மருத்துவர்களும் மருத்துவமும்
கிரீஸ் நகரில், கி.மு 450ம் ஆண்டு வாழ்ந்த ஹிப்போக்ரெடிஸ் (Hippocrates) என்பவரே மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். இப்போதும் கூட மருத்துவர்கள் படித்து முடித்ததும், ஹிப்போக்ரெடிஸ் பெயரிலேயே உறுதிமொழி எடுக்கின்றனர். அதன் பின்பே மருத்துவப்பணி புரிகின்றனர். கி.பி. 1540 ம் ஆண்டில், இங்கிலாந்தில் ஹென்றி VIII என்ற அரசர் மருத்துவம் தொடர்பாக, முடிதிருத்தும் அறுவையாளரகள் என்ற ஒரு பட்டயத்தை நிறுவி முடிதிருத்தும் கலைஞர்களை மருத்துவத்துக்கு உதவி செய்திடக் கூறினார். இதுவே பின்னர் மருத்துவ உதவியாளர்கள் மற்றும் இதில் சிறப்பு பெற்றது எல்லாம் உருவானது. அத்துடன் சிகைத் தொழிலாளர்களே அறுவை சிகிச்சையும் செய்தனர். அதனாலேயே இந்த சமூகத்தினர் மருத்துவர் என்றும் அழைக்கப்பட்டனர். அந்த சமூகத்திலுள்ள பெண்கள், நோயுற்ற நோயாளிகளுக்குப் புண்கள் மற்றும் காயம் ஆகியவற்றைத் துடைத்தல் மற்றும் பெண்களின் பேறுகாலத்தின் போதும்கூட அவர்கள் உதவினாலும் பெண்களை முறையாக மருத்துவராக, சமூகம் அங்கீகரிக்க வில்லை.
பெண்கள் மருத்துவப்பணி சமூக அங்கீகாரமின்றி
ஆனாலும் கூட, பெண்கள் இங்கிலாந்தில், இந்தியாவில் இதில் முறையான பயிற்சி இன்றியே அரசின் எவ்வித அங்கீகாரம் இன்றியே மருத்துவ உதவிப்பணிகளில் தொடர்ந்தனர். அமெரிக்காவிலும் அப்படியே பல நூற்றாண்டுகளாக இந்நிலை தொடர்ந்தது. மருத்துவத் தொழில் முறைப்படுத்தப்பட்ட போதும் கூட பெண்கள் சட்டரீதியாகவும் மற்றும் சமூக பழக்க வழக்கங்களினாலும் மருத்துவ தொழில் செய்ய தடை செய்யப்பட்டனர். ஆனால் மருத்துவத்திற்கு உதவியான செவிலியர் பேறுகால மருத்துவம் பார்ப்பவர் போன்ற தொழில்களில் 19 மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் பெண்கள் இத்தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.காரணம் இது போன்ற அருவெறுப்பான, அசிங்கம என்று நினைத்த , மரியாதை குறைவான தொழில்களில் ஆண்கள் ஈடுபட விரும்பாததுதான்.
உலகின் முதல் பெண் மருத்துவர்
அமெரிக்காவிலும் கூட 19ம் நூற்றாண்டு வரை பெண் மருத்துவர்கள் என்பவர்களே இல்லை.உலகின் முதல் பெண் மருத்துவர் அமெரிக்காவின் எலிசபெத் பிளாக் வெல் (Elizabeth Blackwell (February 3, 1821 – May 31, 1910) என்ற பெண்தான். இவர்தான் , தனது மருத்துவ பட்டத்தை 1849..1850ல் மிகுந்த போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புகளுக்கிடையில் முடித்தார். அப்போது உலகம் முழுவதும் உள்ள ஒரேஒரு பெண் டாக்டர்தான்.அவர்தான் எலிசபெத் பிளாக வெல்
இந்தியா-,மருத்துவர்களின் எண்ணிக்கை& தேவை
இப்போது மருத்துவத்துறையில் பெண்கள் ஆண்களைவிட 4500 பேர் அதிகம். ஆனால் இவர்கள் எல்லோரும் மருத்துவ தொழில் பார்க்க வருவதில்லை. இன்றைக்கு இந்தியாவில உள்ள மருத்துவர்கள் எண்ணிக்கை 9,88,922. இவர்களில் 80% பேர் நகரத்தில் பணிபுரிபவர்கள்
ஆனால் இன்றைய இந்தியாவுக்குத்தேவையான மருத்துவர்கள் 6,00,000 பேர்.; செவிலியர்கள்: 2,000,000 பேர்.இப்போதைய மருத்துவர் : நோயாளி விகிதம்1:19,189.ஆனால் உலகநல நிறுவனம் சொல்வது 1000 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் கட்டாயம் வேண்டும் என்கிறது. நமது இந்திய விதி, இதன் நிலைமை மிக மோசமாக உள்ளது.
கடம்பினி யார்?
பிரிட்டிஷ் ஆட்சியில் கட்டுப்பட்டு கிடந்த இந்தியாவில். பெண்கள் கல்வி பயிலவே உரிமை இல்லை. பெண்களை குழந்தை பெறும் எந்திரமாகவும் , பிள்ளைகளை வளர்க்கும் செவிலியாகவுமே இந்த சமூகம் பார்த்தது; அவளை இரண்டாம்தர பிரஜையாகவே நடத்தியது. பெண்கள் திரை மறைவிலேதான், வீட்டின் கதவுக்குள்ளேதான் வாழ்ந்தனர். இருந்தனர்.அந்த காலகட்டத்தில் கடம்பினி கங்குலி என்ற வங்கத்துப பெண் படித்து , மருத்துவராகி சாதனை படைத்தார்.அதற்காக அவர பட்ட துன்பங்களும் துயரங்களும் ஏராளம்.
முதல் இந்திய பெண் பட்டதாரி
கடம்பினி மற்றும் சந்திரமுகி பாசு இருவரும்தான்
இந்தியாவில் மட்டுமன்றி ஒட்டுமொத்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் முதல் பெண் பட்டதாரிகள். .கடம்பினிதான் முதன் முதல் மேலை மருத்துவப் பயிற்சிப் பட்டம்பெற்ற தெற்காசியப் பெண் உடலியல் மருத்துவர் ஆவார். இந்தியாவின் புனே நகரில் பிறந்து வங்கத்தில் வாழ்ந்த ஆனந்த ஜோஷியுடன் வாழ்ந்த ஆனந்தி கோபால் ஜோஷி, அதே ஆண்டில் (1886) அமெரிக்காவில் மருத்துவப் பட்டம் பெற்ற பெண் உடலியல் மருத்துவர் ஆவார்.
கடம்பினியின் இளமைப்பருவம்.
கடம்பினி 1861ம் ஆண்டு, ,ஜூலை மாதம் 18ம் நாள் பிரிட்டிஷ் இந்தியாவில் பீகாரைச் சேர்ந்த பகல்பூர் என்ற நகரில் பிறந்தார்..இன்றைய பங்களாதேஷின் பாரிசல்,சங்கி என்ற ஊரில் அவரது குழந்தைப்பருவம் கழிந்தது. அவர் வங்கப்புரட்சியுடன் இணைத்தே வளர்க்கப்பட்டார். ஏனெனில் கடம்பினியின் தந்தை ப்ரஜா கிஷோர் பாபு பிர்ம்ம சமாஜத்தின் மிகச்சிறந்த பணியாளர். அவர் கல்விப்பணியில் ஒரு தலைமை ஆசிரியராக இருந்ததுடன் பெண் விடுதலைக்காக அர்ப்பணிப்புடன் பாடுபட்டவர். இவரே அபய்சரண் மாலிக்குடன் இணைந்து பகல்பூரில் 1823ம் ஆண்டு பெண்களுக்காக மகிளா சமிதியை நிறுவினார். இதுவே இந்தியாவில் பெண்விடுதலைக்காக முதன்முதல் நிறுவனப்படுத்தப்பட்ட பெண்கள் அமைப்பாகும்
கல்வியல் சாதனை
சின்னப்பெண் கடம்பினி முறையான கல்வியை ” வங்க மகிளா வித்யாலயா”வில் முடித்தார். அதுவே பின்னர் பெத்தூன் பள்ளி என உருமாறியது. பெத்தூன் பள்ளியிலிருந்து கொல்கொத்தா பல்கலைக்கழகத்துக்கு நுழைவுத்தேர்வு தேர்வு எழுதி அங்கு சேர்நத முதல் மாணவரும் கடம்பினிதான். 1878ம் ஆண்டு இந்திய சுதந்திரத்திற்கு முன்பு, க்டம்பினியின் கல்வி என்பது இமாலய சாதனைதான். இந்த விஷயம் என்பது பெண் கல்வியில், இந்தியாவில் ஒரு மைல் கல் ஆகும். அது மட்டுமின்றி, கடம்பினி பெற்ற கல்வியின் தேர்ச்சியினால் , 1883ம்ஆண்டு ,பெத்தூன் கல்லூரியில் FA என்ற First Arts பட்டப்படிப்பும் கொண்டு வந்தனர். அன்றைய பிரிட்டிஷ் அரசாட்சியின் கீழ் கல்லூரியில் முதன் முதல் படித்த முதல் இரண்டு பட்டதாரிகள் கடம்பினி மற்றும் சந்திரமுகி பாசு இருவர் மட்டுமே.
சின்னப்பெண் கடம்பினி முறையான கல்வியை ” வங்க மகிளா வித்யாலயா”வில் முடித்தார். அதுவே பின்னர் பெத்தூன் பள்ளி என உருமாறியது. பெத்தூன் பள்ளியிலிருந்து கொல்கொத்தா பல்கலைக்கழகத்துக்கு நுழைவுத்தேர்வு தேர்வு எழுதி அங்கு சேர்நத முதல் மாணவரும் கடம்பினிதான். 1878ம் ஆண்டு இந்திய சுதந்திரத்திற்கு முன்பு, க்டம்பினியின் கல்வி என்பது இமாலய சாதனைதான். இந்த விஷயம் என்பது பெண் கல்வியில், இந்தியாவில் ஒரு மைல் கல் ஆகும். அது மட்டுமின்றி, கடம்பினி பெற்ற கல்வியின் தேர்ச்சியினால் , 1883ம்ஆண்டு ,பெத்தூன் கல்லூரியில் FA என்ற First Arts பட்டப்படிப்பும் கொண்டு வந்தனர். அன்றைய பிரிட்டிஷ் அரசாட்சியின் கீழ் கல்லூரியில் முதன் முதல் படித்த முதல் இரண்டு பட்டதாரிகள் கடம்பினி மற்றும் சந்திரமுகி பாசு இருவர் மட்டுமே.
கடம்பினியின் மணம் &கணவரின் சிறை
கல்வியில் மட்டுமின்றி, சமூகத்தின் பல்வேறு செயல்பாடுகளில் சாதனை படைத்தவர் கடம்பினி. கடம்பினி (கணித விற்பன்னர் பித்தாரகசின் மாணவி தியானோ போலவே) தனது ஆசிரியர் துவாரகாநாத் கங்குலியை மணம் புரிந்து கொண்டார். துவாரகாநாத் பிரம்ம சமாஜத்தின் தலைவரும் கடம்பினியைவிட 20 ஆண்டுகள் மூத்தவரும் ஆவார். பிரம்ம சமாஜத்தின் உறுப்பினர்கள் யாருக்கும் இந்த திருமணத்தில் துளிக்கூட உடன்பாடு இல்லை. திருமணத்திற்குப் பின்னர் கடம்பினி படிப்பை நிறுத்தி விடுவார் என்றே நிறைய பேர் நினைத்தனர். ஆனால் அனைவரின் எதிர்பார்ப்பைத் தவிடுபொடியாக்கிவிட்டு, துவாரகாநாத், மனைவி கடம்பினியை மேலே மருத்துவம் படிக்க அனுமதித்தார். இப்படி செய்ததால் வங்கத்தின் அவரது்சமூகத்திக்கு பின்னடைவு ஏற்பட்டதாக வங்கத்தில் பலர் எண்ணினர். மேலும் வங்கத்தின் பிரபலமான பன்காபாசி பத்திரிக்கையின் பதிப்பாசிரியர், மஹேஸ்சந்திர பால் என்பவர் கடம்பினியைப் பற்றி மிகவும் தரக்குறைவாக ” விலைமகள் என்று குறிப்பிட்டு இருந்தார். இதனைப் பார்த்த துவாரகாநாத் மிகவும் கோபப்பட்டார்; அந்த பத்திரிக்கை ஆசிரியரிடம் சண்டையிட்டார். அது மட்டுமல்ல அப்படிப்பட்ட தகவல் வந்த பத்திரிக்கையின் துண்டை அந்த ஆசிரியரிடம் கொடுத்து விழுங்க வைத்தார். இதற்காக துவாரகா நாத்திற்கு நீதிமன்றம் 6 மாத சிறைத்தண்டனையும் ₹100 அபராதமும் விதித்தது.
போராட்டத்தில் படித்த பெண் கடம்பினி
பெண்களுக்கு மருத்துவராக மருத்துவ மனைக்கு செல்லும் பாதை அவ்வளவு எளிதானக இல்லை. கொல்கொத்தா மருத்துவ கல்லூரி ,கடம்பினியை அவருக்கு முறையான கல்வி தகுதி இருந்தும். அவரை மருத்துவம் பயில அனுமதிக்கவில்லை. காரணம் ,இதற்கு முன்னர் இங்கு பெண்கள் படித்ததாக சரித்திரமே இல்லை,அதனால் சேர்க்க முடியாது என்று கூறிவிட்டது. ஆனால் துவாரகாநாத் நீண்ட நெடும் காலமாக கொல்கொத்தா மருத்துவக் கல்லூரியில் பெண் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துக்கொண்டு இருந்தார். பின்னர் சட்டரீதியான அதிககாரிகளின் மிரட்டலுக்குப்பின் கடம்பினி மருத்துவப் படிக்க கொல்கொத்தா மருத்துவக் கல்லூரி அனுமதி தந்தது.மேலும் அங்கேயே மாதம் ₹ 20/= உதவித்தொகை பெற்று படித்தார்
இந்தியாவில் மருத்துவம் படித்த முல் பெண்
கடம்பினி 1886ல் இந்தியாவின் முதல் மருத்துவ பட்டதாரி என்ற பெருமை பெற்றார். எனவே அவர் இந்தியாவில் மருத்துவராக ஆனந்த்பாய் ஜோஷி போல பணி புரியலாம்.கடம்பினி வங்கத்தின் மருத்துவக்கல்லூரியில் பெற்ற பட்டத்தை கையில் வைத்துக் கொண்டு பணி புரியலானார். பின்னர் 1893ல் Dr. கடம்பினி மருத்துவத் துறையில் மேலும் பல அனுபவங்களைப் பெறுவதற்காக ஐக்கிய அரசுக்கு படிக்கச் சென்றார். அங்கே அவர் எடின்பரோ,கிளாஸ்கோ மற்றும் டப்ளினிலிருந்து பல்வேறு சான்றிதழ்களைப் பெற்றார். அங்கிருந்து இந்தியா திரும்பிய பிறகு அவர் கொஞ்ச காலம் லேடி டப்பெரின் மருத்துவமனையில் பணி புரிந்தார். பின் தனியாக மருத்துவமனை துவங்கி அதில் மருத்துவ சேவை செய்தார்.
– பேரா.சோ.மோகனா
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.