Kadavulai Thedi Poem By Priya Jeyakanth பிரியா ஜெயகாந்தின் கடவுளைத் தேடி கவிதை




ஏழையின் தேடல் செல்வம் எனும் கடவுள்
செல்வந்தனின் தேடல் பாதுகாப்பு எனும் கடவுள்
மருத்துவனின் தேடல் நோயாளி எனும் கடவுள்
நோயுற்றவனின் தேடல் ஆரோக்கியம் எனும் கடவுள்

குழந்தையின் தேடல் தாய் எனும் கடவுள்
தாயின் தேடல் பாசம் எனும் கடவுள்
அனாதையின் தேடல் உறவு எனும் கடவுள்
துணையிழந்தவனின் தேடல் அன்பு எனும் கடவுள்

கண் இழந்தவனின் தேடல் பார்வை எனும் கடவுள்
ஊனமுற்றவனின் தேடல் ஊன்றுகோல் எனும் கடவுள்
பசித்தவனின் தேடல் உணவு எனும் கடவுள்
புசித்தவனின் தேடல் உறக்கம் எனும் கடவுள்

ஆசிரியரின் தேடல் சிறந்தமாணவன் எனும் கடவுள்
மாணவனின் தேடல் கற்றல் எனும் கடவுள்
அரசியல்வாதியின் தேடல் பதவி எனும் கடவுள்
தொண்டனின் தேடல் அங்கீகாரம் எனும் கடவுள்

போட்டியாளனின் தேடல் வெற்றி எனும் கடவுள்
வெற்றியாளனின் தேடல் பரிசு எனும் கடவுள்
படித்தவனின் தேடல் உத்தியோகம் எனும் கடவுள்
வியாபாரியின் தேடல் லாபம் எனும் கடவுள்

உழைத்தவனின் தேடல் கூலி எனும் கடவுள்
விதைத்தவனின் தேடல் மகசூல் எனும் கடவுள்
விவசாயியின் தேடல் மழை எனும் கடவுள்
மழையின் தேடல் மேகம் எனும் கடவுள்
நானும் தேடுகிறேன் என் கடவுளை !

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



One thought on “கடவுளைத் தேடி கவிதை – பிரியா ஜெயகாந்த்”
  1. மனிதமே கடவுளாய் உள் கடந்து நோக்கிய பார்வை
    சிறப்பு கடவுளைத் தேடிய அலைய வேண்டாம்.. அன்பின் உருவமாய் அனைத்தும் கடவுளாய். நன்றி தோழர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *