கல்பாக்கம் அணுமின் நிலையம் | Kalpakkam Atomic Power Station | யுரேனியம் | அணு உலைகள் | Ayesha Era Natarasan | https://bookday.in/

உலகையே திரும்பி பார்க்க வைத்த நம் கல்பாக்கம்

உலகையே திரும்பி பார்க்க வைத்த நம் கல்பாக்கம் அணுமின் நிலையம்

இதுவரை இந்தியாவின் அணு உலைகள் அயல்நாட்டில் இருந்து தருவிக்கப்பட்ட அணு உற்பத்தி சாதனங்களையே நம்பி இருந்தன. முதல் முறையாக கல்பாக்கம் விஞ்ஞானிகள் PROTOTYPE FAST BREEDER REACTOR [PFBR] எனும் தொழில்நுட்ப சாதனையை நம் நாட்டிலேயே தயாரித்து அசத்தியிருக்கிறார்கள். ரஷ்யாவுக்கு பிறகு பொதுமக்கள் சேவைக்கு முதல்முறையாக 500 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் வரலாற்று சிறப்புமிக்க சாதனையை நிகழ்த்தி உலகை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்கள்… அப்படி என்ன நடந்திருக்கிறது.. இதில் ஆபத்து இல்லையா.. என பல வகையான கேள்விகள் எழுகின்றன. எதற்கெடுத்தாலும் ராக்கெட் விஞ்ஞானிகளையே எழுதி சிலாகிக்கும் நம் பத்திரிக்கைகள் இந்த சாதனை குறித்து பத்தாம் பக்கத்தில் கூட எழுதும் திராணி அற்றவையாக இருப்பது வேதனை அளிக்கிறது.

 கல்பாக்கம் அணுமின் நிலையம் | Kalpakkam Atomic Power Station | யுரேனியம் | அணு உலைகள் | https://bookday.in/

இந்தியாவின் அணுசக்தி பல விமர்சனங்களை உள்ளடக்கியது என்பதில் இரு வேறு கருத்துக்களுக்கு இடமில்லை. நம் நாட்டில் அணுசக்தி திட்டத்தில் பணிபுரியும் இந்திய விஞ்ஞானிகள் எதிர்கொண்ட சோதனைகள் மற்றும் இன்னல்கள் பற்றிய முழுமையான ஒரு புத்தகம் இதுவரையில் எழுதப்படவில்லை. பக்கசார்பற்று அவர்களின் வெற்றி தோல்விகளை அறிவியல் முறையில் அணுகுகின்ற ஒரு பார்வை நம்மிடம் இல்லை. 1974 மற்றும் 1994 இரண்டு சக்திவாய்ந்த அணுகுண்டுகளை சோதனை செய்ததால் உலகநாடுகளில் விஞ்ஞானிகள் நம்மை சந்தேக கண்ணோடுதான் பார்க்கிறார்கள்.. இந்தியாவின் அணுசக்தி இலட்சியங்களை இந்த உலகம் தயவுதாட்சண்யமின்றி புறம் தள்ளியது. அணுசக்தி நாடுகளிடம் இருந்து நாம் பெற்று வந்த தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகள் நிறுத்தப்பட்டன. நாட்டின் மீது பொருளாதாரத் தடைகள் கூட விதிக்கப்பட்டன. இவற்றையெல்லாம் பற்றி கூட எந்த பத்திரிகையும் விரிவாக எழுதியதில்லை..

அணுவியல் விஞ்ஞானி என்றால் அவரு ஏதோ இரண்டாந்தர விஞ்ஞானி போலவும் ஒளித்து வைக்கப்பட வேண்டியவர் என்பது போலவும் ஒரு வகையான பாகுபாடு நம்முடைய நாட்டில் எப்படி நுழைந்தது என்றே தெரியவில்லை. இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் வரை நாட்டின் அணு ஆயுத கிடங்கு மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் தொடர்பான பல்வேறு விஷயங்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு அதன் பிறகு முழுமையாக அயல்நாடுகள் பார்க்கும் வண்ணம் நாம் அனைத்து ரகசியங்களையும் திறந்து வைத்துவிட்டோம்.. இந்தியாவின் அணுசக்தி என்பது உலக அரசியலில் தனக்கென்று ஒரு முக்கிய இடத்தை பிடிப்பதற்கான துணிச்சலான முயற்சிகளை நேருவின் வழிகாட்டுதல் முதலே.. தீவிரமாக பிடிவாதமாக எடுத்துச் செல்லும் வரலாறு ஆகும்.

 கல்பாக்கம் அணுமின் நிலையம் | Kalpakkam Atomic Power Station | யுரேனியம் | அணு உலைகள் | https://bookday.in/

இந்த வரலாற்றைப் பற்றி விரிவாக அறிவதற்கு இரண்டு புத்தகங்கள் இருக்கின்றன.. NUCLEAR POWER IN INDIA-A CRITICAL HISTORY [என்.சர்மாவும், ஆர்.பானர்ஜியும் இணைந்து எழுதியது].. மற்றொரு புத்தகம் அஜய்குமார் சதுர்வேதிஎழுதிய NUCLEAR ENERGY IN INDIA ”SENERGY SECURITY MATRIX: AN APPRAISAL.. என்னும் நூல்.. மற்ற நாடுகளைப் போல நாம் நம் மின் உற்பத்தியை முழுதும் நிலக்கரியை நம்பி இருக்க முடியாத நிலையில் இருக்கிறோம்.. சமீபத்திய நிலக்கரி ஊழல்களை மறந்துவிடுவோம்.. நிலக்கரி எரிவாயு, நீர், மின்சாரம் மற்றும் காற்றாலை மின்சாரம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக ஐந்தாவது இடத்தில்தான் நம் நாட்டில் அணுசக்தி என்கிற ஒன்று இருக்கிறது.

 கல்பாக்கம் அணுமின் நிலையம் | Kalpakkam Atomic Power Station | யுரேனியம் | அணு உலைகள் | https://bookday.in/

நம் நாட்டில் எட்டு அணுமின் நிலையங்களில் 23 அணு உலைகள் உள்ளன. மொத்தமாக நிறுவப்பட்ட திறன் 7380 மெகாவாட் ஆகும். மேலும் 10 அணு உலைகள் 8000 மெகாவாட் உற்பத்திதிறன் கொண்ட கட்டுமானத்தில் உள்ளன.. எனவே நம் நாட்டின் ஒட்டுமொத்த மின்உற்பத்தியில் 10% கூட நாம் இன்னும் அணு உற்பத்திக்கு செல்லவில்லை. 2011 ஆம் ஆண்டு ஜப்பானின் புகுஷிமா அணுசக்தி பேரழிவை தொடர்ந்து உத்தேச அணுமின் நிலைய தளங்களில் ஏராளமான அணுசக்தி எதிர்ப்பு போராட்டங்கள் நடந்தன. மகாராஷ்டிராவின் ஜைதாபூர் அணுமின்நிலையம், தமிழ்நாட்டின் கூடங்குளம் அணுமின்நிலையம் இவற்றுக்கு எதிரான போராட்டங்கள் உலக பிரசித்தி பெற்றவை. நம்முடைய நாட்டின் உச்சநீதிமன்றம் அரசாங்கத்தின் சிவில் அணுசக்தித்துறைக்கு எதிராக ஒரு பொது நலவழக்கை இன்னமும் வழக்காடிகொண்டிருக்கிறது.

கல்பாக்கம் அணுமின் நிலைய விஞ்ஞானிகளின் சாதனையை பார்ப்பதற்கு முன் ஏனைய நாடுகளிடமிருந்து நம் முடைய நாட்டின் அணு உற்பத்தி எப்படி வேறுபடுகிறது. என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். இந்திய அணு உற்பத்திக்கு மூன்று நிலையிலான ரிக்டர்களை முன்மொழிந்தவர் நம்முடைய அணு விஞ்ஞானியும் இந்திய அணுவியலின் தந்தையுமான ஹோமிபாபா. நம் நாட்டில் பெரிய அளவில் யுரேனியம் கிடைப்பதில்லை. ஆனால் தோரியம் கிடைக்கிறது. ஐம்பதுகளில் நாட்டின் நீண்டகால ஆற்றல் சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக இந்தியாவின் மூன்று கட்ட அணுத்திட்டம் ஹோமிபாபாவால் அறிமுகம் செய்யப்பட்டது.

தென்னிந்தியாவில் கடலோரபகுதிகள் முழுவதும் கிடைக்கும் தோரியம் நமக்கு மிகப் பெரிய நம்பிக்கையை கொடுத்தது. உலகிலேயே இந்தியாவில் யுரேனியம் என்று பார்த்தால் 1% மட்டும் தான் கிடைக்கிறது. ஆனால் உலகத்தில் அறியப்பட்ட தோரியம் இருப்புகளில் 25% நம்முடைய தென்னாட்டின் கடற்கரையோரம் கொட்டிக்கிடக்கிறது. எனவே தோரியத்தை யுரேனியமாக மாற்றுகின்ற முதல் படியாக நாம் நம் அணுசக்தியை மாற்றிக் கொண்டும் இந்த திட்டத்தின் முதல் கட்டத்தில் இயற்கை யுரேனியம் கொஞ்சமாக சேர்க்கப்பட்டு கனரக நீர் நிலைகள் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்..இவை புளூட்டோனியம் 239.. ஒரு துணை தயாரிப்பாக உருவாகி நமக்கு குடுக்கும்.

இரண்டாம் நிலை என்பது ஃபாஸ்ட் பிரீடர் ரியாக்டர் என்று அழைக்கப்படுகிறது. முதல் அணு உலையில் கிடைத்த புளுட்டோனியம் 239 என்பதை கலப்பு ஆக்சைடு எரிபொருளை பயன்படுத்தி இந்த எரிபொருளை மீண்டும் செயலா்குவதன் மூலம் மீட்டெடுக்கப்படுகிறது. புளுட்டோனியம் 239 .. ஆற்றலை உற்பத்தி செய்ய பிளவுபடுத்தப்பட்டு இதிலிருந்து நமக்கு யுரேனியம் 233 கிடைக்கிறது.. எனவே யுரேனியத்தை பூமியில் இருந்து எடுக்கவேண்டாம். நாமே அதை உற்பத்தி செய்துவிட்டோம்.. இது தான் அந்த அற்புதமான யோசனை.

 கல்பாக்கம் அணுமின் நிலையம் | Kalpakkam Atomic Power Station | யுரேனியம் | அணு உலைகள் | https://bookday.in/

இப்போது மூன்றாம் நிலைக்கு செல்கிறோம். இதில் நாம் ஏற்கனவே இரண்டு நிலைகளில் மூலம் கண்டெடுத்த யுரேனியம் 233ஐ தோரியம் 232 என்பதோடு இணைத்து வெப்ப வளர்ப்பு உலையாக உருவாக்குகிறோம். இயற்கையாக நிகழும் டோரியத்தை மட்டுமே பயன்படுத்தி எரிபொருள் நிரப்ப முடியும் என்பதை உலகிற்கு காட்டி இருக்கிறோம் மூன்று கட்டதிட்டத்தின் படி உள்நாட்டு யுரேனியம் மூலம் எரிபொருளாக பெறப்படும். PHWR மூலம் இந்திய அணுசக்தி சுமார் 10 JW ஆக வரப்போகிறது… 50 கிலோ வாட் வரை இந்த திறனை நம்மால் மூன்றாம் நிலையில் பெறமுடியாது. மூன்று நிலை கட்டத்தின் நேரடி தோரியத்தை பயன்படுத்துவதற்கு நீண்டகால தாமதம் ஏற்படுவதால் இந்த வரிசையில்….உலக அணு உலைகளுக்கு இணையான ஆற்றலை நேரடியாக பெறமுடியும்.. இவற்றை அயல்நாடு பொருள்களில் இருந்து விலகி பயன்படுத்தவும் அனுமதிக்கின்ற உலைகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. முடிக்கு இயக்கப்படும் அமைப்புகள் என்று இவற்றுக்கு பெயர் மேம்பட்ட கனநீர் உலைகள் மற்றும் கச்சிதமான உயர் வெப்பநிலை உலைகள் உரிய உப்பு உலைகள் என சமீபத்தில் பலவற்றை இந்தியா முயற்சி செய்திருக்கிறது..

1901 ஆண்டிலேயே இந்தியாவின் புவியியல் ஆய்வுமையம் இந்தியாவின் கதிரியக்க தாதுக்களின் கணிசமான வாய்ப்புகளை கொண்டிருப்பதாக அங்கீகரித்து யுரேனியம் மற்றும் தோரிய நைட்ரேட்..போன்றவற்றை எடுக்க முடியும் என்பதை உலகிற்கு எடுத்துச் சொல்லியது இந்தியா விடுதலையானபிறகு டிஎஸ் கோத்தாரி மைக்நாத் சாஹா, ஹோமிபாபா, ஆர்எஸ் கிருஷ்ணன் ஆகியோர் அணு இயற்பியல் முன்னோடி ஆராய்ச்சியை மேற்கொண்டனர். 1940 இல் பல்கலைக்கழகத்தில் ஒரு முதுகலைப்பாடமாக அணு இயற்பியல் இணைக்கப்பட்டது. கல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதல்சைக்கிள்றானை ஃப்புகழ் பெற்றவிஞ்ஞானி மேக்நாத் சாஹாமைத்துக் கொடுத்தார். 1945 இல்ஹிரோஷிமாவில் குண்டு வீசப்பட்டதை தொடர்ந்து நார்மன் பாதர் ஜான் கிராஃப்ட் ஆகியோரின் கீழே அங்கு சென்று ஆய்வு செய்த அணு இயற்பியலாளர் R S கிருஷ்ணன். யுரேனியத்தின் பாரிய ஆற்றலை உருவாக்கும் திறனை அங்கீகரித்து ஏழு அற்புதமான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார்.. அணுவெடிப்பிலிருந்து வெளியாகும் மிகப்பெரிய ஆற்றல் என்றால் இயந்திரங்கள் போன்றவை ஓட்டுவதற்கு கிடைப்பதை நாம் அமைதி வழியிலான அணுவியல் என்று முதன்முதலில் அவர் பிரகடனம் செய்தார். அணுசக்தியை அமைதியான பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதில் உள்ள சிரமங்களை அவர் பட்டியலிட்டார். இருந்தாலும் 1946இல் வெளிவந்த அவருடைய மிகசிறப்பான கட்டுரை.. பிரதமர் நேரு போன்றவர்களின் கவனத்தை ஈர்த்தது.. இந்தியா அணுஉலை அமைதி வழிகளுக்கு மட்டுமே பயன்படுத்தும் என்று பாராளுமன்றமும் அங்கீகரித்தது.

 கல்பாக்கம் அணுமின் நிலையம் | Kalpakkam Atomic Power Station | யுரேனியம் | அணு உலைகள் | https://bookday.in/

இப்போது நாம் கல்பாக்கத்திற்கு திரும்புவோம்.. கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் கதை அபாரமானது.. சென்னைக்கு தெற்கே 80 கிலோமீட்டர் தொலைவில் மெட்ராஸ் அணுமின் நிலையம் MAPS ( MADRAS ATOMIC POWER STATION) அமைந்துள்ளது. இதில் வேகப்பெருக்கி உலைகள் புளுட்டோனியம் எரிபொருள் உற்பத்தியுடன் தொடர்புடையவை. இந்தியாவில் முதல் முழுமையான உள்நாட்டில் கட்டப்பட்ட அணுமின்நிலையம் என்கிற பெருமையை இது சமீபத்தில் அடைந்தது.. இப்படி தன்னுடைய நாட்டில் மட்டுமே தயாரிக்கப்பட்ட பொருட்களைக்கொண்டு ஒரு அணுமின் நிலையத்தை உருவாக்குவதில் உலகிலேயே ரஷ்யாவுக்கு பிறகு இரண்டாவது இடத்தை நாம் பிடித்திருக்கிறோம். 220 மெகாவாட் மின்சாரத்தை நாம் உற்பத்திசெய்து வருகிறோம். கட்டுமானப் பணிகளை 1970 தொடங்கிய பொழுது நம்மிடம் முறையான உள்கட்டமைப்பு மட்டும் கையாளும் கருவிகள் இல்லை. அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி 100 என்பது டன் எடையுள்ள அதிமுக்கியமான உபகரணங்களை உயர்த்துவதற்காக இந்தியா முழுவதும் இருந்து மொத்தம் 3.8 லட்சம் ரயில்வேஸ் லீப்பர் .. உபகரணங்களை சென்னைக்கு கொண்டு வர உத்தரவிட்டார்.

இந்த வசதியில் உள்நாட்டில் கட்டமைக்கப்பட்ட இரண்டு மிகு அழுத்த கனநீர் உலைகள் மேப்ஸ்1 மேப்ஸ் 2 இங்கு உள்ளன. 1981ல் கட்டிட பணி நிறைவடைந்தது. ஆனால் கனரகநீர் பற்றாக்குறை காரணமாக தொடக்கம் தாமதமானது. தேவையான கனரகநீரை வாங்கிய பிறகு மேப்ஸ் 1983 இல் முக்கிய நிலைக்கு சென்று 1984 முழு சக்தியுடன் செயல்படத் தொடங்கியது. அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாததால் 1985 ஆம் ஆண்டு முதல் அணுஉலைகள் தாராபூரில் உள்ள அணு மறுசுழற்சி ஆலைக்கு தாங்கள் செலவழித்த எரிபொருளை வழங்கி பாதுகாப்பற்ற பிணையத்தை நாட்டிற்கு கொடுத்து வருகின்றன.. கல்பாக்கத்தில் உள்ள ஒரு கடற்கரை ஓரம் இந்தியாவின் முதல் உள்நாட்டு அழுத்த நீர் உலையை வழங்கிஇருக்கிறோம் என்பது பிரம்மாண்ட சாதனையாகும். பாபா அணு ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்ட இந்த அற்புதம் உலக விஞ்ஞானிகளை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது சரி.

 கல்பாக்கம் அணுமின் நிலையம் | Kalpakkam Atomic Power Station | யுரேனியம் | அணு உலைகள் | https://bookday.in/

சமீபத்திய சாதனை என்ன.. 2024 மார்ச் மாதத்தில் 500 மெகாவாட் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட PFBR அமைப்பை உள்நாட்டிலேயே தயாரித்து நம்முடைய கல்பாக்கம் விஞ்ஞானிகள் வழங்கியிருக்கிறார்கள்.. இந்த PFBR சாதனை என்பது இன்னொரு முக்கியமான விஷயத்தை நோக்கி நம்மை இட்டுச் சென்றுப்பதை தான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். இதுவெறும் அணு உலை தொடர்பான விஷயம் மட்டுமே அல்ல இதன்மூலம் உலக அளவிலான நியூட்ரினோ ஆய்வுகளுக்கு கல்பாக்கம் பயன்பட போகிறது!

உலை சோதனைகள் முடுக்கி சோதனைகளைப் போலவே நியூட்ரினோக்களை ஆய்வு செய்வதற்கு அணுஉலைகள் நம்பமுடியாத அளவிற்கு பயனுள்ளதாக இருக்கின்றன. ஏனெனில் அவை அதிக அளவில் தீவிரமாக உற்றுநோக்குவதை பதிவு செய்கின்றன.. எலெக்ட்ரான், ஆண்டி நியூட்ரினோக்கள் அளப்பதற்கு கடினமான துகள்கள் ஆகும். இவற்றை நிரமாலைகளுக்கு உட்படுத்துவதன் மூலம் புதிய நடுத்தர அல்லது நீண்ட அடிப்படை சோதனைகளை நம்மால் நியூட்ரினோக்கள் மீது நிகழ்த்த முடியும். ஒரு அணு உலையின் உள்ளேயே பிளவுபடும் செயல்முறையை அடுத்து பீட்டா சிதைவு மூலம்.. வழி வைக்கப்படுகிறது. துகள்கள் யுரேனியம் அல்லது புளுட்டோனியம் போன்ற கனமான தனிமங்களுடன் மோதுவதால் அணுக்கள் இலகுவான தனிமங்களாக உடைந்து அவை நிலையாக மாறும் பீட்டா சிதைவுக்கு உதவுகின்றன.. நியூட்ரினோக்கள் ஆற்றலை எடுத்துச் செல்கின்றன. ஆனால் இந்த ஆற்றல்களில் கதிரியக்கம் இல்லை! எதிர்காலத்தில் நியூட்ரினோ ஆற்றல்கள் பயன்படுத்தப்பட வேண்டும் கதிரியக்கம் தடுக்கப்பட வேண்டும் இவற்றிற்கான ஆய்வின் முக்கிய முதல் படியை கல்பாக்கம் எடுத்து வைத்திருக்கிறது…

கல்பாக்கத்தில் ஆபத்துகளை இல்லையா அப்படி சொல்லிவிட முடியாது அணு உலைகளில் குளிரூட்டும் குழாய்கள் அதிர்வுகளாலும் உலை குளிரூட்டி அமைப்பில் கணிசமான விரிசல்களும் வெடிப்புகளும் இருப்பதை 89களில் வந்த ஒரு முக்கியமான கட்டுரை வெளியிட்டது.. இந்த விரிசல் ஒரு மாடரேட்டர் பாம்ப்பில் சிறுகுழாய் துண்டுகள் கண்டுபிடிக்கப்படுவதற்கும் வழிவகுத்தது. மின் உற்பத்தியை நாம் அப்போது 170 மெகாவாட்டாக குறைக்க வேண்டிவந்தது..

அதேபோல 99இல் மேப்ஸ் 2வில் அதிகளவு கனரக நீர் கசிந்தது. ஏழு தொழில்நுட்ப வல்லுநர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.. கல்பாக்கத்தை சுற்றியுள்ள மீனவ கிராமங்களில் ஏறக்குறைய 20 மைல்தொலைவிற்கு கூட…மீன்களில் கதிரியக்கங்கள் இருந்ததாக கூட உலக அளவில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த காரணங்களினால் பூவுலகின் நண்பர்கள் உட்பட பல அமைப்புகள் அணு உற்பத்தியை எதிர்க்கின்றன.. எதிர்காலத்தில் நியூட்ரினோ மூலம் மின்உற்பத்தி நடக்கும் பொழுது பெரும்பாலும் கதிரியக்கங்களே இருக்காது என்கின்ற ஒரு இடத்தை உருவாக்குவதற்கு இப்போதைய கல்பாக்கத்தின் ஆய்வுகள் தொடரப்பட வேண்டும்.. கல்பாக்கம்…. கோகிலமேடு என்ற இடத்தில் கட்டப்பட்டுவரும் PFBR ஃபாஸ்ட் பிரீடர் டெஸ்ட் ரியாக்டர்  உலகிற்கே வழிகாட்டும் எனபதில் சந்தேகமில்லை..

இந்த மாதிரியான சாதனைகளை மற்றும் அணு உலை குறித்த சோதனைகள் இவை இரண்டையுமே பற்றி நம்முடைய பாடப்புத்தகங்கள்  தொடர்ந்து மௌனமே சாதிக்கின்றன.. கல்லூரி அளவில் அணுஇயற்பியல் பாடமாக வைக்கப்பட்டாலும் இந்தியாவின் அணுவியல் குறித்த அறிவியல் விஞ்ஞானிகளின் சாதனைகள் மற்றும் துயரங்கள் குறித்த பல விஷயங்கள் அடுத்த சந்ததியினரை அடைவதற்கு வழிவகை செய்யப்பட வேண்டும்..

அனுவியலின் அற்புத தலைவர் ராஜா ராமண்ணா ஒரு முறை குறிப்பிட்டதைப் போல.. இந்தியா பன்முகம் கொண்ட ஒரு நாடு..சாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகள் கடந்து வாழ வேண்டும் என்றால் அறிவியலின் அடையாளங்களை நாம் தக்க வைக்க வேண்டும்… அதே சமயத்தில் இந்தியாவிலுள்ள கல்வித்துறை முதல் சுற்றுசூழல்துறை வரை அனைத்தும் ஒருங்கிணைந்து அறிவியலை எடுத்துச் செல்ல வேண்டும். கல்பாக்கம் விஞ்ஞானிகளுக்கு ஒரு சல்யூட்.

கட்டுரையாளர் : 

  கல்பாக்கம் அணுமின் நிலையம் | Kalpakkam Atomic Power Station | யுரேனியம் | அணு உலைகள் | Ayesha Era Natarasan | https://bookday.in/

ஆயிஷா இரா.நடராசன்

 



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Show 1 Comment

1 Comment

  1. “அறிவியலின் அடையாளங்களை தக்க வைக்க வேண்டும் ”
    கருத்தான புத்தகம். படிப்போம் வாங்கி மகிழ்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *