“புதியதொரு சமூகத்தை படைக்க விரும்புவோருக்கான நூல்”
மார்க்சிய ஆசான் எஸ் ஏ பி எனும் ஆளுமை எழுதிய 101 கட்டுரைகளின் தொகுப்பே காலமெனும் பெருநதி – வரலாற்றுப் பெட்டகம்.
கிராமிய கலைகள், இசையின் மகத்துவம், பெண்களின் துயரம், தீண்டாமை கொடுமை, தமிழ் சித்தர்கள், சமூகப் புரட்சியாளர்கள், தமிழ் மொழியின் சிறப்பு, தமிழர் பண்பாட்டியல் கவிதைகள், தமிழர் இலக்கியத்தின் பல்வேறு பரிணாமங்கள், சர்வதேச, தேசிய, மாநில அரசியல் போக்குகள் குறித்த மிக முக்கியமான கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளது.
விவசாய வாழ்வோடு பின்னிப் பிணைந்த நாட்டுப்புற கலைகளின் தோற்றமும் வரலாறும் அறிவியல் பூர்வமாக விளக்கும் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளது.
தாலாட்டு குறித்துப் பேசும் கட்டுரை தமிழ் தாலாட்டில் தொடங்கி, இந்திய தாலாட்டு, வியட்நாம் தாலாட்டு என எல்லை கடந்த தாலாட்டு பாடல்களை பதிவு செய்துள்ளார் நூலாசிரியர் எஸ். ஏ. பி.
நாட்டுப்புற தெய்வங்களின் வழிபாட்டின் அங்கமான மயான கொல்லை பற்றிய கதைகள் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது.
நாம் உண்ணும் உணவு குறித்து நாட்டுப்புறவியல் பாடல்களும் இடம்பெற்றுள்ளது.
வேலூர் புரட்சி, கையூர் விவசாயிகள் எழுச்சி, புன்னப்புரா-வயலார் போராட்டம், தெலுங்கானா புரட்சி, சோவியத் மற்றும் கியூபப் புரட்சி என மக்கள் எழுச்சிகளை தனது வசீகர எழுத்துக்கள் மூலம் விவரித்துள்ளார் தோழர்.
தீபாவளி, பொங்கல், கார்த்திகை திருநாள் போன்ற மக்கள் பெருமளவில் கொண்டாடும் பண்டிகைகளை குறித்தும் அலசுகிறது இந்த நூல்.
பொதுவுடமை இயக்க ஆளுமைகளான மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், இ எம் எஸ் மாவோ, பி. இராமமூர்த்தி, ஆர் உமாநாத், கே ரமணி வி, பி சிந்தன், கலைவாணர் அம்பேத்கர், ஜீவா பெரியார், பாப்புலோ நெருடா, சிங்காரவேலர் மார்சிம் கார்க்கி ஆகியோர் குறித்த வரலாற்று பார்வைகளும் என் நூலில் அடங்கும்.
இயற்கை வைத்தியம், நாட்டு மருத்துவம், மண் மருத்துவம் என மருத்துவ பயன்கள் குறித்தும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர்.
மே தினம், நீரின்றி அமையாது உலகு, டார்வின் கோட்பாட்டை ஏற்கும் போப்பாண்டவர், இலக்கியமும் புரட்சியும், இசை ஒரு அருமருந்து, பெண்ணுக்கு தாலி அவசியமா? கடவுள் மயமாக்கப்பட்ட யோகா பயிற்சி, விதவையும் கவிதையும், பெண்ணுரிமை படும் பாடு என பல்வேறு சமூக கட்டுரைகள் விரிவாக அலசப்பட்டுள்ளது.
இந் நூலில் இடம் பெற்ற கட்டுரைகள் அனைத்தும் மார்க்சிய நோக்கில் எழுதப்பட்டுள்ளதோடு அரிய தகவல்களின் பொக்கிஷம் தான் இந்த நூல்.
அனைத்து கட்டுரைகளும் தனது சொந்த வாழ்க்கை அனுபவத்தோடு கலந்து இயல்பாக உள்ளதால் இளம் தோழர்கள் எளிதாக படிக்க இயலும் என்பதில் ஐயமில்லை.
சமுதாய மாற்றம் கண்டு, புதியதொரு சமூகத்தை
படைக்க விரும்பும் அனைவரும் இந்நூலை அவசியம் வாசிக்க வேண்டும்.
நூலின் தகவல்கள்
நூல் : காலமெனும் பெருநதி
( சமூக கட்டுரைகள்)
நூலாசிரியர் : தோழர் எஸ். ஏ. பெருமாள்
விலை : ரூபாய் 440/-
வெளியீடு : AM புக் ஹவுஸ்
சென்னை – 600077
தொடர்பு எண் : 9444358351
நூலறிமுகம் எழுதியவர்
MJ. பிரபாகர்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.