கல்கி 2898 AD: செயற்கை நுண்ணறிவும் சினிமாவும்
மதங்களை அறிவியல் பயன்படுத்தப் போகிறதோ இல்லையோ அறிவியலை பயன்படுத்தி மதங்கள் புதிய அவதாரங்களை அறிவிக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை – ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்

அறிவியல் புனைகதை திரைப்படம் என்று கல்கி 2898AD திரைப்படத்தை விளம்பரம் செய்கிறார்கள்.. ஒரு பிரம்மாண்ட அறிவியல் திரைப்படம் என்று இன்டர்ஸ்டெல்லார் போல நம்பி நாம் சென்று விடக்கூடாது.. அது ஒரு அறிவியல் திரைப்படமா என்பதை ஆராயவேண்டி உள்ளது. ஆனால் திரைப்படம் செயற்கை நுண்ணறிவை ஒரு கதாபாத்திரமாக இணைத்திருப்பதால் அதற்கு பிரம்மாண்ட நவீன வடிவம் கிடைத்துவிட்டதாக சிலாகிப்பது இயற்கையே. எதிர்காலத்தில் தோன்ற போகும் விஷ்ணுவின் கல்கி அவதாரத்தை அறிவியல் பூர்வமானதாக வெளிக்காட்டுகின்ற வழக்கமான இந்துத்துவா படம் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை.
திரைப்படத்தின் அறிவியல் பகுதிகளை செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை குறித்து எழுவதற்கு கல்கி 2898AD படத்தின் கதை தேவை இல்லை தான்.. இருந்தாலும் நமக்கு சில அடிப்படைகளை புரிந்துகொள்ள கதை உதவும்.. கதை மகாபாரத காலத்தில் தொடங்குகிறது. அதாவது கிமு 1000 சொச்சத்தில் நடந்ததாக கருதப்படும் குருச்சேத்திரயுத்தத்தில் அஸ்வத்தாமன் எனும் கதாபாத்திரம் குழந்தைகளை கொலை செய்வதற்கு முயற்சி செய்யும் பொழுது கண்ணன் அவனுக்கு ஒரு சாபம் இடுவான்.. நீ நிரந்தரமாக மரணமின்றி வாழ்ந்து அவஸ்தைப்படவேண்டும் என்பது தான் அந்த சாபம். இது சாபமா வரமா எனபதில் சர்ச்சைகள் உண்டு. இந்த யுத்தத்தோடு கதை தொடங்குகிறது. அதன் பிறகு அஸ்வத்தாமன் என்னும் அமிதாப்பச்சன் உலகில் நிலைத்து வாழ்கிறார்….. கதை கிபி 2898க்கு தாவுகிறது.. இப்போது கல்கி பிறக்க இருக்கிறார். அவர் பிறப்பது உலகிலேயே மிச்சமிருக்கும் ஒரே நகரமான காசியில் அதை யாஸ்கின் என்கின்ற ஒரு அரை கடவுள் பல்லாண்டுகளாக ஆட்சி செய்து வருகிறார் அவர் தான் கமல்ஹாசன். அவருக்கு ஒரு வாரிசு இல்லை. அந்த வாரிசை உருவாக்குவதற்கு அந்த நாட்டில் அறிமுகமாகிறது PROJECT K !
இப்படிதான் அறிவியலைப் போலவே இந்த கதையை அடுத்த படியாக கொண்டு செல்கிறார்கள்.. தான் கருவிட்டிருக்கிறோம் என்பதை கல்கியின் தாய் SUM-80 ….150 நாட்களுக்கு மறைத்து தப்ப முடிகிறது.. இந்த இடத்தில் அஸ்வத்தாமனின் தேடுதல் வேட்டை தொடங்குகிறது.
இந்தக் கதையில் எங்கே சார் அறிவியல் உள்ளது. இது முழுக்க முழுக்க புராணம் ஆயிற்றே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் இங்குதான் பிரபாஸ் என்கின்ற ஒரு நடிகர் அறிமுகமாகிறார். ஒரு புத்திசாலித்தனமான செயற்கை நுண்ணறிவு கதாப்பாத்திரம் ஒன்றும் அறிமுகமாகிறது. புராணங்களால் கலக்கப்பட்ட அறிவியல் புனைகதையாக திரைப்படம் தன் அந்தஸ்தை உயர்த்திக் கொள்கிறது. இந்திய இதிகாசங்களுக்கு அப்பால் எதையுமே நாம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்பது போல கதையை இயக்குநர் நாக்அஸ்வின் நகர்த்திச் செல்கிறார்.. டிஸ்டோபியன் அறிவியல் புனைகதை என்று சொல்லலாம். இப்படி படங்கள் வந்துள்ளன. அசுர கதாநாயகர்களை வைத்துக்கொண்டு ஏராளமான திரைப்படங்களை ஆங்கிலத்திலும் தயாரித்து இருக்கிறார்கள்.
181 நிமிடங்கள் ஓடும் இந்த படத்தில் மிகவும் பொறுமையாக உட்கார்ந்து பார்க்க வேண்டியிருக்கிறது. வழக்கமான தெலுங்கு படத்திற்கே உரிய சண்டை காட்சிகளும், நீண்ட பாடல்களும், நடனங்களும் நம்ம பொறுமையை சோதிகின்றன.. பாதி கதையில் பைரவா என்கின்ற ஒரு கதாபாத்திரம் தன் உழைப்பை ஒரு மில்லியன் யூனிட் என்கின்ற பணமாக மாற்றுவதில் பொழுதை கழிகிறது.. நமக்கு பூஜி என்னும் பைரவாவினுடைய துணையாக விளங்கும் செயற்கை நுண்ணறிவின் மீது தான் ஈர்ப்பு ஏற்படுகிறது. இந்த பூஜி எதையும் செய்ய தயாராக இருக்கிறது.. இது ஒரு அனிமேஷன் தொடரிலிருந்து எடுக்கப்பட்டிருக்க வேண்டும். பைரவருக்கு அதாவது பிரபாஸ்க்கு ய நில உடமையாளர் ஏராளமான பிரச்சனைகளை கொடுக்கிறார். இந்த பிரச்சினைகளிடமிருந்து பூஜி அவரை காப்பாற்றுகிறது.. யுத்தம் என்று வருகின்ற பொழுது பைரவாவும் பூஜியும் இணைகிறார்கள். ஒரு பிரம்மாண்டமான இயந்திரமாக பூஜி தன்னை மாற்றிக்கொள்கிறது. ரோபோ யுத்தம் போல அஸ்வத்தாமனுக்கு எதிராக அவர்கள் போராடுகிறார்கள். கல்கியைக் காப்பாற்றிய படி முதல்பாதியின் உச்சகட்டமாக யாஸ்கின் என்கிறார் தீயார் அறிமுகம் கமல்ஹாசன் அபத்தமான திருப்பத்தை ரசிப்பது ..

SUM80 எனும் சுமதி சிறந்த வாழ்க்கை மற்றும் தாய்மைக்காக ஏங்கி தவிக்கும் ஆய்வக எலியாக தன்னை மாற்றிக் கொள்வது.. அஸ்வத்தாமன் அதை உணர்ந்து கொண்டு தன்னுடைய இறுதிப்போருக்கான நேரம் வந்துவிட்டது என்பதை அறிவிப்பது என்று.. போகிறது கூடவே முகமூடி அணிந்த ரவுடிகள் நூற்றுக்கணக்கான கருப்பு உடையில் ஷம்பாலா ராணுவத்துடன் கொம்புகளை பூட்டுகின்ற விஷயங்கள் அடுக்கடுக்காக ஒரு ஃபேன்டசி போல நமக்கு முன்பு இந்திய திரைப்படங்களுக்கு உண்டான காதை கிழிக்கும் பேர் இரைச்சலுடன் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.. இவற்றையெல்லாம் கடந்து செயற்கை நுண்ணறிவின் உதவியோடு பிரபாஸ் வெற்றி அடைய வேண்டும்.
திரைப்படங்களில் செயற்கை நுண்ணறிவு என்கிற விஷயம் செயற்கை நுண்ணறிவு என்கிற ஒன்றே வருவதற்கு முன் உலக சினிமாவில் அறிமுகமாகிவிட்டது. முதன் முதலில் மெட்ரோ போலீஸ்எ ன்கிற ஜெர்மன் படத்தில் 1927ல் மரியா எனும் கதாபாத்திரத்தை போலவே இன்னொரு மரியாவாக ஒரு ரோபோட் அறிமுகமானது.. அது முதல் 2024 ரெபெல் மூன் திரைப்படம் வரை வரிசையாக செயற்கை நுண்ணறிவு ஏறக்குறைய 200 திரைப்படங்களில் வந்திருக்கிறது.
என்னை பொறுத்த வரையில் செயற்கை நுண்அறிவின் சரியான அர்த்தத்தோடு முதலில் வந்த திரைப்படம் THE INVISIBLE BOY.. 1957 எடுக்கப்பட்ட படம். இரண்டாம் உலக யுத்தத்தின் உடைய கொடுமையான தாக்குதல்களுக்கு நடுவில் சிதிலங்கள் இடையே மாட்டிக்கொண்ட ஒரு குழந்தை தான் கண்டுபிடிக்கின்ற செயற்கை நுண்ணறிவோடு வாழ்ந்து வருகின்ற அதிசயத்தை இந்த படத்தில் நாம் காண்கிறோம். ராபி என்கின்ற அந்த செயற்கை நுண்ணறிவு இந்த குழந்தையை உயிரோடு வைத்திருப்பதோடு வழி நடத்தவும் செய்கிறது. இந்த ராபி விமானத்தில் இருந்து விழுந்திருக்க வேண்டும் என்று அந்த சிறுவன் நம்புவான்… அந்த சிறுவனை உயிரோடு மிஞ்சி இருக்கின்ற அகதி முகாம்களில் வாழும் அவனுடைய தாயோடு இணைத்து வைப்பதற்கு பெருமுயற்சி செய்தும் எப்படியோ அதில் வெற்றிகண்டு அவனிடமிருந்து விடைபெறுகின்ற அந்த செயற்கை நுண்ணறிவு ரோபோ ராபி மறக்க முடியாத ஒரு அம்சமாகும்.

தொண்ணூறுகளில் வந்த டெர்மினேட்டர்.. டூஸ்டார்ட் டேக்..நிர்வாணா லாஸ்ட் இன்ஸ்பேஸ்.. போன்ற படங்கள் முன் வைக்கின்ற அறிவியல் தொழில்நுட்பமும் எதிர்காலம் குறித்த கருத்துக்களும் நம்மை பிரமிக்கவைப்பவை. 1990 ஆம்ஆண்டு தி கிளாஸ் ஆஃப் 1999.. என்று ஒரு படம் வந்தது.. மார்க் லெஸ்டர் இயக்கிய படம் இந்த படம். சோவியத் அறிவியல் எழுத்தாளர் லியோன்ச் எழுதிய தி கிளாஸ் ஆஃப் 1984 என்கிற 1948இல் எழுதப்பட்ட கதையினுடைய திரைப்பட வடிவம் வட அமெரிக்காவில் ஒரு உயர்நிலைப்பள்ளியில் நடக்கின்ற சம்பவங்களை இது அடிப்படையாக கொண்டது. இந்த சம்பவங்களின் ஊடாக சோவியத் அமெரிக்க யுத்தம் முன்னிலைப்படுத்தப்படும் கல்வியாளர்கள் உலகெங்கிலும் ஒன்றுகூடி அடுத்த; பெரிய யுத்தம் நடந்து விடக்கூடாது என்பதற்காக உலகங்களும் இருக்கிற அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துகின்ற இயற்கையையும் அமைதியையும் நேசிக்கிற ஒரு செயற்கை நுண்ணறிவை உருவாக்குகிறார்கள்.. இந்த செயற்கை நுண்ணறிவுக்கு பாடம் நடத்துவதற்காக பயிற்சி அளிப்பதற்காக ரஷ்யாவிலிருந்து யாருக்கும் தெரியாமல் ஒருவர் அமெரிக்கா செல்கிறார்.. இந்த கதையின் அற்புதத்தை இன்று வரை மறக்க முடியவில்லை.

நான் சமீபத்தில் ஃபிசிக்ஸ் வாலா என்ற ஒரு படம் பார்த்தேன். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அற்புதமான அறிவியல் படம். அமேசான் பிரைமில்இல் இலவசமாக இந்த படத்தை நீங்கள் பார்க்கலாம்.. சிறுவயதிலிருந்து ஏதோ ஒரு வகையில் அறிவியலையும் கணிதத்தையும் சக மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்து அதன் மூலம் வரும் வருவாயில் பள்ளிக்கல்வியை முடிக்கிறான் ஒரு மாணவன். அவனுக்கு கல்லூரியில் இடம் கிடைக்கிறது. ஆனால் கட்டுவதற்கு அவரிடம் பணம் இல்லை. அவன் ஒரு சேரில் கூலி தொழிலாளியின் குழந்தையாக வளர்கிறான். ஆனால் அவன் இயற்பியலை அளவுக்கு அதிகமாக நேசிக்கிறான்.
நீட் தேர்வுக்காக ஒரு மையத்தை ஏற்படுத்தி ஒரு பெரிய கார்பரேட் ஆசிரியர் பணிக்காக விண்ணப்பங்களை வரவேற்கிறது. எந்த விண்ணப்பமும் வழங்காமல் அவன் நேரடியாக நேர்காணல் நடக்கும் இடத்திற்குச் செல்கிறான்.. அங்கேந டக்கும் சம்பாஷணைகள் பார்க்க பார்க்க பரவசமூட்டுபவை. அந்த முழு கேள்வித்தாளின் அனைத்து விடைகளை தன்னை உதாசீனப்படுத்தும் கல்வி முதலாளிக்கு மூஞ்சியில் அறைவது போல அவன் பேசுகின்ற இடம்… உலகின் மாமனிதர்கள் இயற்பியலாளர்கள்.. எழுந்து நின்று கைதட்ட வேண்டிய சிலிர்ப்புகளை நமக்கு உருவாக்கும் இடமாகும்.
கணிதவியலாளர் நோபல் அறிஞர் ஜான் நேஷ்-வாழ்க்கை திரைப்படமான ப்யூட்டி ஃபுல் மைன்ட் போல பலமுறை நம்மை அழவைக்கும் அறிவியல் திரைப்படங்களும் உண்டு.. இன்டர்ஸ்டெல்லார் போல நம்மயே அயல்கிரகங்களுக்கு இட்டுச்செல்கின்ற கால பயணம் மேற்கொள்ளும் திரைப்படங்களும் உண்டு.. ஆனால் இந்திய அளவில் அறிவியல் புனைகதைகள் என்பவை வராமலில்லை. நம்முடைய தமிழின் எந்திரன், தசாவதாரம் போன்றவைகள் அறிவியல் புனைகதைகளின் அடிப்படைகளை நம்மால் பார்க்க முடியும்.. ஆனால் பிரபாஸ் எனும் கதாநாயகனை முன்வைத்து பாகுபலி போலவே எடுக்கப்பட்டிருக்கும் கல்கி திரைப்படம் அறிவியலை விட புராணத்தை அதிகம் பேசுகிறது..
இந்த திரைப்படம் இளைஞர்களை புராணங்களை நோக்கி ஈர்த்து வரலாம்.. ஆனால் புராணவாதிகளை அறிவியலை நோக்கி இழுத்து வராது.எது எப்படியோ கல்கி என்பது எதிர்காலத்தில் அந்த மகாவிஷ்ணு எடுக்கப் போகும் அவதாரம்.. எனவே இதோ கல்கி பிறந்த .. இடம் நாங்கள் கண்டுபிடித்து விட்டோம் ..
இடித்து பார்த்து விடுவோம் என்று தேவாலயங்களையும் மசூதிகளையும் தேடி யாரும் வருவதற்கு வாய்ப்பு இல்லை என்றே நம்புகிறேன்..
கட்டுரையாளர் :

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


உண்மைக்கும் அறிவியலுக்கும் மாறாக சிந்திப்பவர்கள் ….
இந்துதுவா கருத்தியல் கொண்ட புராண குப்பைகளை நவீன கருவிகளால் (சினிமாவாக) அறுவடை செய்ய (பாகுபலி,RRR)
ஆரம்பித்துள்ளார்கள்.
காலத்தால் கட்டவிழ்க்கப்படும்
நவீன தாக்குதல்.