எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதி ச.து.சு. யோகியார் மொழிபெயர்த்த, நோபல் பரிசு பெற்ற நாவலான "கடலும் கிழவனும்" (Kadalum Kizhavanum) புத்தகம் - நூல்

நோபல் பரிசு பெற்ற நாவலான “கடலும் கிழவனும்” – நூல் அறிமுகம்

லாப நோக்கமற்ற மக்கள் பதிப்பாக நற்றிணை பதிப்பகம் வால்காவிலிருந்து கங்கைவரை என்ற நூலை 150க்கு கொடுத்தது. அத்தோடு இணைப்பாக 100 ரூபாய் மதிப்புள்ள நோபல் பரிசு பெற்ற நாவலான, எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதி ச.து.சு. யோகியார் மொழிபெயர்த்த கடலும் கிழவனும் நூல் விலையின்றி கொடுக்கப்பட்டது. இது எதிர்பாராத பேரன்பு.

புத்தகம் கைக்கு வந்ததும் எனக்கு கடலும் கிழவனும் வாசிக்கனும்முன்னு தோனுச்சு. ஏனெனில் இந்த புத்தகத்தை எழுத்தறிவு இயக்கம் நடந்து கொண்டிருந்தபோது, புதிய கற்போர் படிப்பதற்காக 16 பக்கத்தில் பிஜிவிஎஸ் பைகாரா கருத்துக் கூடத்தில் வெளியிடப்பட்டது. அப்போது வாசித்துள்ளேன். அது பெரும்பான்மையாக கிழவனின் பாடுகளை கொண்ட பகுதியாக இருந்தது. மேலும் சுமார் 100 பக்கங்களை கொண்ட நாவலை 16 பக்கத்தில் படிக்கும் போது ஓர் அறிமுகம் மட்டுமே ஏற்படுத்தியது போல இருந்தது. அதனால் அதனை முழுமையாக வாசிக்க ஒரு வாய்ப்பாக கிடைத்தவுடன் படிக்க ஆரம்பித்தேன்.

எப்படிப்பட்ட ஒரு நாவல். தமிழ் தெரிந்த ஒவ்வொருவரும் இந்த நாவலை படிக்க வேண்டும். இதையும் கூட இன்னும் குறைந்த விளையில் அதாவது எப்படி 416 பக்கம் கொண்ட வால்காவிலிருந்து கங்கைவரை புத்தகத்தை 150 ரூபாய்க்கு கொடு்க்கப்பட்டதோ. அதே போல இந்த நூலை பள்ளி கல்லூரி மாணவர்கள் ஒவ்வொருவர் கையிலும் கிடைக்கும் வகையில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைந்த விலைக்கு கொடுத்து அவர்கள் கையில் வாசிக்க கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள். ஏன் தமிழக அரசு கூட வாசிப்பு இயக்கத்தின் ஊடே இந்த நாவலை மேல்நிலைப் பள்ளிகளுக்கு கொடுக்கலாம்.

ஒரு மீனவ கிழவனின் வைராக்கியத்தை படம் பிடித்துக் காட்டும் நாவல் இது. மிக அற்புதமான மீனவர்களின் வாழ்க்கையை இரு துருவங்களிலிருந்து கொண்டு செல்கிறார். ஒன்று வயதான கிழவன், மற்றொன்று ஒரு சிறுவன். இவர்களின் அன்பு பரிமாற்றம் குறித்த வர்ணனையில் நாம் அசந்து போவோம். அதிஸ்டமற்ற பயணம் என்பதை இருவரும் நம்பவில்லை என்றாலும் சமூக நம்பிக்கை இருவரையும் பிரிப்பதை பார்க்கலாம். இன்றளவும் நாம் சமூகத்திற்காவே வாழ்கிறோம்.
வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் அவர்கள் படும் பாடு பெரிய பாடல்ல என்பதை உணர்த்தும் நாவல். நீங்கள் எப்போதெல்லாம் சோர்வடைகிறீர்களோ

அப்போதெல்லாம் இந்த நாவலை வாசியுங்கள். உங்களை அறியாமலேயே உற்சாகம் பிறக்கும்.

நூலின் விவரம்:

புத்தகத்தின் பெயர்: கடலும் கிழவனும்
ஆசிரியர்: எர்னெஸ்ட் ஹெமிங்வே
தமிழில்: ச.து.சு யோகியார்
வெளியீடு: நற்றிணை பதிப்பகம்
பக்கங்கள்: 80
விலை: 100
தொடர்புக்கு: 94861 77208

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

நூல் அறிமுகம் எழுதியவர்:

மொ. பாண்டியராஜன்

 

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *