Colored pencil illustration of poet S. Lingarasu alongside symbolic temple imagery and philosophical scenes, representing his Tamil poem "Kadavula Illai Karpithama?" questioning faith, belief, and human conduct.

ச.லிங்கராசுவின் “கடவுளா இல்லை கற்பிதமா?” கவிதை

ச.லிங்கராசுவின் “கடவுளா இல்லை கற்பிதமா?” கவிதை

கண்ணையும் கருத்தையும்
கவர்ந்திழுப்பதை
கலை என்று
சொல்கிறோம்
கலை கலைக்காகவா இல்லை
மக்களுக்காகவா? அது
ஒருபுறம் பயணிக்க
வட கலை தென்கலைகள்
நூற்றாண்டு கால வாதப் பிரதிவாதங்களாக இன்றும்
தொடர்கிறதெனின் நாம் இன்னும்
பழமையைப் போற்றுகிறோம் என்று
பெருமை கொள்ளலாமா?

இறை நம்பிக்கை உண்மை எனில்
ஏன் இந்த மனிதர்கள்
இப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்கள்?
கடவுள் ஒரு கற்பிதம் தான் என்று
கங்கணம் கட்டிக் கொள்கிறார்களா?
வட கலை தென்கலை உரசலில்
நல்லவேளை கொலை விழ வில்லை.
பாசுரம் பாடும் வாயில்
பச்சையாக அர்ச்சனைகள்
பாமரனும் வெட்கப்படுவான்

உயர்ந்த நிலையில் நாம்தான்
என்று உரத்து குரல் கொடுப்பவர்கள்
ஏன் மற்றவர்க்கு பேசுபொருளாகி
பேயாட்டம் ஆடவேண்டும்?

📚 எழுதியவர்:

ச.லிங்கராசு

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *