நூல் அறிமுகம்: லியோ டால்ஸ்டாயின் “கள்வடியும் காதல் (கிரெய்ஸர் சொனாட்டா)” – பெ. அந்தோணிராஜ்

 

கிரெய்ஸர் சொனாட்டா என்பது பிரெஞ்சு இசைமேதை ராத்தோல்ப் கிரெய்ஸர் என்ற இசைமேதைக்கு சமர்ப்பணமாக உலகப்புகழ்பெற்ற இசைமேதை பீத்தோவன் படைத்த அற்புத இசை கிரெய்ஸர் சொனாட்டா.

கிரெய்ஸர் சொனாட்டாவின் அற்புதமான ஒலியலைகள் கண்ணியமிக்க குடும்ப உறவுகளைக் கள்ளக்காதல் எனும் சந்தேகப்புயலில் சிக்கவைத்து கொலையுண்ணச் செய்துவிட்ட சோகக்கவியமாக இதில் உருவெடுத்துள்ளது. குடும்ப உறவுகளில் நிறைய அதிர்வலைகளைச் சந்தித்த டால்ஸ்டாயின் எண்ணச் சிதறல்களே இந்த நாவலில் விரவிக்கிடக்கிறது.
மனிதனின் மனம் என்பது பல குடுவைகளை வைத்துள்ளது, அன்பு, பாசம், வெறுப்பு போன்ற பல குடுவைகள் மனதில் இருக்கின்றன, . கணவன் மனைவி ஆகியோர் முதல் ஒரு மாதமோ, இல்லை, ஆறு மாதங்களோ அவரவர் வெறுப்புக்குடுவையை காலியாகவே வைத்திருப்பர், அப்போது வரை உடற்பசிதான் முன்னிலை வகிக்கும், உடற்பசியில் சலிப்பு ஏற்படும்போது மற்றவர் குறைகள் கண்ணுக்குத்தெரிய ஆரம்பிக்கும். ஒவ்வொரு வெறுப்பும் சொற்களின் வழியே வெளியேறும். அந்த எரிச்சல் வரும்போதெல்லாம் ஒவ்வொரு தடவையும் நான் குறிப்பிட்ட அந்த வெறுப்புக்குடுவையில் ஒவ்வொன்றாக சேர ஆரம்பிக்கும். ஒரு கட்டத்தில் அக்குடுவை நிரம்பிவழிய ஆரம்பிக்கும்.

ஆரம்பகால கட்டங்களில் இருவரில் ஒருவர் பெரிய தவறு செய்தலும் வெறுப்பு க்குடுவையில் இடம் இருக்கும்போது எவ்வளவு தாங்குமோ அவ்வளவு தாங்கும். அது நிரம்பி வழிய ஆரம்பித்தவுடன் சின்ன விஷயம் கூட பெரிய பிரச்னைக்கு இட்டுச்செல்லும். உப்புக்கு சப்பில்லாத விசயத்திற்குக்கூட கைகலப்பில் சென்று முடியும். பிறகு எப்போது பிரச்னை என்றாலும் அடிதடியில்தான் முடியும். இது அவரவர் வாழும் சூழலுக்கேற்ப வித்தியாசப்படும். ஒரு சில இடங்களில் கை நீளமுடியாது மௌன வதைகள் நடக்கும். இருவர் மனதிலும் வெறுப்பின் அளவு கூடுமே ஒழிய குறையாது.ஒருவரையொருவர் வெல்லத்துடிப்பர். ஆனால், விதிவிலக்காக சகித்துக்கொள்வதும், விட்டுக்கொடுத்தலும், குடும்ப கௌரவத்தை நிலைநிறுத்தவும் பிரச்னைகள் இல்லாமலும் போகலாம் இல்லை நீறுபூத்த நெருப்பாகவும் இருக்கலாம். இவற்றிலிருந்து சிலபல குடும்பங்கள் விதிவிலக்காக அமையலாம் அத்தகைய குடும்பங்கள் வரமென்றறிக.

Leo Tolstoy - Wikiquote

கதைக்கு வருவோம். ரயில் பயணம். ஒரு சிலர் வருகின்றனர், போகின்றனர் ஆனால், மூன்று நாட்களாக இருவர் மட்டும் இறங்காமல் பயணிக்கின்றனர். முதல் நான்கைந்து பேர் பேசிகொண்டுள்ளபோது காதல் பற்றிய பேச்சும் வருகிறது. இறங்காமல் பயணித்தவர்களில் ஒருவர் மட்டும் காதல் என்பது நீடித்து இருப்பது இல்லை என்று கூறினார், அதை மறுத்து அங்கே கருத்துகள் எழுந்தன. மற்றவர்கள் இறங்கிய பிறகு அந்த இருவர் மட்டும் எஞ்சினர். அதில் ஒருவர் போஷ்த் நிஷேவ், மற்றொருவர் கதை சொல்லி.  போஷ்த் நிஷேவ் கதை சொல்லியிடம் தான் ஏன் காதலுக்கு எதிராக வாதாடினேன் என்றால் அதற்கு என் கதையை கேட்கவேண்டும் வேண்டும் எனக்கூறிவிட்டு தன்னுடைய சோகக்கதையை கூறுகிறார்.

போஷ்த் நிஷேவ் வசதியான செல்வந்த குடும்பத்தில் பிறந்தவர். பதின்ம வயதிலேயே உடலுறவைப் பற்றி தெரிந்து கொண்டு, அது ஒன்றும் தவறில்லை என்ற அபிப்ராயத்தில் வாழ்கிறார். திருமணம் முடிக்கும் வரை அந்தப்பழக்கம் இன்பத்தை கொடுக்கிறது, இதில் அரசின் நடவடிக்கைகளை பாராட்டுகிறார்.விபச்சாரிகளுக்கு அரசே மருத்துவ பரிசோதனை செய்து குடிமக்களை நோயிலிருந்து காப்பாற்றுகிறது என்று பெருமைபட்டுக்கொள்கிறார். அப்படிப்பட்டவர் வசதியில்லாத குடும்பத்தில் பிறந்த லீஸாவை திருமணம் செய்துகொள்கிறார், அவருடைய விருப்பம் ஒன்றேதான், அது தனக்கு மனைவியாய் வரப்போகிறவள் மிகவும் சுத்தமானவளாக, கற்புடையவளாக இருக்கவேண்டும் என்பதுதான். அதற்காகவே மேட்டுக்குடியில் பெண்ணெடுக்காமல் நல்ல தரமான குடும்பத்தில் பெண் எடுக்கிறார். லீசா அருமையானவள். இருவரும் மிகமிக சந்தோசமாக தங்கள் வாழ்க்கையை துவக்குகின்றனர்.

முதல் குழந்தை பிறந்தவுடனே பிரச்னை ஆரம்பமாகிறது. இருந்தாலும் பொறுத்துக்கொண்டு ஐந்து குழந்தைகளை பெற்ற பின்பு,, இருவருக்கிடையில் மேலும் பிரச்னைகள் அதிகரிக்கின்றன. சிறிது நாள் கழித்து மாஸ்க்கோவிற்கு குடிபெயருகின்றனர். இருவருக்கிடையில் மனத்தாங்கல் இருந்தாலும் கௌரவத்தை காப்பாற்றும் விதமாக குடும்பம் நடக்கிறது. நகரத்தின் மருத்துவர்கள் அவளுக்கு மேலும் குழந்தை பெறமுடியாமல் இருக்க உதவி செய்கின்றனர். சில நாட்களில் லீசாவின் மேனியில் பளபளப்பு கூடுகிறது, மேலும் அழகாகிறாள். இப்போது போஸ்த் நிஷேவுக்கும், லீஸாவிற்கும் எந்த விஷயத்திலும் ஒத்துப்போக முடியாத நிலைக்கு சென்றுவிடுகிறது. அப்போதுதான் ஒரு வயலின் கலைஞன் இவர்களின் வாழ்க்கையில் நுழைகிறான். அவன் போஷ்த் நிஷேவின் நண்பன். லீஸாவிற்கு பியானோ தெரியும். இசையின் மூலமாக இருவரும் நெருங்கிப்பழகுகின்றனர், அது போஷ்த் நிஷேவுக்கு பொறாமையை ஏற்படுத்தி ஒரு கட்டத்தில் சந்தேக தீயையும் ஏற்படுத்துகிறது. அவர்கள் இருவரும் கிரெய்சர் சோணாட்டாவில் பயிற்சியெடுப்பதாக கூறினார். ஆனால் சமூக கௌரவத்திற்காகப் பொறுத்துக்கொள்கிறான். ஒருநாள் கிராமத்திற்குச் செல்வதாக கூறிப் போகிறான். இவன் இல்லாத நாட்களில் அந்தக்கலைஞன் வீட்டிற்கு வரமாட்டன் என நினைக்கிறன்.

Leo Tolstoy's best fiction and philosophy books that one must read ...

கிராமத்தில் இருக்குபோது லீஸாவிடமிருந்து கடிதம் வருகிறது. அதில் அந்தக்கலைஞன் வீட்டிற்கு வந்து பயிற்சியளிக்கிறான் என்ற விபரம் உள்ளது. கொந்தளித்து போகிறான் போஷ்த் நிஷே. உடனடியாக வீட்டிற்கு புறப்படுகிறான், நள்ளிரவுத்தாண்டி வீட்டிற்கு வருகிறான். இருவரும் இசையைப்பற்றி பேசிக்கொண்டிருந்தபோதும், இவனின் கோபம் உச்சத்திற்குச் செல்கிறது. அறிவைத் தொலைகிறான். கத்தியை எடுத்து லீஸாவை குத்தப்போகிறான், தடுத்த அவனை தாக்கப்போகும்போது லீசா தடுக்க, அந்தக்கலைஞன் தப்பித்து ஓடுகிறான், போஷ்த் நிஷேவ் இறுதியில் அவளைக் குத்திக் கொலைசெய்கிறான். விசாரணையில் குடும்பகௌரவத்தைக் காப்பாற்றவே அந்தக் கொலை செய்யப்பட்டது என்று நிரூபிக்கப்பட்டு, சொத்துக்களை எல்லாம் குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு. குழந்தைகளைப் பிரிந்து வெகு தொலைவில் உள்ள அவனுடைய பண்ணை வீட்டிற்குச்செல்கிறான்.இப்போது அவன் மனைவியை கொன்றதிற்காக வருத்தப்படுகிறான். மன்னிப்பு கேட்கிறான் ஆனால், மன்னிப்பு கிடைக்கவில்லை.

இக்கதையில் டால்ஸ்டாய் பெண்களைப்பற்றி அவர் கொண்டிருந்த கருத்துகள் அவ்வளவு உயர்ந்ததாக இல்லை. பெண் என்பவள் முடிந்த அளவு தன் கணவனை அடிமைப்படுத்தவே முயற்சிக்கிறாள் என்று கூறுகிறார். ஒருவேளை அவரின் ரஷ்ய சூழ்நிலை அப்படி எழுதவைத்திருக்கலாம். அனுபவங்கள் மனிதருக்கு மனிதர் மறுபாடும்தானே.

வாசிக்கும்போது உங்களுக்கு புது அனுபவங்களை இந்நாவல் கொடுக்கலாம்.

நூல் =கள்வடியும் காதல் (கிரெய்ஸர் சொனாட்டா )

ஆசிரியர் =லியோ டால்ஸ்டாய்

தமிழில் =ஜெகாதா

பதிப்பு =ராம்பிரசாந்த் பப்பிளிகேஷன்ஸ்

விலை =ரூ 40/

அன்புடன் =பெ. அந்தோணிராஜ்
தேனி.