வானம் ஒரு பிச்சைக்காரி
இருட்டைப் போர்வையாகப் போர்த்தியிருக்கிறாள்
போர்த்தியிருக்கும் துணியில்
ஆயிரம் பொத்தல்கள்
பொத்தலிருக்கும் இடத்திலெல்லாம்
அவள் மேனி வெளித்தெரிகிறது
இதைத்தான் நாம் நட்சத்திரம் என்கிறோமோ?
நிலவும் பொத்தலின் வெளியே முகமாய் வெளிப்படுகிறது
இருட்டினால் கறுப்பு நிறக் கூந்தல் தெரிவதில்லை
நகத்தின் பூச்சாக எரிநட்சத்திரங்கள் பிரகாசிக்கின்றன
அவ்வப்போது மேகங்கள் நட்சத்திரங்களை மறைத்து விடுகின்றன
சூரிய வெளிச்சம் வந்தவுடன் நட்சத்திரங்கள் மறைந்து விடுகின்றன
அதிகாலைச் செம்மை கால்களின் செம்பஞ்சுக் குழம்பை நினைவுபடுத்துகிறது
மாலைச் சூரியன் நிலவின் கண்களில் பிரதிபலிக்கிறான்
மீளவும் நட்சத்திர மேனி பிரகாசம் கொள்கிறது
…………………………………………………………………..
…………………………………………………………………..
இதனால் தான் பெண்கள் இரவில் வெளிச்சத்துடன் பூமியில்
உலா வருகின்றனரோ ?
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.