காதலென்று பெயர் - Kadhalendru Peyar
உன் இமைகள் கொண்டு
என் விழிகளை மூடுகிறாய்…
இதழ்களால் இதழ்களில் ஒத்தடமிடுகிறாய்…
உந்தன் கூந்தலால்
எந்தன் தேகம் போர்த்துகிறாய்
உந்தன் மூச்சுக் காற்றால்
எந்தன் சுவாசம் பறிக்கிறாய்…
காலநேரமின்றிக் காதலுண்டு
தவிக்கச் செய்கிறாய்..
ஒற்றைப் புன்னகையால்
இதயத்தைச் சிதறச் செய்கிறாய்..
உந்தன் அருகாமையால்
என்னுள் சுரக்கும் வியர்வைதனை
முத்தங்களால் துவட்டுகிறாய்..
கனவெல்லாம் கதைத்திடவே
இரவெல்லாம் உறக்கம் பறித்து
உந்தன் நினைவுகளுக்கு வலுவூட்டுகிறாய்..
போதும் போதும்…
இப்படித்தான்…
உந்தன் அத்தனைச் சேட்டைகளுக்கும்
அசட்டையாய்க் காதலென்று
பெயர் வைத்துவிடுகிறாய் நீ..
பெரும் போதையெனவே
நின் காதல் எனை ஆட்டுவிக்க
பரிதவித்துப் போகிறேன் நான்..
எழுதியவர் 
சசிகலா திருமால்
கீழப்பழுவூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *