அத்தியாயங்கள்10.
1.அமைதியானதுயரம். 2.விதியின்
நூலாசிரியர் அறிமுகம்: தேனி மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் ஹைவேவிஸ் அரசு மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர். தேனி மாவட்ட தமுஎகச மாவட்டக்குழு உறுப்பினர். மொழிபெயர்ப்பில் அலாதி பிரியம் கொண்டவர். ஆங்கிலக் கவிதைகளை தமிழுக்கு அதன் ஆன்மாவோடு கொண்டு செல்லவேண்டும் என்ற பேராவல் கொண்டவர். கல்கி,கணையாழி மற்றும் மின்னிதழ்களில் தொடர்ச்சியாக எழுதி வருபவர். கலீல்ஜிப்ரானின் குரலை தமிழுக்கு எடுத்துவருவது என்பது துடித்துக் கொண்டிருக்கும் ஓர் இதயத்திற்குள் சென்று அதை சற்றும் துன்புறுத்தாமல் அதன் துடிப்போசைகளை மட்டும் வேறொரு இதயத்திற்குள் கடத்திக் கொண்டுவருவது போன்ற ஓர் ஆன்மசாகசமாகும்.இந்த சாகசத்தை கச்சிதமாக கையாண்டிருக்கிறார்.
இந்நூலின் அணிந்துரையில் மறைமலை இலக்குவனார், தங்கேஸ் மொழிபெயர்ப்பாளர் அணியில் மேலுமொரு வல்லுநர்;மிகவும் எளியநடை; வழக்குச்சொற்கள்;மூலநூலின் உவமைகளையும் உணர்வுகளையும் குறைவுபடாமல் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார் என்று பாராட்டியுள்ளது குறிப்பிடத்தகுந்தது. குமுதம் பப்ளிகேஷன் மேனாள் தலைமை நிருபர் திருவேங்கிமலை சரவணன் அவர்கள் முகநூல் மூலம் கவிஞர் தங்கேசின் நண்பரானவர்.ஜுலியஸ்சீசரின் மரணத்திற்கு பின் மார்க்ஆண்டனி ஆற்றிய எழுச்சியுரையை தங்கேஸ் முகநூலில் மொழிபெயர்த்து பதிவிட்டதைப் படித்து பாராட்டியுள்ளார்.பலமுறை திரும்ப திரும்ப படித்தேன்.அற்புதமான மொழிபெயர்ப்பு.என் காதலி எழுதிய கடிதத்தைக் கூட அத்தனைமுறை படித்திருக்கமாட்டேன் என்று மனந்திறந்து பாராட்டியுள்ளார்.
விகடகவி மின்னிதழில் முறிந்த சிறகுகள் மொழிபெயர்ப்பு வெளிவந்தது. இதை நூலாக்கும் ஆவலில் திருவேங்கி அவர்கள் ஹாய்மதன் சாரிடம் கவிதை மொழிபெயர்ப்பை ஆறு பாகங்களாக்கி கொடுத்திருக்கிறார். ஐந்து பக்கங்களைப் படித்தவுடனே அற்புதமான மொழிபெயர்ப்பு, சூப்பர்,பென்டாஸ்டிக் உடனே இதை பிரசுரம் செய்யுங்கள் என்றாராம் மதன்சார். இப்படி யாரையும் அதிகம் புகழ்ந்து பேசாத மதன்சாரால் பாராட்டப்பட்ட கவிஞர் தங்கேஸ் உண்மையிலே வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்றவர்தான் என்றால் மிகையாகாது.

ஜிப்ரானை தமிழில் ஏற்கனவே பலர் மொழிபெயர்த்துள்ளனர். கவிஞர் புவியரசு, ஆ.மா.சகதீசன் இதில் குறிப்பிடத்தக்கவர்கள்.இதில் சகதீசனை ஜிப்ரானின் பித்தர் என்றே கூறலாம்.ஜிப்ரானை அதிகமாக (20 நூல்களை) மொழிபெயர்த்தவர் அவர்தான்.ஆனால் இதில் தங்கேசின் சிறப்பு என்னவென்றால் ஜிப்ரானை கவிதையாகவே மொழிபெயர்த்து கூடுவிட்டு கூடுபாயும் ஓர் உன்னதக் கலையான மொழிபெயர்ப்பிற்குள் வாசகர்களையும் அழைத்துச் செல்வதுதான். Love provided me a tongue and tears என்ற ஜிப்ரானின் கவிதையை புவியரசு அவர்கள் மொழிபெயர்க்கும் போது ‘காதல் எனக்கு ஒரு நாக்கையும் கண்ணீரையும் தந்தது’ என்று மொழியாக்கம் செய்துள்ளார்.ஆனால் தங்கேஸ் இதை ‘காதல் எனக்கே எனக்கென்று ஒரு தனிப்பட்ட மொழியையும் அதனோடு சேர்த்து கண்ணீரையும் தந்தது’ என்று மொழிபெயர்த்துள்ளார். கவிதையை கவிதையாக ஆன்ம உணர்வோடு மொழிபெயர்த்துள்ளமை இந்நூலில் நாம் பல்வேறிடங்களில் மின்னிடக் காணலாம். மூலநூலைப் படிப்பதைப் போன்ற ஆன்மாவின் உயிரோட்டம் நிறைந்த நடையில் மொழிபெயர்த்துள்ள தங்கேசின் நடைக்கு ஒரு சில சான்றுகளைக் காண்போம்.
பத்து அத்தியாயங்களுக்குமான முன்னுரையில் முத்திரை பதித்துள்ளார்.இதுவரை வந்த மொழிபெயர்ப்புகள் வசனநடையில் உரைநடையில் மொழியாக்கம் செய்ததை இவர் மறுபடைப்பாகவே கவிதையாக்கி விருந்தளித்திருப்பது சிறப்பு.
1.காதல் என்னும் ஒளிவெள்ளம்
என் இதயத்தின் உள்ளே நுழைந்த அந்தக் கணமே சிலிர்க்கிறது.
2.செல்மாவின் அழகு செம்மைக்கும் மீறியது. எந்த ஓவியனின் தூரிகையும் அதைப் பிரதியெடுத்துவிட முடியாது. எந்தச் சிற்பியின் சிற்றுளியும் அதைச் சிற்பமாக்கிவிட முடியாது.
3.அமைதி மட்டும்தானே என்றும் இதயத்தின் ஒரே மொழி? இதயங்களை இணைக்கும் சொற்கள் எப்போதும் உதடுகளிலிருந்து உற்பத்தியாவதில்லையே?
4.உனக்குத் தெரியுமா? தன் ஒரே ஒரு குழந்தையை உயிராக நேசிக்கும் ஒரு தாயைப் போல நான் உன்னை நேசிக்கிறேன்!
5.ஒரு பாடும் பறவை ஒரு கூண்டுக்குள்ளே தன் கூடமைக்காது. ஏனென்றால்
தன் குஞ்சுகள் அடிமையாவதை அது ஒரு நாளும் விரும்பாது.
6.அவளை அன்பினால் மட்டுமே அறிந்துகொள்ள முடியும்! வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது. துயரமே அவளது ஆன்மாவையும் எனது ஆன்மாவையும் ஒன்றாகப் பிணைத்திருந்தது.
7.செல்மாவிற்கும் ஜிப்ரானிற்கும் இடையே நடந்த உரையாடலை கவிதையாக மொழிபெயர்த்திருப்பது அவரின் கவிப்புலமைக்கு சான்றாகும்.
செல்மா: என் கண்களின் ஒளியாய், காதுகளின் இன்னிசையாய் என் உயிரின் விரிந்த இறக்கைகளாய் இருக்கும் நீங்கள் இனி என்ன ஆவிர்கள்?
ஜிப்ரான்: செல்மா! நீ என்னவாக இருக்க விரும்புகின்றாயோ நான் அதுவாகவே இருப்பேன்!
செல்மா: நீ ஒரு கவிஞனாய் இரு;
நான் உங்கள் துயர நினைவாய் இருப்பேன்!
ஜிப்ரான்ன்: செல்மா! உன் விருப்பமே என் செயல்; உன் வேண்டுகோள் என் கடமை.உன் காதலியின் சிறையே என் இதயம்.இந்த கிராமக் கோயிலின் மணியோசை போல் உன் பெயரை என் இதயம் ஒலிக்கும்! நீயே என் பாலைவனச் சோலை.செல்மா! செல்மா! என்றே என் மரணம் என்னைத் தழுவும்.

கலீல்ஜிப்ரான் கவிஞானி,ஆன்மாவின் கவிஞர்.இவரின் கண்ணீரையும் புன்னகையையும் களவாடாத கவிஞர்களில்லை.’முறிந்த சிறகுகள்’ என பெயரிருந்தாலும் இலக்கிய வானில் மிக உயரமாகப் பறந்தநூல் இது.இந்நூலின் துணையால் காதல் வானத்தில் பறக்காத காதலர்கள் உலகத்தில் இல்லை.இந்நூலை வாசிக்கும் போது நிச்சயம் ஒவ்வொருவருக்கும் உள்ளே உள்ள செல்மா வெளிப்படுவாள்.
துயரத்தின் மொழியால் இணைந்த இதயங்கள் ஒருநாளும் மகிழ்ச்சியின் மொழியில் பிரியாது. தூய கண்ணீரால் சுத்திகரிக்கப்பட்ட காதல் என்றென்றும் அழகானதும் புனிதமானதும் ஆகும்.
இவ்வாறு சிறந்த கவிதைவரிகளை சான்றுகாட்டினால் நூலையே மறு அச்சில் வார்க்க வேண்டியதான். ஜிப்ரானுக்
நூல் மதிப்புரை: கலீல்ஜிப்ரானின் முறிந்தசிறகுகள் மொழிபெயர்ப்பு.
ஆசிரியர்:கவிஞர் கூ.தங்கேஸ்.
எழிலினி பதிப்பக வெளியீடு
198 பக்கங்கள்.
விலை ரூ200.
பேரன்புடன்: ஆ.முத்துக்குமார்
முதுகலை ஆசிரியர், அரசு மேனிலைப் பள்ளி,
உத்தமபாளையம்.தேனி மாவட்ட தமுஎகச மாவட்டக்குழு உறுப்பினர்.
சின்னமனூர் தமுஎகச கிளைத்தலைவர்.

