கவிதை : ‘கடல்’
🐟 🐟🐟
துள்ளித் துள்ளி மகிழுங் கடலே
துயரம் இன்றி வாழுங் கடலே
அள்ளி அள்ளிக் கொடுக்குங் கடலே
அதிசயம் நீயே தண்ணீர்க் கடலே!
தண்ணீர்த் துள்ளி அலையென்றாகும்;
தன்மேல் துள்ளும் மீன்கள் வாழும்!
பயணம் போகும் கலமும் துள்ளும்;
படகும் துள்ளும் பயணிகளோடே!
கடலில் வாழும் சங்கின் நிறமோ
பளிச்செனத் துள்ளும் தன்னிறம் காட்டி;
முத்தது துள்ளும் முழு வெண் நிறமாய்
உப்பது துள்ளும் முத்தின் நிறமாய்!
கடலைக் காணும் கண்கள் துள்ளும்;
கரைகளில்லா மனமும் துள்ளும்!
கடலைத் தொட்டால் உடலும் துள்ளும்;
காதல் மனங்கள் அலையை மிஞ்சும்!
கடல்மேல் தோன்றும் காற்றும் துள்ளும்;
கடல் நீராவி மேகம் துள்ளும்!
கவலை உள்ளோர் யாவரும் செல்வீர்;
கடலைக் கண்டால் கரையும் துயரம்!
துயரம் கரைந்தே
துள்ளும் மனதை;
அள்ளித் தருமே அழகுக் கடல்தான்
🐟 🐟🐟 🐟
எழுதியவர் :
கவிஞர் பாங்கைத் தமிழன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

