சிறுகதை: கனவுகள் உறங்குவதில்லை – ஜெயஸ்ரீ  அதிகாலை மணி 5:45 வீட்டில் விஷ்ணு சஹஸ்ரநாமம் முடிந்தது. அலமு அம்மாவின் ஸ்துதி துவங்கியதுஎப்படி வாசல்ல வந்து உட்கார்ந்துண்டு இருக்கு பாரு…  அசமஞ்சம்..  ஷேவிங் பண்ணா என்ன அழகு போய்டுமா?”

அலமு திட்டுவது காதில் விழுந்தாலும் மனதில் விழவில்லை மாதவனுக்கு.

புதிதாகப்  பிறந்த இரண்டு மாத கைக்குழந்தையோடு அம்மா வீட்டிற்கு வந்துள்ள அவன் தங்கை ஜனனி. “மாதவா.. அம்மா தூஷிக்குறா இல்ல.. உள்ள போடா. வாசல்ல உட்காராத..”

அழுத பிள்ளைக்குத்  தன் மீது டவலை போர்த்தியபடி பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். அமைதியாக எழுந்து உள்ளே சென்ற மாதவன் கட்டிலில் அமர்ந்தான். தனது கண்ணாடியை கழற்றி வைத்துத்  துடைத்தான்.

பீரோவைத்  திறந்தான். தனது அரிதிலும் அரிய பொக்கிஷமான டி. எஸ். எல். ஆர் கேமிராவை வெளியே எடுத்தான் ஒரு முயல் குட்டியினைத் தூக்குவது போல அவ்வளவு சிரத்தையோடு மென்மையாகத் தனது விரல் ரேகைகள் கூட அதன்மீது பட்டு அசுத்தமாகி விடக்கூடாதே என்று பட்டுப்போலக் கையில் எடுத்தான். இந்த உலகத்திலேயே அவன் அதிகபட்ச நேசம் வைத்திருப்பது அந்த கேமிரா மீது தான். அவனது காதலி, மனைவி, நட்பு, உறவு என அனைத்துமே கேமிராவாகவே இருந்தது.

மாதவன் 28 வயது இளம் வாலிபன். தனது பத்தாம் வயது முதல் புகைப்படக் கலைஞனாக வேண்டும் என்று தீராத ஆசை. பள்ளியில் ஆறாம் வகுப்பில் இவன் எடுத்த ஒரு பட்டாம்பூச்சியின் புகைப்படத்தைப் பாராட்டாத ஆளே கிடையாது. அதை இன்னமும் தனது டைரிக்குள் வைத்திருக்கிறான், அடிக்கடி பார்த்துப் பூரிப்படைவான். அந்த அறியாத வயதில் கிடைத்த பாராட்டின் எதிரொலியாக கேமிராவின் மீது மோகம் எழுந்தது. மோகம் தணியாமல் 18 வருடமாக கேமிராவுடனே வாழ்ந்து வந்தான். யார் கேட்டாலும் பி.சி மாதவன் என்றே சொல்லிக் கொள்வான். படித்தது டி. எம். அப்போதும் கேமிரா தான் துணை.தனது சந்தியாவந்தனத்தை முடித்துவிட்டு வந்த நாகராஜ குருக்கள். மாதவனைக் கடந்து அமைதியாக சென்றார்.

அலமு… “

இதோ ரெடியாயிடுத்துன்னா” 

 மதிய உணவு, பிளாஸ்கில் டீ மற்றும் பாட்டிலில் நீருடன் வேகமாய் வந்தாள் அலமு. அவர் கையில் கொடுத்தாள்

ஏன்னா..  சேஷாத்திரி மாமா…. “

நான் ஞாபகப்படுத்துறேன்டி..  வரேன்டிவண்டியைக் கிளப்பி வேதபுரீஸ்வரர் கோயிலுக்குப் புறப்பட்டார்.

நாகராஜ குருக்கள் இந்த வருடம் தனது வைதீகப் பணியிலிருந்து ஓய்வு பெறப்போகும் தருணம். தன்னுடைய பணியை மாதவன் தொடர்வதற்காக அறநிலைய துறை சேஷாத்திரியிடம் பேசிவைத்துள்ளார். அதில் மாதவனுக்கு உடன்பாடு இல்லை.

அன்று பிரதோஷம் என்பதால் கோவிலில் அதிக கூட்டம். வழக்கம் போல கார்த்திகேயன் வந்திருந்தார். கார்த்திகேயன் ஜனனியின் கணவர், நாகராஜ குருக்களின் மருமகன்.

அடடே மாப்பிள்ளவாங்கோ.. பிரசாதம் வாங்கிக்கோங்கோ.. ” கையில் திருநீறை தந்தார் சேஷு. “ஆத்துல எல்லாரும் ஷேமமா..?”

சேவிச்சுகிறேன் மாமா.. ” சாஷ்டாங்கமாக அவர் காலில் விழுந்தான் கார்த்திகேயன்.

அய்யய்யோ.. ஈஸ்வரன் சந்நிதியில என் கால்ல எல்லாம் விழப்படாது அம்பி. எந்திருங்கோ. தீர்க்காயுஷ்மான் பவ… “

லோக சமஸ்தா சுகினோ பவந்த்துதிரும்பியவன் ஈஸ்வரனைப் பார்த்து ருத்ர காயத்ரியை மூன்று முறை ஜபித்தான்.

ஆத்துல எல்லாரும் ஷேமம் மாமா.. நம்ம மாதவன் பத்தி பேசலாம்னு… ” 

பேஷாநாகுஇங்க வா..  புள்ளையாண்டான் மாதவன பத்தி பேச வந்திருக்கான். சித்த நேரம் வா… “

சாயரக்ஷைக்கு புஷ்பங்கள் தயார் செய்து கொண்டிருந்த நாகராஜன். கார்த்திகேயன் அருகில் வந்தார். “சொல்லுங்கோ….”

மாமா.. மாதவனுக்கு போட்டோ ஸ்டுடியோ ஏற்பாடு முடிஞ்சிடுத்து. நல்ல நாளா பாத்து ஹோமம் பண்ணிட்டா ஆரம்பிச்சுடலாம். கடை வாடகை மட்டும் மாசம் பத்தாயிரம். கரண்ட் செலவு தனி…”

சரிங்க மாப்ள.. நீங்களும் மாதவும் பேசி முடிவெடுங்கோ.. என் பேச்சுக்கு எப்போ மரியாதை கிடைச்சிருக்கு.. ” அமைதியாக உள்ளே சென்றுவிட்டார் நாகராஜன்

அவரது வீட்டிற்குச் சென்றான் கார்த்திகேயன். பார்த்ததும், அலமு, “அடடே வாங்கோ மாப்பிள்ளை..  ஜனனி, தீர்த்தம் எடுத்துண்டு வா..  மாப்பிள்ளை வந்திருக்கார்

உள்ளே இருந்த மாதவனுக்கு கண்கள் மின்னியது. மனம் சுறுசுறுப்பு அடைந்தது. தனக்கென்று எப்போதும் ஆதரவாய்ப் பேசும் கார்த்திகேயன் மீது அளவற்ற பாசமும் மரியாதையும் வைத்திருந்தான்குரலைக்  கேட்டதும் மிக ஆவலாய் வந்தவன்அத்திம்பேர் வாங்கோ..” என்றவன் அலமுவை பார்த்ததும் தலை குனிந்து கொண்டான்.

செம்பில் தண்ணீர் கொண்டு வந்த ஜனனி. “கிருஷ் குளிச்சிட்டு இப்போதான் தூங்குறான்என தூளியை காட்டினாள். தூளியின் அருகே சென்ற கார்த்திகேயன் தனது குட்டி கிருஷ்ணன் துயில் கொள்வதைப் பார்த்து உருகி நின்றான். ஜான்சன் பேபி பவுடர் மணம் வீச, பால் குடிக்கும் நினைவிலேயே உதட்டினை குவித்து உறிஞ்சும் பாணியிலேயே தூங்கிக் கொண்டிருந்தது அந்த சிசு குழந்தை தூங்குறச்சயே நீயும் ரெஸ்ட் எடு. போ ஜனனி… ” அவளைத் தூங்க அனுப்பி வைத்துவிட்டு மீண்டும் அமர்ந்தான்

அது தான் தாமதம். தனது வசவினைத் துவங்கி விட்டாள் அலமு. “இந்த மாதவன்மாமா ரொம்ப கஷ்டப்பட்டு சேஷு கிட்ட சிபாரிசுல வைதீகாளுக்கு சொல்லி வைச்சிருக்கார். இந்த அசமஞ்சம் கேமிராவை வச்சிண்டு சுத்திண்டு இருக்கு. சொன்ன பேச்ச கேக்குறதே இல்ல. அத்திம்பேர் நீங்க தான் புத்தி சொல்லணும். இந்த வருஷத்தோட மாமாக்கு சர்வீஸ் முடியுறது. இவன் போட்டோ கேமிரான்னு இருந்த ஜீவனத்துக்கு என்ன பண்றது…” தன்னுடைய மடிசாரின் ஓரத்தை பிடித்து கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

அழாதேள் மாமி.. மாதவன் போட்டோ ஸ்டிடுயோ விஷயமா பேசலாம் என்று தான் வந்தேன். புரசைவாக்கத்துல மதார்ஷா பக்கதுல ஒரு கடையை வாடகைக்கு எடுத்தாச்சு. மாசம் பத்தாயிரம். கரண்ட் செலவு தனி

இதைக் கேட்டது தான் தாமதம். மாதவன் ஓடிச்சென்று அத்திம்பேரைக் கட்டியணைத்துநீங்க ஒருத்தராச்சும் என்ன புரிஞ்சிண்டேளே அத்திம்பேர்.. ” தொண்டையை கம்மி ஆதங்கத்தை கட்டுக்குள் வைத்தான்

கிருஷ் ஃபோட்டோ அன்ட் வீடியோகிராபிஎன்று பேனரை தாங்கிய ஸ்டுடியோ இனிதே துவங்கப்பட்டது.

நாட்கள் ஓடின

ஐந்து மாதங்கள் கழிந்தது

ஆனாலும் மாதம் எட்டாயிரத்திற்கு மேல் வருமானம் வரவில்லை. கடை வாடகை கூட அவனால் முழுதாகத் தர இயலவில்லை. இதற்கு மேலும் தாமதிக்க கூடாது என முடிவெடுத்தான். வெற்று பேப்பரில் எழுதி சாவியை தனது ரூமில் வைத்து விட்டு இரவோடு இரவாக கிளம்பி விட்டான்

காலையில் ரூமைத் திறந்த ஜனனி. மாதவன் இல்லாததையும் டேபிளின் மீது ஏதோ பேப்பரில் எழுதி வைக்கப்பட்டுள்ளதையும் கவனித்தாள். பேப்பரின் மேலே கடையின் சாவியும் 25,000 ரூபாய் ரொக்கமும் இருந்தது

அன்பு அம்மா அப்பா ஜனனி அத்திம்பேர்… 

 இதற்கு மேல் என்னால் முடியவில்லை. ஏழை பிராமணண் வீட்டில் பிறந்தது குற்றமா? எனக்கென ஒரு கனவினை வளர்த்தது குற்றமா? அப்பாவின் பேச்சை மதிக்காமல் வைதீக வாய்ப்பைத் தவறவிட்டது குற்றமா? கார்த்திகேயன் மாமா உதவ நினைத்தது குற்றமா? எது குற்றம் என்று புரியவில்லை. எனது கனவு வாழ்க்கையை நான் தேடிப் போகின்றேன். என்னை யாரும் தேட வேண்டாம்

 இப்படிக்கு  

மாதவன்… “ஜனனியும் அலமுவும் இடிந்து போனார்கள். நாகராஜன் இப்போதும் அமைதி காத்தார். கார்த்திகேயனுக்கோ மாதவன் எடுத்த முடிவு சரிதானா என்று குழம்பினான். வீடு மயான அமைதியானது

வாரங்கள்.. மாதங்கள்.. ஆண்டுகள் உருண்டோடியது. மாதவனைப் பற்றி எந்த தகவலும் இல்லை. நாகராஜன் உடல்நிலையும் மோசமானது. கிருஷ் குட்டி நடக்கவும் தொடங்கிவிட்டான்.

அன்று இரவு ஒன்பது மணியளவில் கார்த்தியேன் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வந்தது

நான் நாளைக்கு நம்மாத்துக்கு வரேன். தொடர்ந்து பயணத்துல சிக்கிண்டதால என்னால கால் பண்ண முடியலமாதவன்

கார்த்திகேயனுக்கு ஒன்றும் புரியவில்லை. மாதவன் தானாஎப்படி வருவான்..  ஏதும் அசம்பாவிதமோ.. என்ற பல கேள்விக் கணைகளோடு வீட்டில் அனைவரிடமும் விஷயத்தைப் பகிர்ந்தான். எல்லாருக்கும் ஒருவித சந்தோஷமும் குழப்பமும் நிலவியது. இரவு யாருமே தூங்காமல் ஒருவித பதைப்புடனே இருந்தார்கள்

காலை சரியாக மணி பதினொன்று. வாசலில் வெள்ளை நிற இன்னோவா கார் வந்து நின்றது. உள்ளிருந்து மாதவன் இறங்கினான். ஃபார்மல் உடை, நேர்த்தியான சிகை அலங்காரம், மிடுக்கான நடை, கான்டாக்ட் லென்ஸ் பொருத்தப்பட்ட கண்கள். நுனி நாக்கு ஆங்கிலத்தில் ட்ரைவருக்கு நன்றி சொன்னான். இன்னோவா பறந்துவிட்டது

வாசலில் நின்ற மாதவனைப் பார்த்து எல்லோரும் ஸ்தம்பித்து நின்றார்கள். அக்ரஹாரமே சூழ்ந்து கொண்டது. நேராக கார்த்திகேயன் காலில் விழுந்தான். “சேவிக்கிறேன் அத்திம்பேர்.. “

நல்லா இருக்கியா மாதவா… “

பதிலேதும் சொல்லாதவனாய் நேரே வீல் சேரில் இருந்த நாகராஜனிடம் சென்றான். “அப்பா.. ” அவர் மடியில் தனது அலுவலக அடையாள அட்டையை வைத்தான்

என். மாதவன்..  சீனியர் போட்டோகிராபர்.. நியூ இந்தியா பிரைவேட் லிமிடெட் என்று இருந்தது

ஆசியாவின் மிகப்பெரிய பத்திரிக்கை நிறுவனம் கிட்டத்தட்ட 1700 ஊழியர்களை கொண்டு இயங்கும் நிறுவனம். அதில் மாதவன் பணி புரிகிறான். மாதம் 1 லட்சம் சம்பளம்..” சொல்லி முடித்தான் கார்த்திகேயன். அலமுவிற்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

மாதவா.. எங்கள மன்னிச்சுடு.. நாங்க உன்ன புரிஞ்சிக்காம தப்பு பண்ணிட்டோம். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு ஆசை கனவு இருக்கும். அதை குழி தோண்டி புதைச்சு எங்க ஆசைய உன் மேல திணிச்சு உன் மனச ரொம்ப காயப்படுத்திட்டோம். இப்ப உன்ன நெனச்சா ரொம்ப பெருமையா இருக்குடா… “

அம்மா..  என் மேல இருக்குற பாசமும் எங்கே நான் வழிதவறி போய்டுவேனோனு அக்கரையிலும் தான் நீங்க அப்படி நடந்துக்குடீங்க. அப்பா..  எப்பவும் உங்க பொறுமையும் அமைதியும் தான் எனக்கு பக்க பலமா இருந்தது. என் கனவை துரத்திப் போக அத்திம்பேர் தந்த ஊக்கம் தான் முக்கிய காரணம்… “

எனக்கு பசிக்குதும்மா உன் கையால கொஞ்சம் வத்த குழம்பு வச்சு ஊட்டி விடுமா.. ரொம்ப வருஷமாச்சு நம்மாத்து சாப்பாடு சாப்பிட்டு… “

அலமு ஜனனி மிக சந்தோஷமாக அடுப்பங்கரைக்கு விரைந்தார்கள்

மாதவன் தனது அறையைத் திறந்தான். மீண்டும் அதே டி. எஸ். எல். ஆர். நெருக்கமாக எடுத்து அணைத்து முத்தமிட்டான்.

பீரோவின் கதவை மூடினான். மூன்றாம் வகுப்பு படிக்கையில் எழுதி ஒட்டிய ஆத்திச்சூடி காகிதம் கிழிந்து ஒரு சிறிய பகுதி மட்டும் ஒட்டியவாறு இருந்தது. அதிலிருந்த ஒற்றை வரியைப் படித்தான்.

ஊக்கமது கைவிடேல்.