கடலும் ஒரு கிழவனும் (kadalum oru kizavanum) – நூல் அறிமுகம்
📖✒இப்புத்தகத்தைப் பற்றி பேசும் முன் ஆசிரியரைப் பற்றி முதலில் நாம் தெரிந்துக் கொண்டால், அவருடைய எண்ணங்களையும், மனநிலையையும் இந்த நாவலை வாசிக்கும் போது பிரதபலிப்பதை நம்மால் உணர முடியும்.
📖✒இருபதாம் நூற்றாண்டின் மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவராக திகழ்ந்து, முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரை நேரில் சந்தித்து பாதிப்படைந்தததோடு, தன் கனவை நோக்கி தொடர்ந்து பயணம் செய்து, ICeberg Theory என்ற நாவல் மூலமாக தன்னை மாபெரும் எழுத்தாளராக இவ்வுலகிற்கு அறிமுகப்பத்திய எழுத்தாளர்களில் இவரும் ஒருவர்.
📖✒அதன் பின் ‘A Farewell to Arms’ , ‘ For Whom The Bells Tolls’ போன்ற நாவல்களும் பெரும் சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
📖✒இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் அவர் வெளியிட்ட ‘Across the River and into the Water’ என்ற நாவல் மிகப்பெரிய தோல்வியை தழுவியதோடு மிகவும் மோசமான விமர்சனத்துள்ளாகியிருக்கிறது.
📖✒இழந்த பெருமையையும் மரியாதையையும் மீட்டெடுக்க, மனதை ஒரு முகப்படுத்தி மிகுந்த ஈடுபாட்டுடன் எட்டு வாரங்களில் எழுதி முடித்த நாவல் தான் ‘The Old Man and the Sea’.
“தன் வாழ்நாளில் தன்னால் மிகவும் சிறப்பாக எழுத முடிந்த நாவல் இது” என்று எர்னெஸ்ட் கூறியிருக்கிறார்.
📖✒அவருடைய உழைப்பும் விடா முயற்சியும், நம்பிக்கையும் வீண் போகவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
📖✒அவர் எண்ணம் போலவே, இந்த நாவல் 1953ல் புலிட்சர் இலக்கிய விருது பெற்று, 1954 ல் நோபல் பரிசை ஆசிரியர் பெற்று தந்தது.
📖இனி புத்தகம் குறித்து…

🌊👴நான் ஆரம்பத்தில் கூறியது போலவே அசிரியருடைய நாவல் தோல்வியின் போது அவர் சந்தித்த மோசமான சூழ்நிலைகளிலிருந்து தன்னை எப்படி மீட்டெடுத்து, வலி நிறைந்த அப்பாதைகள் கற்றுக் கொடுத்த அனுபவங்களை ஒன்று திரட்டிக் கதையின் வாயிலாக நமக்கு கூறியிருப்பது ஆசிரியர் குறிப்பின் வாயிலாக தெரிந்து கொள்ள முடியும்.
🌊👴சாண்டியாகோ என்ற வயது முதிர்ந்த கிழவன் தொடர்ந்து எண்பத்து நான்கு நாட்களாக கடலுக்குச் சென்று ஒரு மீன் கூடக் கைக்கு பிடிபடாமல் ஒவ்வொரு முறையும் ஏமாற்றத்துடன் திரும்புவதையும், கடந்த நாட்கள் தந்த கசப்பான அனுபவங்களையெல்லாம் ஒன்று சேர்த்து வைராக்கியமாக்கி நம்பிக்கையுடன் தளர்ந்த உடலுடன் கடலுக்குள் செல்வதையும் நோக்கி கதையானது நகர்கிறது.
🌊👴🐳மீனைப் பிடிக்க சென்ற கிழவன், தனிமையில் மூன்று நாட்கள் கடலுடன் கழித்த பொழுதுகளையும், அவை கற்றுத் தந்த அனுபவங்களும் ஏராளம். அவற்றின் மூலமாக நமக்கு கிடைக்கும் வாழ்வியல் அறிவுரைகளும் தாரளமாக உள்ளது.
🌊👴முதிய வயதிலும் கடைசி நிமிடம் வரை போராடும் அக்கிழவனின் மனோதிடம் குறித்து வியப்படைய வைக்கும் வண்ணம் கதையின் நகர்வு நம்மை சிந்திக்க வைக்கும்.
🌊👴கதையின் இடையிடையே உடல் பலத்தை விட மனோபலத்திற்கு வலிமை அதிகம் என்பதை நிரூபித்துக் காட்டும் வண்ணம் கதைக்களம் இருக்கும்.
🌊👴முதியவன் தனியாக கடலுக்குள் பயணிப்பார். ஆனால் அவர் கடலைக் குறித்தும், அங்கு வாழ் சூரை மீன், பறவை மீன், சுறா, டால்பின் பண்புகளையும், கடல், நட்சத்திரங்கள், மேகம், தென்றல் காற்று மற்றும் மீனின் வனப்பை குறித்து வர்ணிக்கும் விதம் கண்டு நாமும் அவருடன் சேர்ந்து பயணித்து, இயற்கையின் எழிலை நேரில் கண்டு ரசித்த பூரிப்பு ஏற்படக் கூடும்.
🌊👴அதே நேரத்தில் முதியவன் கடலில் தன்னந்தனியாக மீனைப் பிடிக்க போராடும் போது அவன் படும் வலி வேதனையைக் கண்டு நம்முள்ளமும் ரணத்தின் உச்சத்தை உணர வைக்கும் வண்ணம் புத்தகத்தின் கடைசி இருபது பக்கங்களில் நம்மை துடிதுடிக்க வைத்திருக்கிறார் ஆசிரியர்.
🌊👴சூழ்நிலை தனக்கு சாதகமாக இல்லாத நிலையிலும் கூட கடைசி நொடி வரை அக்கிழவனின் தன்னம்பிக்கை தளரவே இல்லை. கடலில் ஏற்படும் ஒவ்வொரு இன்னலின் போது அவனுக்கு அவனே கூறிக்கொள்ளும் நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளும், விடாமுயற்சியும் இக்கதையின் மூலமாக நமக்கு கூற வரும் செய்தியும் அதுவே.
🌊👴அக்கிழவனின் வாயிலாக ஆசிரியர் இப்புத்தகத்தில் கூறியிருக்கும் வாழ்வியல் எதார்த்தங்களையும் தன்னம்பிக்கை வார்த்தைகள் ஒரு சிலவற்றை கீழே குறிப்பிட்டிருக்கின்றேன்.
📖சிறந்த பறவைகள் மற்றும் மிருகங்களுடன் ஒப்பிட்டால் மனிதன் எதற்கும் ஆகாதவனாய் இருக்கிறான்.
📖வாழ்வில் எதுவுமே எளிதானது இல்லை.
📖எப்போதுமே நீ உனது சிந்தனையைத் தெளிவாய் வைத்திருக்க வேண்டும். உனது சிந்தனையைத் தெளிவாக்கி, ஒரு வீரனைப் போல எப்படித் துயரங்களை எதிர் கொள்ள வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்.
📖மனிதன் தோற்பதற்காகப் படைக்கப்பட்டவன் அல்ல!
📖ஒரு மனிதனை அழிக்க முடியும் தவிர தோற்கடிக்க முடியாது.
📖நீ உன் பாதையில் போய்க்கொண்டேயிரு. எது வந்தாலும் அது வரும்போது அதை எதிர்கொள்ளலாம்.
📖உன்னிடம் என்னவெல்லாம் இல்லை என்று நினைப்பதற்கு இதுவல்ல நேரம். உன்னிடம் இருப்பவற்றை வைத்து என்னவெல்லாம் செய்ய முடியும் என்று சிந்தித்துப்பார்.
📖மொழிபெயர்ப்பில் எந்தவித தொய்வில்லாமல் எழுத்து நடையும் சிறப்பாக அமைந்திருக்கிறது.
🌊👴இந்தக் குறுநாவல் ஒரு மொழிபெயர்ப்பு நூலாக மட்டுமல்லாது சிறந்த சுயமுன்னேற்றம் புத்தகம் என்று தான் கூற வேண்டும். இது உண்மையிலேயே ஆசிரியரின் மிகச் சிறந்த படைப்பு.
🌊👴வாசிப்பை நேசிப்பவர்களுக்கு எழுத்தாளரின் இந்தப் புத்தகம் மிகப்பெரிய வரபிரசாதம் என்று கூறினால் மிகையாகாது.
🌊👴🐳கடலுக்குள் கிழவனுடன் சேர்ந்து பயணித்து கிழவனைக் குறித்தும் கடலைக் குறித்தும் இன்னும் பல சுவரஸ்யமான தகவல்களைப் படித்து ரசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
நன்றி
நூலின் தகவல்கள் :
புத்தகம்: கடலும் ஒரு கிழவனும்
ஆசிரியர்: எர்னெஸ்ட் ஹெமிங்வே
தமிழில்: ஆயிரம்.நடராஜன்
பதிப்பகம்: தடாகம்
பக்கங்கள்: 121
நூல் அறிமுகம் எழுதியவர் :
இராஜதிலகம் பாலாஜி
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


சிறப்பான அறிமுக உரை
நன்றி தோழர்
சாகித்ய அகாடமி வெளியிட்ட அவன் காட்டை வென்றான் என்ற குறுநாவலும் இதே போல் இருக்கும்