தீண்டாமை…
இந்த நாவல் முழுமையாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி நிகழக்கூடிய ஒன்றாக உள்ளது… ஹரிஜன மக்களின் உரிமைக்கான போராட்டம் ஆதிக காலத்தில் இருந்து நிகழக்கூடிய ஒன்றாக தான் உள்ளது…
ஒரு கட்டத்தில் ஹரிஜன மக்கள் கோவிலில் நுழைந்து விட்டார்கள்… இதை பொறுத்துக் கொள்ள முடியாத பட்டார்கள் அந்த கோவிலே தீட்டாகிவிட்டது என கூறி பூஜை செய்ய மறுத்து, ஒரு நாள் இரவு முழுவதும் கோவிலின் நடையை சாத்தி விடுகிறார்கள்…
இதை பொறுத்துக் கொள்ள முடியாத நாயுடு சமூகத்தை சேர்ந்தவர்கள் கோவிலின் பூட்டை உடைத்து பூஜைகளை நடத்தி விட்டன… இதனால் ஆத்திரமடைந்த பட்டார்கள் மந்திரங்களை சொன்ன வாயால் கோஷங்களை எழுப்பி போராடுடங்களில் ஈடுபடுகின்றன…
கம்யூனிஸ்ட்களும் காதலும்
இந்த நாவலில் ஈஸ்வரன் என்ற பட்டமார் பையன் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு கல்லூரி படிப்பிற்காக சென்னை சென்று படித்து வந்தான்…
அங்கு , இவன் அனைவருக்கும் முற்றிலுமாக மாறுபட்டு காணப்பட்டான்… கொண்டை, குடுமிகளோடு இருந்த இவனை யாரும் தன்னுடன் சேர்த்துக் கொள்ளவில்லை….
அங்கிருந்த வெங்கட் என்பவன் இவனை தன்னுடன் இணைத்துக் கொண்டு, கூச்சத்தை நீக்கி சகஜமான நிலைக்கு கொண்டு வந்தான்… மேலும் முனியனும் இணைந்து, மூவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்…
வெங்கட் என்பவன் ஒரு கம்யூனிச இயக்கத்தை சேர்ந்தவன், தீண்டாமைக்கு எதிராக மறைமுகமாக குரல் எழுப்பிக் கொண்டு வந்தான்… இது பல காலங்களுக்குப் பிறகு ஈஸ்வரனுக்கு தெரியவருகிறது…
வெங்கட் போலீஸாரால் தேடப்பட்டு தலைமறைவாக இருந்த நிலையில், விடுதியில் இருந்து தனது பெட்டியை எடுத்துக் கொண்டு செல்லும் பொழுது, ஈஸ்வரனிடம் ஒரு புத்தகப் பையை மட்டும் கொடுத்து சென்றான்…
அதைத் திறந்து பார்த்த ஈஸ்வரனுக்கு ஒரே அதிர்ச்சி… அதிலிருந்த அத்தனையும் கம்யூனிச புத்தகங்கள், அதிலுள்ள காரல் மார்க்சின் புத்தகத்தை வாசித்த பார்த்தவனுக்கு, மேலும் ஒரு அதிர்ச்சி மார்க்சின் காதல் கவிதை அது… கம்யூனிச காரர்களுக்கு காதலிக்கவும் தெரியுமா? என்று….
காந்தியவாதியும்…
சுயமரியாதை இயக்கவாதியும்..
ஈஸ்வரன் தன்னுடைய கல்லூரிப் படிப்பை பாதியிலேயே முடித்து விட்டு தன்னுடைய சொந்த பட்டாளத்தை வந்தடைகிறான்
இந்த பாட்டாளத்தின் இவன் நெருங்கிய நண்பர் முதலியார் வீட்டு பையன் தியாகு…இவன் ஒரு சுயமரியாதை இயக்கத்தை சேர்ந்தவன், ஈஸ்வரனோ காந்தியவாதியான காங்கிரஸ் கட்சி காரன்…
சாதிகள், இயக்கம் வேறு ஆனால் நட்புணர்வு ஒன்று தான்…
தாசியின்காதலும்…
விதையின்காதலும்….
ஈஸ்வரனுக்கு தாசி பெண் மீது காதல் வருகிறது… அவளுக்கும் அவள் குலவழக்கம் போல தாசிய வாழ விரும்பம் இல்லை…..
தன்னை யாரவது இதிலிருந்து காப்பாற்ற வரமாட்டார்களா? நீங்களாவது எனக்கான விடுதலை கொடுங்கள் என்றால்…
இவனும் தாசியான அம்பிகா வை திருமணம் செய்து கொண்டான்… ஆனால் இந்த சமுகம் அவர்களை பிரித்து விட்டது.
தியாகு வின் காதலோ பட்டமார் வீட்டு பெண்ணான மரகதம் மீது, அவளோ 18 வயது நிரம்பிய இளம் விதவை பெண்…
ஈஸ்வரன் தன்னுடைய காதலைப் போல இவர்களின் காதலும் இப்படி ஆக கூடாது… என்று தன்னுடைய நண்பனின் கல்யாணத்தை முடித்து வைத்தான்…..
முன்பு பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ள வில்லையெனினும், தன்னுடைய பேரக்குழந்தைகளை பார்த்த பிறகு அவர்களை ஏற்றுக்கொள்கிறார்…
அந்த தாசி – க்கும் பெண்குழந்தை பிறந்து விட்டது… அந்த குழந்தை ஈஸ்வரனிடம் நெருங்கி பழகுகிறது.. ஈஸ்வரனும் அந்த குழந்தையின் மீது அளவு கடந்த பாசம்…
இருப்பினும் அவன் எல்லாத்தையும் தனிமையில் இருக்கிறான்…. அந்த கடம்பவனம் அவனுக்கு காடாக தெரிகிறது…
குறிப்பு – இந்தி எதிர்ப்பு போராட்டம், சுதந்திரப் போராட்டம் நடந்த காலத்திற்கு சம்மந்தப்பட்டது இந்நாவல்…
நூல்: கடம்பவனம்
ஆசிரியர்: அருணன்
பிருந்தா காசி
மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர்,
இந்திய மாணவர் சங்கம்