Kalam Pesum Kanitha En Article By Pesum Prabhakaran பேசும் பிரபாகரனின் காலம் பேசும் கணித எண்

காலம் பேசும் கணித எண் – பேசும் பிரபாகரன்




காலங்களை பிரிப்பதன் மூலம் மழை, வெயில் காலங்களை அறிந்து நமது முன்னோர்கள் பயணித்தனர். காலங்களை கணிப்பதன் மூலம் இயற்கை மாற்றங்களை கண்டறிந்து வரவிருக்கின்ற ஆபத்துகளையும், ஆதாயங்களையும் அறிந்து கொண்டனர். சூரியனும் சந்திரனும் மனிதனின் கண்களுக்கு சாதாரணமாக தெரிகின்ற கோள்கள். இந்தக்கோள்களின் இயக்ககங்கள் மனிதனின் வாழ்க்கைக்கும் பூமியின் இயக்கத்திற்கும் தேவையான ஒன்றாகும்.Kalam Pesum Kanitha En Article By Pesum Prabhakaran பேசும் பிரபாகரனின் காலம் பேசும் கணித எண்ஒரு வருடத்தினை 12 மாதங்களென்றும், சராசரியாக ஒவ்வொரு மாதத்தின் நாட்களும் 30 நாட்களென்றும், ஒவ்வொரு மாதமும் 4 வாரங்களை கொண்டதென்றும், ஒவ்வொரு வாரமும் 7 நாட்கள் கொண்டதென்றும், ஒவ்வொரு நாளும் 24 மணி நேரம் கொண்டதென்றும் பிரித்து வாழ்ந்தார்கள்.

நமக்கு 12 மாதங்கள், மாதத்திற்கு 30 நாட்கள், வாரத்திற்கு 7 நாட்கள் என்பது வெறும் எண்களாக தெரியலாம். ஆனால் இந்த எண்களை கண்டறிய உலகத்தின் பல்வேறு நாகரீகங்கள் பல்வேறு ஆண்டுகளை தியாகம் செய்துள்ளனர். ஒரு வருட காலத்தின் முக்கிய கூராக 12 மாதங்களும், மாதத்தின் முக்கிய கூராக 30 நாட்களும், வாரத்தின் முக்கிய கூராக 7 நாட்களும் காணப்படுகின்றன.Kalam Pesum Kanitha En Article By Pesum Prabhakaran பேசும் பிரபாகரனின் காலம் பேசும் கணித எண்இங்கு காணப்படும் எண்களான 7,30 மற்றும் 12 என்ற எண்களின் பெருக்குத் தொகையானது 2520 என்று கிடைக்கும். காலங்களின் பெருக்குத் தொகையால் கிடைத்த எண் ஆகையால் 2520 என்ற எண்ணை காலம் பேசும் கணித எண் என்று அழைக்கலாம்.

மேலும் 2520 என்ற எண்ணானது ஒரு அதிசய எண்ணாகவே பார்க்கப்படுகின்றது. பொதுவாக கணிதத்தில், எந்த எண்ணையும் 1 முதல் 10 வரை உள்ள அனைத்து எண்களாலும் மீதியின்றி வகுக்க அதாவது பிரிக்க இயலாது. ஆனால் இந்த அதிசய எண் 2520 வினை 1 முதல் 10 வரை எந்த எண்ணாலும் மீதியின்றி வகுக்கலாம்.
2520 ÷ 1 = 2520
2520 ÷ 2 = 1260
2520 ÷ 3 = 840
2520 ÷ 4 = 630
2520 ÷ 5 = 504
2520 ÷ 6 = 420
2520 ÷ 7 = 360
2520 ÷ 8 = 315
2520 ÷ 9 = 280
2520 ÷ 10 = 252
360 பாகையினை ஒரு சுற்று அல்லது ஒரு வட்ட சுற்று என்று கூறுவர் இதனை ஒரு முழுப்பாகை என்றும் அழைப்பர்.

ஒரு வருடத்திலுள்ள 12 மாதங்களில் மாதத்திற்கு 30 நாட்கள் என்று எடுத்துக்கொண்டால் 360 எனக் கிடைக்கும் . ஒரு வருடத்தில் நான்கு மாதங்களில் 31 நாட்கள் வருவதால் தான் 360 வுடன் 4 சேர்க்கப்பட்டு ஒரு வருடத்தின் நாட்கள் 364 என்று குறிப்பிடப்படுகின்றது. எனவே 12 × 30 = 360 ஆகும்.

ஆகவே ஒரு முழு சுற்று என்ற வகையில் 360 பாகை பார்க்கப்படுகின்றது. ஒரு முழு சுற்றினை நாம் பொதுவாக ஒரு வட்டமாகவே பார்க்கின்றோம். வட்டத்தினை காலத்தின் அடையாளமாக பார்க்கும் பழக்கம் நமது முன்னோர்களிடத்தில் காணப்பட்டது.

ஏழு முழுசுற்றினை நாம் கண்டறிய முயன்றோமேயானால் 7 ×360 =2520 என்று கிடைக்கும். ஆகவே ஏழு வட்டத்தினை நாம் 2520 என்ற அதிசய எண்ணாகவே பார்க்கலாம்.Kalam Pesum Kanitha En Article By Pesum Prabhakaran பேசும் பிரபாகரனின் காலம் பேசும் கணித எண்இப்படி பட்ட அதிசய எண்ணான 2520 யை நாம் ஒரு வருடத்தின் மாதங்களையும்(12), ஒரு மாதத்தின் நாட்களையும்(30), ஒரு வாரத்தின் நாட்களையும்(7) மற்றும் ஒரு வட்டத்தினை(360 பாகை) காணும்போது காலம் பேசும் கணித எண்ணாக நினைவு கூற வேண்டும். இப்படிப்பட்ட காலம் பேசும் கணித எண்ணை பேசியவர் தமிழகம் உலகத்திற்கு தந்த கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.

துணைப் பார்வைகள்
https://math.stackexchange.com/questions/2177630/what-is-the-secret-of-number-2520/2177645
https://www.india.com/education/the-secret-behind-number-2520-7-reasons-why-this-discovery-by-an-indian-is-so-special-5047175/
தொடர்புக்கு [email protected]

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *