கடலுக்கு அடியில் நகரம் – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள் :
நூல் : “கடலுக்கு அடியில் நகரம்”
நூலாசிரியர்கள்: பொறியாளர் எம்.ஜோதிமணி, முனைவர் பெ.சசிக்குமார்
விலை : ரூபாய் 140 /-
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
தொடர்பு எண்: 98652 57071 மற்றும் 044 24332424
“அறிவியல் சமூகத்திற்கும் பொதுமக்களுக்கும் உகந்த நூல்”
இந்நூலில் உள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றும் அறிய தகவல் களஞ்சியமாக உள்ளது.
இயற்கையின் மீது காதல் கொண்ட மனிதர்கள் இன்னும் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டு உள்ளார்கள் என்பதை அறிந்து மனம் மகிழ்கிறது.
அன்றாடம் நாம் பயன்படுத்தும் பால் கவர் எவ்வாறு உருவாக்கப்படுகிறது?
கரும்பின் மூலம் எவ்வாறு சர்க்கரை தயாரிக்கப்படுகிறது? வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நாட்டு சர்க்கரையை பயன்படுத்தினால் சர்க்கரை நோய் குறையும் என்ற நம்பிக்கையை தவிடு பொடி.
பெரிய வெற்றிக்கு காத்திராமல் அன்றாடம் கிடைக்கும் சிறிய வெற்றிகளை கொண்டாட நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அழுத்தமாக பதிவிட்டுள்ளார் நூலாசிரியர்.
மனிதன் நடந்து பழகினான். மாட்டு வண்டியில் என்று பயணித்தான். தொடர்ந்து இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், ரயில் பயணம் அதைத் தொடர்ந்து விமான பயணமும் மேற்கொண்ட விஞ்ஞான வளர்ச்சியை காட்சிப்படுத்துகிறார்.
நம் பயணம் விமானத்தோடு மட்டுமல்ல இனிமேல் ராக்கெட் தொழில்நுட்ப மூலம் அண்டவெளியில் பயணிக்கும் காலம் நெருங்கி வருகிறது என்பதையும் நம்பிக்கையோடு பதிவிட்டுள்ளார் நூலாசிரியர்.
இந்த பூமி மனிதனுக்கு மட்டும் என்று நினைத்துக் கொண்டுள்ளோம். இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல அனைத்து ஜீவராசிகளுக்குமானது என்று தெளிவாக குறிப்பிடுகிறார்.
எனவே இயற்கை வளத்தை அழிக்காமல் ஒவ்வொரு உயிரினத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதை மிக அருமையாக பதிவிட்டுள்ளார் நூலாசிரியர்.
இப்புத்தகம் 19 கட்டுரைகளின் தொகுப்பு.
ஒவ்வொன்றும் ஒரு தகவலை அழுத்தமாகச் சொல்கிறது.
முதல் கட்டுரை எளிமையான வாசிப்புடன் துவங்குகிறது.
அடுத்தடுத்த கட்டுரைகள் நம்மை அசையவிடாமல், அசாதாரணமான தகவல்களை அநாயஸ்யமாகச் சொல்லிச் செல்கிறது.
வாசிப்புக்கு இலகுவான மொழிப் பிரயோகம் என்பதால் எவரும் கைபிடித்துச் செல்ல வேண்டியதில்லை.
சிக்கலான அறிவியல் கருத்துக்கள், ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளை அறிவியலில் பின்னணி இல்லாத வாசகர்களும் எளிதில் அணுகக்கூடிய மொழியில் எழுதியுள்ளார் நூலாசிரியர்.
வாசிக்கத் தெரிந்த அனைவரும் இந்த நூலுக்கான வாசகர்கள்.
நூலை வாசித்து முடித்த பின்னர் நிறைய அறிவியல் தகவல்கள் நம்முள் அசைபோடுகின்றன. வாசிப்புக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கான விஷயங்களையும் சில கட்டுரைகள் போதிக்கின்றன.
1.கடலுக்கு அடியில் நகரம்
2.பால்பண்ணையில் ஒரு நாள்
3.தித்திக்கும் உள்ளூர் தொழிற்சாலை
4.எழுத்தும் அனுபவமும்
5.மிதிவண்டி பயணமும் வாழ்க்கை பயணமும்
6.எண்களின் வகைகள்
7.உயிர் எழுத்தின் அறிவியல்
8.மனித குலத்தின் அடுத்தப் பயணம் எங்கே?
9.இந்தியாவின் முதல் செயற்கைக்கோள்: ஆர்யபட்டா
10.உலக வானியல் வாரம்
11.முதல் விண்வெளி தொலைநோக்கி
12.ஒவ்வொன்றும் மற்றொன்றை சார்ந்தது
13.இருபுறமும் கூர் தீட்டிய கத்தி
14.உயிரி எரிபொருள்
15.அதிர்வலைகள்
16.காற்றின் ஊடே
17.புதிய இந்தியாவுக்கான டிஜிட்டல் இந்தியா
18.கனவுகளின் நாயகன்
19.விக்ரம் சாராபாய் தொழில்நுட்பத்தின் தந்தை
இந்த நூல் அறிவியலாளர்களுக்கு மட்டுமல்ல அறிவியலை நேசிப்பவர்களுக்கும் குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அனைவரும் வாசித்தரிய வேண்டிய அரிய நூல்
இந்த நூல் தமிழ்நாடு கல்வித்துறை கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும். குறிப்பாக அனைத்து பள்ளி கல்லூரி பல்கலைக்கழகங்களிலும் இந்நூல் இடம் பெறுவது மிக மிக அவசியமாகும்.
நூல் அறிமுகம் எழுதியவர் :
MJ. பிரபாகர்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பு மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.