இந்த கவிதை புத்தகத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் எந்த ஆண்டு எழுதப்பட்டது என்பதை அந்த கவிதை புத்தகத்திலே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது எழுதப்பட்டது போன்றும் சமகால கவிதைகளாகவே எனக்கு தோன்றுகிறது. தெளிவாக புரியும் விதத்தில் மிக எளிமையான நடையில் எழுதப்பட்டுள்ளது. வாசிப்போருக்கு தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும் விதமாக அமைந்துள்ளது.
இதில் என்னை கவர்ந்த கவிதைகள்:-
“லயம் “
தானே
அதுவாய்
மாறி விடுவதால்
பழசாய்ப் போகின்றன
புதியன அனைத்தும்
இன்னும்
எதுவாய் மாறுவதென
தேடித்திரிகிறது
மறுபடியும்
மனசு
‘வெறுமை”
மௌனம் மௌனம் என்று
மனசு பூராவும்
முணு முணுத்தாலும்
இந்த தேசாந்திரி
ஏகாந்தமாய்
அலைந்து கொண்டிருக்கிறான்
எதையோ தேடியபடி.
“வேண்டுதலோடு”
கீழத்தெரு காளையனுக்கு
புதுக்கோவணமும்,
நாட்டாமை பெரிசுக்கு
வழக்கு சாதகமும்
நடுத்தெரு முதிர்கன்னிக்கு
விரைவாய் சில அட்சதைகளோடு,
உள்ளூர் மக்களின்
வேண்டுதல் போதாதென்று
போவோர் வருவோரெல்லாம்
நேர்த்திக் கடனை
வீசிய சோகத்தில்
பாவம்
தார் ரோட்டு பிள்ளையார்.
“பூத்திடுவாய் என் தமிழே”
பொய்கையிலே அமிழ்தெழுந்த
மென்மேலும் யென்கவிதையாய்
கைகளில் ஊற்றெடுக்கும்
என் தமிழே ! ஆயுதம் !
குழல் நீ ; யாழ் நீ ; அதைவிடவும்
உயர் நீ ; உளம் நீ ;
என்றென்றும் உயிர் நீ ;
பலம் நீ ; புயல் நீ !
மலர் நீ பூத்திடுவாய் !
நிகர என்ற பதமில்லை
யுன் முன்னே செம்மொழியே
அகரமுதல் சிகரம் வரை
அனைவருமுன் ஆழினமே!
அகம் நீ ; புறம் நீ ; அனைத்தடங்கும்
யுகம் நீ; நிலம் நீ ;
வேர் நீ ; கிளை நீ ; இடரழிக்க
செந்தியாய் வா தமிழே!
நூலின் தகவல்கள்
நூல் : “கதவடைத்துக் கிடக்கும் வீடு”
எழுதியவர் : அ. உமர் பாரூக்
வெளியீடு : நம் பதிப்பகம்
பக்கங்கள் : 106
எழுதியவர்
ஷம்ஷத்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

