கலைவாணி இளங்கோ கவிதைஅடிவயிறு காய பசிக்கு அரிசியுமில்லை

வெற்றாய் இயக்கி பார்த்திட

மின்சாரம் கூட இல்லை

விலையில்லா மின்சார மின்னூட்டுச் சாதனம்

வாங்கினாலோ பயனும் இல்லை

குடிசை வீடுகளைக் கோபுரமாமாக்குவதாய்ப்

பெருமை பேசும் பலரோ

குடிசையாகுமா வெட்டவெளி வீடு

குடிக்க நல்ல தண்ணீருமில்லை ஏழைகளுக்கு

அகிம்சையைப் போதிக்கின்றனர்

அராஜகக்காரர்கள்

உரிமையைப் பற்றிப் பேசுகையில்

உடமையைப் பறித்துச் செல்கிறார்கள்

அதிகாரத்தை உனக்குத் தந்து

அடக்குமுறை நாங்கள் பெற்றது

மீளாத கொடுமைக்கா?

மாளாத வறுமைக்கா?

மீண்டும் ஒரு சுதந்திரம்

எடுக்கப் போவது யாரோ

கையில் இயந்திரம்!

          — கலைவாணி இளங்கோ, சிங்கப்பூர்