கவிதை – முதல் பிரசவம்
ஒன்பதாம் வகுப்பு மாணவனின் சிறந்த கற்பனைகளை முதல் பிரசவமாகத் தருகிறோம்.
புக்டே இணைய இதழில்தான் அவரது கவிதைகளுக்கான முதல் பிரசவம். ஆனால் துள்ளி விளையாடுகிற குழந்தைகள்.
இப்படி சிறந்த கவிதைகளை எழுதுகிற இளைய கவிஞர்களை புக் டே இணைய இதழ் வரவேற்கிறது. அவர்களுக்கான பிரசவ அறை எங்களிடம் தயாராக இருக்கிறது.
கவிஞர். கனியமுதன் கவிதைகள்
****************************** *******************
நிலா
********
இருள் சூழ்ந்த காட்டில்
நடுவில் ஒரு
வட்டமான வெள்ளை பூங்கா
மின்விசிறி
****************
ஒரு வண்ண இட்டலியைத்
தின்ன முடியாமல்
மூன்று சகோதரர்கள்
தினமும் சுற்றுகிறார்கள்
மூக்கு
*********
முக்கோண
சுவாச வீட்டிற்கு
இரண்டு வாசல்
டியூப் லைட்
*****************
ஒளியால்
நம்மைப் பார்த்துச் சிரிக்கும்
பளபள வெள்ளை மூங்கில்
கடல்
********
காலையில்
சூரியனைத்துப்பி
மாலையில்
சூரியனை விழுங்கும்
திரவக் கண்ணடி
வாய்
********
சிறு குகைக்குள்
முப்பத்திரண்டு வீரர்கள்
நடுவில்
நடனம் ஆடும்
குட்டிப் பாம்பு
நட்சத்திரங்கள்
**********************
நள்ளிரவில்
நம்மைக் கண்காணித்து
அழகாய்
மினுமினுக்கும்
ஆயிரம் கண்கள்
கண்கள்
*************
வெள்ளைக் குளத்தில்
மிதந்து பார்க்கும்
கருப்பு நிலா
துப்புரவுத் தொழிலாளி
****************************** ****
அசிங்கத்தின் ராஜாவை
சுத்தம் செய்பவன்
சுகாதாரத்தின் காவலாளி.
— கனியமுதன் த/பெ. கவிஞர் அகவி
ஒன்பதாம் வகுப்பு
பெரம்பலூர்


ஆஹா வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதை நிரூபித்து விட்டார்
கனியமுதன் வாழ்த்துகள் …ஒன்பதாம் வகுப்பு படிக்கையில் என் முதல் கவிதை அறிஞர் அண்ணா நிறுவிய காஞ்சி பத்திரிகையில் வெளியான நினைவு என்னைச் சூழ்கிறது… தொடர்ந்து எழுதுங்கள்… சுற்றிலும் இயர்கையை, மனிதர்களை, வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைத் தொடர்ந்து கவனித்து வாருங்கள்…வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வாசியுங்கள். கொரோனா கொடுமை ஓய்ந்தபின் ஓடியாடி விளையாடும் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவியுங்கள்… அன்பு கொண்டாடுங்கள். வாழ்த்துகள்.
எனக்கே இன்ப அதிர்ச்சி, இன்னொரு விஷயம், இங்கே கமெண்ட்ஸ் போடலாம் என்று வந்தால், எனக்கு முன்பே ஒருவர் உங்களை வாழ்த்தி இருக்கிறார், அவர் வேறு யாருமல்ல, என் அண்ணன் எஸ் வி ரங்கராஜன்! என் வாசிப்பு, எழுத்து உள்பட என் இளம் வயதிலிருந்து இன்றுவரை மிகப்பெரிய ஊக்கம் அளித்து வருபவர். நன்கு எழுதும் படைப்பாளிகள், நற்செயல்கள் செய்யும் அதிகாரிகள், தொண்டாற்றுபவர்கள் யாராகிலும் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமோ, அலைபேசி எண் கிடைத்தால் அதில் செய்தியாகவோ தமது வாழ்த்தைத் தவறாது பதிவு செய்து வருபவர். உங்கள் எழுத்திற்கு அவர் வாழ்த்து எனக்கும் சேர்த்துக் கிடைத்த உற்சாகம்.
எஸ் வி வேணுகோபாலன்
9445259691
டுயூப் லைட்டை மூங்கிலுக்கும் கண்ணை கருப்பு நிலவு என்றும் நாவை குட்டிப் பாம்பு என்றும் ஒப்பிட்டு சொல்லியிருக்கிறீர்கள். நல்ல கற்பனை வளம். பெரம்பலூரில் மூங்கில்கள் விளைகின்றன என்று நினைக்கிறேன். எழுதுங்கள். வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் தம்பி 💐
மிக அருமையான படைப்பு….
ஒப்பீடு மிக அருமை….
ஒளிமயமான எதிர்காலம் உன் கவிதையில் தெரிகிறது……
வாழ்க வளமுடன்…
வாழ்க தமிழுடன்…..
கனியமுதன் கவிதைகள்
கனியைப்போல இனிக்கிறது.ஒவ்வொரு கவிதையும் அருமை.கற்பனை வளம்,கருத்துச் செறிவு.இளமையிலேயே முதிர்ந்த
பார்வை.
தொடர்ந்து அவர் எழுத வேண்டும்.
இனிய வாழ்த்துக்கள்.