மலையாளக் கவிஞர் கல்பற்றா நாராயணன் (தமிழில் அழகிய மணவாளன்) எழுதிய “கருப்பு இருட்டல்ல” கட்டுரைத் தொகுப்பு புத்தகம் | Kalpatta Narayanan's Karuppu Iruttalla Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

‘கருப்பு இருட்டல்ல’ கட்டுரைத் தொகுப்பு கவித்துவத்துடனான விமர்சனப் போக்கு கல்பற்றா நாராயணன் (தமிழில் அழகிய மணவாளன்)

   ‘கருப்பு இருட்டல்ல கட்டுரைத் தொகுப்பு கவித்துவத்துடனான விமர்சனப் போக்கு கல்பற்றா நாராயணன் (தமிழில் அழகிய மணவாளன்)

நீங்கள் கைபிடித்து நடந்து போய்க் கொண்டிருக்கும் எழுத்துக்கள் எல்லாம் ஒரே  மாதிரியாக இருப்பதில்லை. வாசகனை போலவே படைப்பாளியும் வெவ்வேறு கோணங்களை வெவ்வேறு தத்துவங்களை, வெவ்வேறு கற்பனைகளைத் தேக்கி வைத்துக் கொண்டிருக்கின்றனர். இது அவரவர் மனகண் பார்வைக்கு ஏற்ப அமைகிறது. நாமும் நமக்கு ஏற்ப  தேர்ந்தெடுத்துக் கொள்வதில் இருந்து மாறுபடுகிறோம். ஏற்றுக் கொள்கிறோம். அந்த மனகண் பார்வையோடு தான் நீங்கள் இந்தத் தொகுப்பைச் செப்பம் செய்து வைத்துக் கொண்டு வாசிக்கத் தொடங்க வேண்டும் .

ஒரு வாசகன் எந்த வகையான இலக்கியத்தை எடுத்துக் கொள்ளும் உரிமை உடையவன். உரிமைக்காகத் தான் சுயத்தை விட்டுக் கொடுக்க முடியாதவன். கவிதைகளில் மேல் ஈர்ப்பு பதிவிறக்கம் ஒருவித போதை நடையுடன் வாழும் வாசக மன உலகிற்காக எழுதப்பட்ட கட்டுரைகள் இது. கவிஞர்களைப் போலவே நாவல் லிஸ்ட் என்கிற புனைக்கதை உருவ அமைப்புடன் வாசிக்கப்படுகின்ற வாசகர்களும் இருக்கின்றார்கள்..

வாசகன் மேல் எந்தக் குறையும் சொல்ல முடியாது. இவன் நம்மை வாங்குபவன் என்று பதிப்பகத்திற்குத் தெரியும். இந்த நிலைக்கு ஏற்பவே படைப்பாளிகளையும் சேர்ந்து வைத்திருப்பார். தரமற்றது என்று எதுவுமே இல்லை. தரம், தரம் உற்றது என்று எதுவுமே இல்லை. இந்த அளவுகோல் ஆளுக்கு ஆள் வேறுபடுவதால் நாம் தரம், தரம் அற்றது என்பதால் ஏற்றுக்கொள்ளவில்லை.. அப்படித்தான் வாசிக்க தோன்றுகிறது.  கல்பற்றாவின் கவித்துவ மனநிலை ஒருவகையில் தன்னை கண்டடையும் நிலையில் எழுதிக் கொண்டிருக்கிறார் என்பதாகவே நான் நினைக்கிறேன். கல்பற்றா எந்த வாசகனுக்கு எழுதுகிறார் என்பது ஒரு பெரிய கேள்விக்கு முன் வந்து நின்றால் அது புது வாசகனுக்கானது அல்ல. எழுத்தின் திளைத்து உருகிப் போனவர்களுக்காக எழுதப்பட்டதாகவே தோன்றுகின்றது.

இரசனையும் பொழுது போக்கும் கொண்ட பல வாசகர்கள் இருக்கிறார்கள் இவர்கள் வாங்கினாலும் எடுத்து முழுமையாகப் படிக்க மாட்டார்கள். ஒவ்வொரு வார்த்தைகளுக்குள்ளும் நின்று நிதானித்து பயணிக்க வைக்கும் சூட்சும வித்தை  இவர் கட்டுரைகளுக்கு மட்டும் சாத்தியம். பல எழுத்தாளர்களின் கட்டுரைகள் நதி போக்குப் போல சடசட என்று கடந்து போய்விடும்.

சுய கண்டடைதல், கழுதை, இரண்டும் சிறப்புடன் அமைந்தவை, கவிதை குறித்து நான்கு, கொரோனாவும் கவிதையும், என்னுடைய ஒரு நாள், தனிமை என்னும் பணியிடம், கவிதைக்கு வெளியே நடந்த சில வரிகள்,  கவிதையின் கடமை, கடைசி மூன்று கட்டுரை புனைகதை குறித்தானது.

இவரது எழுத்துக்கள் தேர்ந்த கலைஞனால் மட்டுமே அறியப்படுகிறது. அதனால் தான் இதை எல்லாம் வாசிக்கிறார்களா? கவிஞர்கள் என்ற கேள்வியும் பிரஞ்ஞையோடு சேர்த்து கூறுகிறார். “இசை, சாம்ராஜ், ஷங்கரராமசுப்ரமணியன், சபரிநாதன், ஆனந்தகுமார், மதார் அதியமான் எனத் தமிழ்க் கவிஞர்கள் கல்பற்றாவின் கட்டுரைகள் தங்களுக்கு அணுக்கமாக இருந்ததைத் தெரிவித்திருந்தனர். இந்த மொழி பெயர்ப்புகளைச் செய்வது பற்றி கல்பற்றாவிடம் உற்சாகமாகச் சொல்லும் போது சந்தேகத்துடன் ‘யாராவது  வாசிக்கிறார்களா?’ என்று கேட்டார். ‘கவிஞர்களும் வசிக்கிறார்கள்’ என்று நான் சொன்னதும் மகிழ்ந்து ‘நீ தொடர்ந்து செய்யலாம்’ என்றார்.” (ப.14) இது ஒரு ஆதாரம் (ஸ்டேட்மெண்ட்) என்பதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.. வாசகன் என்பவன் இங்கே இடம் பெறவில்லை. படைப்பாளி என்பவரே இடம் பெற்று இருக்கிறார். தேர்ந்த புத்தக வாசிப்பு அதே வேளையில் கவிதையின் நிள அகல உணர்வுகள் அத்தனையும் புரிந்த கொண்டவர்களால் மட்டுமே வாசிக்கப்படுகிறது.

இப்புத்தகத்தின் முதல் கட்டுரையை வாசித்து முடிக்கையில், மூளைக்கு ஓடி அமர்ந்த கவிதை கிறுக்குகள் சற்றென எழுந்து பிரகாசமாக மாறியது. யாருக்கும் அடங்காமல் பித்து நிலைக்குப் போனது. இது படைப்பாளிக்கான வெற்றியா வாசகனின் பயிற்சி நிலையா இரண்டும் ஒன்று போல சிரிக்க ஆரம்பிக்கிறது. இந்த நிலையில் தான் இவரது கட்டுரைகளான, சுய கண்டடைதல் (ஆதம்விலாசம்), கொரோனாவும் கவிதையும், கழுதையும் குதிரையும், கவிதைக்கு வெளியே நடந்த சில வரிகள், கவிதையின் கடமைகள், இப்படி எத்தனையோ உள்ளது. புனைகதைக்கான விமர்சனத்தில் கூட  ஒரு கவி நயமிருக்கும்.  எல்லாக் கட்டுரைகளும் வாசிக்க முடிகிறது. கவிப்பொருள் ஒரு மன வியாதி போல அறியாமல் பற்றி கொண்டும் தொடர்ந்து  தொனதொனக்க ஆரம்பிக்கிறது.

கவிஞர்களைப் பற்றி குறிப்பிட்ட கூடிய விஷயங்களில் வைலோப்பிள்ளிஸ்ரீ தாமேனோன். எம்.வி. நாராயண பிள்ளை, இடப்பள்ளி ராகவன் பிள்ளை மற்றும் பஷீர் போன்றோர் படைப்புகளைக் குறிப்பிட்டு இருப்பதைப் பார்க்க முடிகிறது

வாசகம் மனநிலை

ஒரு மொழிபெயர்ப்பு எப்போதுமே தன்னை தாழ்த்திக் கொள்வதாக இருக்கக் கூடாது மொழியிலும் கவனம் இருக்க வேண்டும். அந்த அடிப்படையில் இவை மொழிபெயர்ப்பாக இருந்தாலும் பிழை மலிந்து கிடக்கும் இடமாகவே இருக்கிறது. 133 பக்கங்களில் 100 பக்கங்களுக்கு மேல் பிழைகள். இந்த மொத்த குற்றத்திற்கும் மொழி பெயர்ப்பாளர் அழகிய மணவாளன் பொறுப்பாவார். குறைந்தபட்சம் மொழியின் மேல் இருக்கும் வல்லினம் மிகும் இடம், வல்லின மிகா இடம் போன்றவற்றைத் தெரிந்து வைத்துக் கொண்டு இருந்தால் சாலச் சிறந்ததாகும். கருத்துக்கு முக்கியத்துவம் என்கிற பெயரை வழுக்கட்டாயமாகப் பல இடங்கள் வல்லின பிழைகள் அதிகம் கிடைக்கிறது . அடுத்த பதிப்பில் சரி செய்தால் நன்று. விஷ்ணுபுரம் இதை வெளியிட்டு இருப்பதால் ஏன் இந்த கவனம் இல்லை என்பது யோசிக்க வைக்கிறது. நான் மேலே மேற்கோள் இட்டு காட்டியிருப்பைவையில் மட்டும் ஆறு ஒற்றெழுத்துகள் இல்லாமல் இருக்கின்றது  சரி செய்து வைத்திருக்கின்றேன்.

இவரது கட்டுரைகளை முழுமையாக வாசித்து முடித்தால் கதை வழி உணர்த்தும் கருத்து, கவிதை வழி உணர்த்தும் கருத்து, படைப்பாளிகளை மேற்கோள் ஆக்குவது. இந்த மூன்றையும் வரையறையாக வைத்து கொள்ளலாம்.

கதை வழி உணர்த்தும் கருத்து

கண்ணாடி பற்றிய சுயரூபம் தெரிந்து கொள்ளுதலில் புலிக்குட்டி பற்றிய ஒரு கதை இடம்பெறுகிறது. ஆடுகளால் வளர்க்கப்படுகிற புலிக்குட்டி தன் சுயத்தை கண்டடையும்போது தன் பிறப்பை உணர்ந்து கொள்ளுதல் என்பதாகவே உணர்த்துகிறார் இது வெறும் கதை அல்ல உருவகப்படுத்தப்படும் வாழ்வாக உள்ளது. இதனை, புத்தர் தன் வாழ்வியல் துறவறம் கொள்ளும் நிலையை சுயம் கண்டடையத்தல் வழியாக விளக்கி இருப்பார். கண்ணாடி வழியே பல்வேறு செய்திகளைக் கூறியிருப்பது வாசிப்புக்கு மேருக்கூட்டுவதாக இருந்தது.

இரண்டாவது கட்டுரையில் ஒரு ஆப்பிரிக்க நாடோடி  கதையில் மரணமில்லாத பெரு வாழ்வை மனிதன் எப்படித் தவறவிட்டான் என்பதைக் கூறுகின்றது. கருப்பு இருட்டல்ல என்கிற கட்டுரையில் நோவா தன்னிடமிருந்து காகமும் புறாவும் வெளியே விட்டதும் புறா வந்ததும் காகம் வராது எங்கே சென்றது என்பதாக உருவகத்தோடு கதையும் கழுதை பற்றி கூற ஈசாப் கதை, பலி தரிசனம் என்கிற நீள் கவிதை மகாபலியின் கதையை மறு ஆக்கம் செய்கிறது.  நளன் தமயந்தி கதை இது ஒரு வகையான துன்ப கதை நீர்ச்சி என்பதாகவே பார்க்க வேண்டும்.

தன் வரலாற்றுக் கதைகளாக இடப்பள்ளி ராகவன்பிள்ளை காதலுக்காக இறந்த கவிஞனைப் பற்றியது, ,பஷிர் பிறந்த நாள் எவ்வளவு கடினமாக இருந்தது என்பதைப் பற்றியும் விளக்குகின்றது.

படைப்பாளிகளை மேற்கோள் ஆக்குவது

இப்புத்தகத்தில் இடம் பெற்று இருக்கும் படைப்பாளிகள். லக்கான், ஸ்ரீ நாராயண குரு, சில்பியா பிளாத், எம். பி.நாராயண பிள்ளை, ஆற்றூர் ரவிவர்மா, பால் சக்கரியா, பஷீர், தகழி சிவசங்கரன் பிள்ளை, குமாரன் ஆசான், ஜி.சங்கர குறூப்பி, தாஸ்தாயெவ்ஸ்கி,  வைலோப்பிள்ளி ஸ்ரீ தரமேனோன், மோதில் ராதாகிருஷ்ணன்,  சி.அய்யப்பன், வி.பி.சிவக்குமார்,  எம்.முகுந்தன், காக்க நாடான், கோவிலன்,   ஓ.வி.விஜயன், ஆனந்து,  மாதவிக் குட்டி, எம்.பி.வாசுதேவ நாயர்,  சி.ஆர்.பரமேஸ்வரன், ஸ்டீபன் பிங்கர், ஒப்பன் ஹைமர், போர்ஹே,  தமிழில் இடம்பெற்றிருக்கும் ஒரே ஒரு படைப்பாளி யூமா வாசுகி, ஒளப்பமண்ண, பி. குஞ்ஞிராமன் நாயர், களியச்சன், இடப்பள்ளி ராகவன் பிள்ளை, பூந்தானம் நம்பூதிரி,  நாலாப்பாடு நாராயணன், பாலாமணி, ஐயப்பன் பணிக்கர், கே.ஜி.சங்கரப்பிள்ளை, அக்கித்தம் அச்சுதன்  நம்பூதிரி, பால் செலான், ராமபுரத்து வாரியர், பாலசந்திரன் சுள்ளிக்காடு, விட்டின் ஜஸ்டின், துஞ்சத்து எழுத்தச்சன், குஞ்ஞுண்ணி, உண்ணாயி வாரியார், டால்ஸ்டாய், சுகுமார, காரூர் நீலகண்டபிள்ளை, எர்னஸ்ட் ஹெமிங்வே, இவைகளைப் போல பட்டியல் நீண்டு கிடைக்கிறதைக் காண முடியும். சில கவிஞர்களின் வாழ்க்கையுயும் வெளிப்படுத்தியும் இருக்கிறார்.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்பு விவரம்
நூலின் பெயர்: “கருப்பு இருட்டல்ல” கட்டுரைத் தொகுப்பு
ஆசிரியர்: மலையாளக் கவிஞர் கல்பற்றா நாராயணன் (தமிழில் அழகிய மணவாளன்)
வெளியீடு:
விஷ்ணுபுரம் பதிப்பகம்
விலை: ₹.180
அறிமுகம் எழுதியவர்:  
மா.ச.இளங்கோமணி

******************************************************************************

புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வு

2026 ஆம் ஆண்டில் ஜனவரி 8 முதல் 21 வரை  49வது சென்னை புத்தகக்காட்சி நடைபெற உள்ளது.  ஆண்டுதோறும் புத்தக காட்சியில் சிறந்த நூல் அறிமுகம் எழுதுபவர்களுக்கான போட்டி, கதை சொல்லல் போட்டி, சிறுகதை போட்டி என நடத்தி சிறந்த படைப்புகளுக்கு தொடர்ந்து பரிசுகளை வழங்கி வருகிறது பாரதி புத்தகாலயத்தின் புக் டே இணைய இதழ். இந்த ஆண்டும்  ஜனவரி 8 முதல் 18 வரை சென்னை புத்தக கண்காட்சியின் ஏதாவது ஒரு அரங்கிற்கு நேரடியாக வந்து தங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து அதை நூல் அறிமுக கட்டுரையாக bookday24@gmail.com என்ற மெயிலில் அனுப்பி வைக்கவும். அதில் தேர்வாகும் சிறந்த அறிமுக கட்டுரைக்கு ரூ.10,000 மதிப்பிலான பரிசும்,  புத்தக கண்காட்சி அரங்கில் ஜனவரி 20 அன்று மாலை 5.30 மணியளவில் நடக்கும் புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வில் பரிசும் வழங்கப்படும்.  இந்நிகழ்வில் திரைப்பட இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமி, எழுத்தாளர்கள் இந்திரன், ஆயிஷா நடராசன், உமர் பாரூக் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன், அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி.செல்வா ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை  https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *