மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு புத்தக விமர்சனம்.. “ஜிகர்தண்டா பள்ளிகள்” புத்தகம் இன்று மதியம் தான் என் கைக்கு வந்தது…பேரிலேயே உணவு சேர்ந்திருப்பதால் சுடச்சுட படித்து விட்டேன்.படித்ததும் எழுதி விட வேண்டும் அல்லவா
குழந்தை சார்ந்து பள்ளி சார்ந்து கல்வி சார்ந்த யோசிக்க கூடிய மனிதர்கள் எங்கு சென்றாலும் அதை கல்வியோடு குழந்தைகளோடு இணைத்துப் பார்ப்பார்கள் அப்படி ஒரு புத்தகம் தான் ஜிகர்தண்டா பள்ளிகள்
வீட்டில் நான்கு பேர் இருக்கிறார்கள் நான்கு பேருக்கும் ஒரே உணவு பிடிக்குமா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.இன்று தம்பிக்கு இட்டலி பிடிக்கும் என்று செய்தால் நாளை அண்ணனுக்கு தோசை பிடிக்கும் என்று செய்தாக வேண்டும்.அதிலும் தாத்தா பாட்டிகள் இருந்தால் அவர்களுக்கு என்று தனியாக சமைக்க வேண்டும்.
இப்படி ஒரு வீட்டில் 4.5 நபர்கள் இருந்தால் அவர்களுக்குள்ளேயே தனித்தனியான சமையல் தனித்தனியான ருசிகள் விருப்பங்கள் இருப்பது இயற்கை…அப்படி இருக்கும்போது ஒரே வகுப்பறையில் 40 குழந்தைகள் இருக்கும் இடத்தில் ஒரே மாதிரியான பாட புத்தகம் ஒரே மாதிரியான செயல்முறை பயிற்சி ஒரே மாதிரியான டீச்சிங் மிதாலஜி எப்படி சாத்தியம்…
பொதுவாக சொல்வார்கள் குழந்தைகளுக்கு காய்கறிகளை பழக்கப்படுத்துங்கள் என்று சொல்வதுண்டு எல்லா காய்கறிகளும் பிடிக்காமல் போக வாய்ப்பில்லை ஏதோ ஒன்னு ரெண்டு பிடிக்காம இருக்கும்..அதை நாம் வித்தியாசமாக செய்து கொடுக்கும் பொழுது குழந்தைகள் ஒரு நாளாவது சாப்பிட்டு பார்ப்பார்கள்…
அதுபோல தான் எல்லா பாடங்களும் குழந்தைகளுக்கு வராமல் போகாது ஏதோ ஒன்று இரண்டில் கொஞ்சம் தடைகள் இருக்கலாம் அதை எப்படி நிவர்த்தி செய்ய வேண்டும் என்பது ஆசிரியர்கள் யோசிக்க வேண்டிய ஒரு விஷயம் என்பதை இந்த புத்தகம் ஆணித்தரமாக சொல்கிறது…
பொதுவாகவே கற்றல் குறைபாடு என்பது வாசித்தலில் இருந்து தான் ஆரம்பிக்கிறது என்று நான் நினைக்கிறேன்…படக் கதைகள் சின்ன சின்ன வரிகள் பெரிய பெரிய படங்கள் கொண்ட கதைகள் குழந்தைகளை ஈர்க்க வைக்கும்..
இதில் இன்னொரு சிக்கல் இருக்கிறது பாடங்களை குறிப்பிட்ட நேரத்தில் முடித்தாக வேண்டும்..அப்போது இந்த கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகள் அவர்களை தேற்றிக்கொண்டு வரக்கூடிய நேரம் இருக்குமா என்றால் கொஞ்சம் சந்தேகம் தான்…
பாடத்தை சரியான நேரத்தில் முடிக்கவில்லை என்றால் கேள்விகள் நம் மீது ஏவப்படும்…
இத்தனை இத்தனை தடைகளை தாண்டி ஒரு குழந்தையை வாசிக்க வைக்க ஒரு குழந்தையை தேர்ச்சி பெற வைக்க புரிய வைத்து தேர்ச்சி பெற வைக்க ஆசிரியர்கள் முற்படுகிறார்கள் என்பது தலை வணங்கக் கூடிய ஒரு விஷயம்…
வாசியுங்கள் வாசித்த பின்பு யோசிங்கள் ஏதாவது ஒரு வழி கிடைக்கும்…
நூலின் விவரங்கள்:
புத்தகம் : ஜிகர்தண்டா பள்ளிகள்
ஆசிரியர் : கலகல வகுப்பறை சிவா
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 48
விலை: ரூ.50
எழுதியவர் :
✍🏻 சுதா பழனிசாமி
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
