கவிதை: நியாயம் கேட்கும் எசமானர்கள் – கனகா பாலன்நியாயம் கேட்கும் எசமானர்கள்
*************************************
ஒலைக்கு அரிசி
ஒலைக்குள்ள கொதிக்க
சுவிட்ச்சப் போட்டாக்கா
விளையுமா நெல்லு
கதிரு விளைச்சலைக்
கண்குளிரப் பாக்க
கருத்தரிச்சக் தாயாத்தான்
ஆகுவானே ஒழவன்
ஓயாமப் பெய்தாலும் அழுவான்
ஒரேவாக்குலச் சுட்டாலும் சொணங்குவான்
அடிஸ்கேலு அளவாட்டம்
அவங்கணிப்பு
முன்னுக்கும் பின்னுக்கும்
அலுங்காது எப்போதும்
கோட்டு சூட்டு மிரட்டினாலும்
தோள்த்துண்டு இறங்காதய்யா
வஞ்சம் லஞ்சம் திணிச்சாலும்
வச்ச காலு நடுங்காதய்யா
பேருகாலம் அவனுக்கு
பேருவைக்க நீ யாரு
தாறுமாறுத் தகராற
ஓரம் பார்த்துத் தூரப்போடு
தருமத்தையும் நியாயத்தையும்
தலைமுழுகி தள்ளிவச்சா
பசிக்கும் வயித்துக்கு
பணந் திணிச்சா ஆறுமா..?
கனகா பாலன்