டான்சிங் ரோஸ் கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்ன டான்சிங் பிளான்ட் என்ற புது வகையான தாவர வகை மற்றும் பசுமையான காட்டுப் பயணம் குறித்தும்
நூறு ஆண்டுகளாக யார் கண்ணிலும் படாத செரோபீஜியா ஒமிசா என்ற காட்டுத்தாவரம் பற்றிய கண்டுபிடிக்கும் பொறுப்பை அரசாங்கம் நான்கு நண்பர்களிடம் ஒப்படைக்கின்றது. இந்த நான்கு நண்பர்கள் சாதாரண ஆட்கள் இல்லை இதற்கு முன்னதாகவே திப்பு சுல்தான் வைத்துவிட்டு போன புதைகளை அரசாங்கத்திடம் அப்படியே ஒப்படைத்து தமிழ்நாடு முழுக்க பிரபலம் பெற்றவர்கள் இந்தக் கண்டுபிடிப்பாளர்களிடம் தமிழ்நாட்டு முதல்வர் அவர்களே நீலகிரியை சுற்றியுள்ள காட்டுல ஒரு தாவரத்தை நீங்க கண்டுபிடிக்கணும் என்ற பொறுப்பை தருகிறார் இவர்களுடன் நீலகிரி தொடர் இனத்தைச் சேர்ந்த முருகன் என்ற இளைஞனுடன் இணைந்து இவர்கள் இந்த சாகச பயணத்தை தொடங்குகிறார்கள் அவர்களுடன் ஆதிரை என்ற சிறுமியும் சேர்ந்து கொள்கிறாள்.
ஆதவன், கவின், இனியன், கதிர் மற்றும் ஆதிரை,முருகன் நூறு வருஷத்துக்கு முன்னாடியே பூமியிலிருந்து சுத்தமா அழிஞ்சு போச்சு என்று அறிவித்த செடியைத் தேடி பயணம் விறுவிறுப்புடனும் சமூக பொறுப்புடனும் அற்புதமாக கதை சொல்கிறது ‘நீலமலைப் பயணம்’ னஎன்ற புத்தகம்
ஒரு செடி அழிந்தால் அதை நம்பி இருக்கிற மத்த உயிர்களும் அழிஞ்சிடும் அதனால் மொத்த இயற்கை சூழலும் பாதிக்கப்படும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் தமிழ்நாட்டில் எவ்வளவோ தாவரவியல் ஆய்வு மாணவர்களும் உலக அளவில் புகழ்பெற்ற பேராசிரியர்களும் இருக்கிறார்கள் அவர்களை விட்டுவிட்டு தங்களை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பை அரசு ஒப்படைத்து இருக்கிறது என்பதை நினைத்து இவர்களும் புறப்படுகின்றனர். ஆனால் வழியில் ஏற்படும் இடர்கள் நீலகிரி காட்டில் ஏற்படும் தடைகள் அவற்றையெல்லாம் இவர்கள் எப்படி எதிர்கொண்டனர் என்பதை அற்புதமாக சொல்கிறது நூல். அதிலும் போகும்போது ஆதிரை சொல்வதைப்போல இன்னைக்கு விண்வெளிக்கு பெண்கள் போறாங்க தமிழ்நாட்டுக்குள்ள இருக்கிற ஒரு ஊருக்கு போக கூடாதுன்னு தடுக்கிறீங்களே இது நியாயமா? என ஆதிரையின் போராட்டத்துடன் தொடங்குகிறது நாவல்.
ஆதவன் ஒரு நாள் தாங்கள் போகும் பயணம் பற்றியும் அந்த தாவரம் பற்றியும் ரகசியமாகச் சொன்னான்.
“செரோபீஜியா ஒமிசா.
இந்த தாவரத்தோட பூவுக்கு லாந்தர் பூ. பாராசூட் பூ, மெழுகுவர்த்திப் பூ என்று நிறைய பேர் இருக்கு. இதை கடைசியாக 1916 ஆம் ஆண்டு பார்த்திருக்காங்க. அதுக்கப்புறம் இப்ப தான் அந்த பேராசிரியர் பார்த்திருக்கிறாரு. இடையில் நூறு வருஷமா, இது யார் கண்ணிலேயும் படலை. அதனால தான் இது சுத்தமா அழிஞ்சுப் போச்சுன்னு, அறிவிப்பு செஞ்சிருக்காங்க. இதுபத்துன மத்த விவரத்தை எல்லாம் இணையத்தில் இருந்து சேகரிச்சுக்கோங்க” என்று.
ஆதிரையை அழைத்துச் செல்வதில் தான் சிக்கல் வருகிறது அப்போது ஆதவன் சொல்வான் “எதுக்கும் வாய்ப்பே கொடுக்காம, வெளியிலேயே விடாம, வீட்டுக்குள்ளே முடக்கி வைக்கிறது, தப்பில்லையா கவின்? அப்புறம் எப்படித்தான் அவளோட தனித் திறமை வெளிப்படும்? “என்றும் “ஒரு பொண்ணுக்கு அவளோட திறமை வெளிப்படுத்த நாம் ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தோம் என்கிற மகிழ்ச்சி நமக்கு கிடைக்கட்டும் கவின்” என்று சொல்லும் இடமும் நிகழ்ச்சி.
ஆதவன், கவின், கதிர், இனியன், ஆதிரை மற்றும் முருகன் தன் பயணத்தை மகேந்திரன் ஸ்கார்பியோ காரில் அமர்க்களமாக கிளம்புகின்றனர். தாவரங்கள் பற்றியும் தாவரவியலிலும் பெரிய ஆர்வம் இருக்கும் ஆதரைக்கு போற வழி எல்லாம் மரங்கள் பற்றியும், செடிகள் பற்றியும் விளக்கமாக சொல்லி வருவாள் . அதில் “அந்தக் காலத்திலிருந்து ஒவ்வொரு பெரிய கோவிலையும் தலைமரம்ன்னு ஒன்னு வளர்த்து வந்திருக்காங்க, அதுக்கும் பூஜை எல்லாம் போடுவாங்க, அப்படி கோவில்ல சாமி மாதிரி வச்சு பாதுகாத்தால தான் இன்னும் சில மரங்கள் அழியாமல் இருக்கன்னு அடிக்கடி நினைச்சுப்பேன். அந்த காலத்துல நம்ம ஆளுங்க மரத்தை தெய்வமா? கும்பிட்டு இருக்காங்க அதனால கூட கோவில்ல வச்சு வளர்த்திருக்கலாம்”.
இப்ப கூட நாம் நிறைய கோயில்களில் பார்க்கலாம் சிறு தெய்வ வழிபாடுகளில் பெரும்பகுதி மக்கள் வேப்பமரம் அரச மரத்தை தான் தெய்வமாக கும்பிடுகிறார்கள்.
வழி நெடுகிலும் உள்ள மரங்களைப் பற்றியும் பேசிக் கொண்டு வருகையில் பாக்கு மரம் பற்றியும் பேசுவார்கள்.
ஆதிரைக்கு ஒரு சந்தேகம் வரும் “கடல் மட்டத்திலிருந்து இத்தனை மீட்டர் உயரம்னு, எல்லா பலகைகளும் எழுதி இருக்காங்களே! மலையோட உயரத்தைக் கடலை வச்சி, ஏன் கணக்கு பண்றாங்க? ” என்று கதிரிடம் கேட்டாள். ஆனால் அது கதிருக்கு தெரியாது.
ஆதவன் எளிமையா எல்லோருக்கும் புரியும்படி அறிவியல் விளக்கம் சொல்வான்.
இப்படி ஜாலியாக போய்க் கொண்டிருக்கும் பயணத்தில் திடீரென நான்கு ஆண்களுடன் ஒரு பெண் வந்ததை கிண்டலடித்து போகிற போக்கில் ஒரு சிலர் சொல்வது பெரும் மனவேதனைக்கு ஆட்படுத்தும்.
அப்போது “மத்தவங்களை நம்மால் திருத்த முடியாது. அட்லீஸ்ட் நம்ம வாழ்க்கையிலாவது, நாம இந்த மாதிரி எந்த பொண்ணையும் கேவலமாகப் பேசவோ, நடத்தவோ கூடாது; அவங்க உணர்வுகளை மதிச்சு நடக்கணும். அப்படின்னு உறுதிமொழி எடுத்துக்கிட்டு அதை கடைப்பிடிப்போம்” என்பான் கதிர்.
இவர்களின் நீலமலைப் பயணம் இனிதே முடிந்ததா? அவர்கள் தேடிச் சென்ற தாவரத்தை கண்டுபிடித்தார்களா? இனிமேல் வரும் பிரச்சினைகளை எப்படி எதிர்கொண்டார்கள்? என்பதை விறுவிறுப்பாக நகர்த்திச் செல்கிறது நாவல்.
அவசியம் குழந்தைகள் வாசித்தால் அவர்களுக்குள் ஒரு புத்துணர்ச்சி ஏற்படும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. புதிய கண்டுபிடிப்புகளையும், புதிய ஆராய்ச்சிகளையும் தொடங்குவதற்கு ஒரு முன்மாதிரியாக இந்த நூல் அமையும்.
இந்த புத்தகத்தை எழுதிய
ஞா.கலையரசி அவர்களுக்கும் புத்தகத்தை வெளியிட்ட புக்ஸ் ஃபார் சில்ட்ரனுக்கும் வாழ்த்துக்களும்..
நூல் விவரம்:
புத்தகத்தின் பெயர்: நீலமலைப்பயணம்
ஆசிரியர்: ஞா.கலையரசி
வெளியீடு :புக்ஸ் ஃபார் சில்ட்ரன்
விலை: ரூ.90
நூல் அறிமுகம் எழுதியவர்:
அன்புடன்
அமுதன் தேவேந்திரன்
9.6.2024
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
என் சிறார் நாவலான நீலமலைப் பயணம் குறித்துச் சிறப்பான விமர்சனம் கண்டு மகிழ்ந்தேன். மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.