கைபேசி – கவிதை
எந்த அழைப்பும் இல்லை
பதற்றம் மட்டும் இருந்தது
கைய்யில் இருந்த விரலைக் காணவில்லை
ரசிக்கவும் வெறுக்கவும் செய்திகள் இல்லை
இனிப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் இல்லை
அம்மாவுடன் அளவளாவினேன்
மகிழ்ச்சியில் அம்மா,
குழந்தைகளுடன் விளையாடினேன்,
நண்பர்களோடு உடனே பேச முடியவில்லை
நிறையவே நேரம் இருந்தது
வாங்கி வைத்தப் புத்தகங்கள் நன்றி கூறின
தொட்டு வாசித்துவிட்டாயே என்று
மனதில் அப்படி ஒரு அமைதி
இரவு ஆழ்ந்த உறக்கம்,
கை பேசி தொலைந்த நாளில்.
எழுதியவர்:
அ. ஷம்ஷாத்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

