற எல்லாம் சுலபமாக வந்துவிடுகின்றன, இந்த பாதிப்பை பலத் தலைப்புகளில் கூட பார்க்க முடிகிறது .பல இடங்களில் மீன் சார்ந்த வெவ்வேறு வர்ணனையை வாழ்க்கையோடு ஒப்பிடுவதும் அதிகமான மனமும் பாதிக்கப்பட்டவர்களும் புற்றுநோய்க்கு ஆளானவர்களும் வந்தபோதும் கதைகளில் இயல்பாக இருக்கிறது .விதவிதமான மையங்களை எடுத்துக்கொண்டு அவற்றில் பல்வேறு கலாச்சார சூழலும் பல்வேறு நாடுகளின் அனுபவக்  களங்களில்  இக்கதைகளை எழுதுவதற்கு தேவையான வாசிப்பும் பயணமும் ஆழ்ந்த அனுபவங்களும் ஒரு சாதாரண எழுத்தாளனுக்கு என்றைக்கும் வாய்க்காது.

கடல் நிச்சயம் திரும்ப வரும்

ரூபாய் 230/-

பக்கங்கள் 250

வம்சி வெளியீடு, திருவண்ணாமலை 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *