உலகறிந்த இந்திய மாற்று எரிசக்தி துறை விஞ்ஞானி கனிஷ்கா பிஸ்வாஸ் (Kanishka Biswas)
தொடர் : 30 இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100
இந்தியாவினுடைய தூய சுற்றுச்சூழலுக்கான மாற்று எரிசக்தி துறையில் ஜவஹர்லால் நேரு அட்வான்ஸ்டு சைன்டிபிக் ரிசர்ச் என்னும் நிறுவனத்தில் பெங்களூரில் முதன்மை விஞ்ஞானியாக இருப்பவர் தான் கனிஷ்கா பிஸ்வாஸ். பேரறிஞர் சி.என்.ஆர். ராவ் தலைமையில் முனைவர் பட்டம் பெற்றவர் இவர். அமெரிக்காவிலுள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகம் இவருக்கு முனைவர் பட்டத்துக்குப் பிறகான ஆய்வுகளை மேற்கொள்ள ஒரு வாய்ப்பை கொடுத்தது..
உலகத்தில மிகவும் வேகமாக பெட்ரோலிய எரிபொருள் தீர்ந்து வருகிறது. அதுமட்டுமல்ல மின்சாரம் தயாரிக்கப்படும் கரி என்கிற கார்பனின் அளவும் மிக வேகமாக குறைந்து வருகிறது. மின் உற்பத்தியில் ஈடுபடுகின்ற அனைத்து வகையான உற்பத்தி நிலையங்களும் சுற்றுச் சூழலை பெரிய அளவில் பாதித்து வருகின்றன. உலகளவில் பூவி வெப்பம் அதிகரிப்பதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று கரியை எரிப்பதன் மூலம் மின்சாரம் தயாரிக்கின்ற பிரதான முறை ஆகும்.
இதற்கான மாற்று முறைகளை கண்டறிவதுதான் மாற்று எரிசக்தி துறை என்பதன் அடிப்படை. நோக்கம் மின்சாரம் இல்லாமல் இனி மனிதனால் வாழ முடியாது ஆனால் அதற்கான மின்சாரத்தை தயாரிப்பதற்கு மாற்று வழிகளை தேட வேண்டிய நிலை மனிதனுக்கு வந்துள்ளது. இதற்கென்று தனியாக ஒரு இயற்பியல் துறை ஒரு வேதியல் துறை இவற்றை ஒன்றிணைக்கிற எரிசக்தி துறை என்னும் துறைகளில் முற்றிலும் நிபுணத்துவம் பெற்ற கனிஷ்கா பிஸ்வாஸ் என்கிற மாபெரும் அறிஞர் உலக அளவில் தற்போது பேசப்படுகிறார்.
மாற்று எரிசக்தி துறை என்பது யாது? அதில் கனிஷ்கா பிஸ்வாஸின் பங்களிப்பு என்ன? இந்திய அரசு இதை அங்கீகரித்து உள்ளதா, இது எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பது போன்ற பல கேள்விகளுக்கு நாம் விடை தேடியாக வேண்டும். எரிசக்தி துறைக்கான மாற்று என்பது புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் என்று அழைக்கப்படுகிறது. இது இயற்கை வழங்கும் வளங்களை மாற்று வழி ஆற்றல் ஆகும். அவை மனித கால அளவில் நிரப்பப்படுகின்றன. மிகவும் பழங்காலத்தை நம்பி முற்காலத்தில் புதையுண்டு பல வகையான உயிரினங்களை நம்பி இருக்கவில்லை புதுப்பிக்க தக்க ஆற்றலின் வகைகள் என்று வரும்பொழுது சூரிய ஆற்றல், காற்றாலை ஆற்றல், நீர்மின்சாரம் என்று பல வகையாக அழைக்கப்படுகிறது.
உயிர் ஆற்றல் மற்றும் புவி வெப்ப ஆற்றல் சில நாடுகளில் இன்று செயல்பட தொடங்க இருக்கிறது. அணுசக்தி மூலமாக புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் மூலம் வழங்கப்படுவது என்பது இன்று சர்ச்சைக்குரியது. என்னென்றால் அங்கிருந்து வெளியேறும் கழிவுகளை கடலில் கலக்கும் பொழுதும் ஒரு அனு நிறுவனம் செயல்படும் பொழுது அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்படுகின்ற கதிர் வீச்சு தாக்குதலும் இந்த முறையை சர்ச்சைக்குரியதாக மாற்றியுள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகள் கடந்த 30 ஆண்டுகளில் மிக விரைவாக திறமையாக மலிவாக மாற்றப்பட்டுள்ளன. உலகளவில் புதிதாக நிறுவப்பட்ட மின்சாரத்தின் பெரும்பகுதி இப்போது புதுப்பிக்கத் தக்கதாக மாறிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் சூரிய சக்தி மற்றும் காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்கள் கடந்த தசாப்தத்தில் கணிசமான செலவு குறிப்புகளை உருவாக்கியுள்ளன.
இவை எந்த அளவிற்கு இன்றைக்குத் அரசின் மீது நிர்பந்தத்தை செலுத்துகிறது என்றால் நீங்கள் உங்கள் வீட்டில் சூரிய சக்தி மின்சாரம் தயாரிப்பதற்கு அரசு மானியம் வழங்கும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கும் அளவிற்கு நிர்பந்தம் கூடியுள்ளது. புதை படிவ எரி பொருட்கள் மிக வேகமாக தீர்ந்து வரும் பட்சத்தில் நாம் இயந்திரங்களை இயக்குவதற்கான மாற்று எரிசக்தியை நோக்கி செல்ல வேண்டியிருக்கிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்துதல் பல தடைகளை எதிர்கொள்கிறது. இதற்காக வேதியியல் நவீனப்படுத்தப்பட்டு பல வகையான தீர்வுகளை முன்வைக்கிறது. அப்படியான அற்புதமான மூன்று தீர்வுகளை முன்வைத்த நமது விஞ்ஞானி தான் கனிஷ்கா பிஸ்வாஸ்.
இவர் முன்வைத்த முதல் தீர்வு என்பது CHALCOGENIDE என்கிற முக்கியமான வேதிக் கலவை சம்பந்தப்பட்டதாகும் CHALCOGENIDE என்பது குறைந்த பட்சம் ஒரு எலெக்ட்ரோ பாசிட்டிவ் தனிமத்தை உள்ளடக்கிய வேதிக் கலவை. இதை அவர் பல வகையான தீர்வுகளுக்காக முன்மொழிந்தார். வேதி அட்டவணையில் உள்ள குழு 16 கூறுகளும் CHALCOGENIDE என்று வரையறுக்கப்பட்டாலும் CHALCOGENIDE என்ற சொல் பொதுவாக ஆக்சைடுங்களுக்கு பதிலாக SULFIDES, SELENIDES,TELLURIDES மற்றும் POLONIDES தன்னகத்தே கொண்டுள்ளது. பல உலோக தாதுக்கள் CHALCOGENIDE களில் உள்ள ஒளிபரப்பி CHALCOGENIDE கண்ணாடிகள் ஜராபிக்ல் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகையான வேதிப்பொருட்கள் மாற்று எரிசக்தி துறையில் பெரிய அளவில் பங்காற்ற முடியும் என்பது கனிஷ்கா பிஸ்வாஸின் கண்டுபிடிப்பு ஆகும்.
தெர்மோ எலெக்ட்ரிக் பொருட்களின் மீது இந்த வகையான வேதி பொருட்களை மின்னாற்றலுக்கு உட்படுத்தும் பொழுது தெர்மோ எலெக்ட்ரிக் விளைவு என்கிற ஒன்று ஏற்படுகிறது. இது வெப்பநிலை வேறுபாடு மின்னாற்றலை உருவாக்குகிறது. இந்த நிகழ்வுகள் குறிப்பாக சி பிளாக் விளைவுகள் என்று அழைக்கப்படுகின்றன. வெப்பநிலை வேறுபாட்டில் இருந்து மின்னழுத்தத்தை இவற்றால் உருவாக்கிக்கொள்ள முடியும். இது தாம்சன் விளைவோடு இணைக்கப்படுகிறது. தாம்சன் விளைவு என்பது மின்சாரம் மற்றும் மின்னோட்டத்தின் பொழுது கடத்திக்குள் மாற்றக்கூடிய வெப்பமாக்கல் அல்லது குளிர்வித்தல், வெப்பநிலை சாய்வை குறிக்கிறது. இது மின்சாரம் தயாரிப்பதற்கான மிக முக்கிய தீர்வாகும்.
இந்த பொருட்களுக்கான உற்பத்தி முறைகளை துகள் மட்டும் படிக வளர்ச்சி அடிப்படையிலான நுட்பங்களாக மாற்றுகின்றோம். துகள் அடிப்படையிலான நுட்பங்கள் விரும்பிய கேரியர் விநியோகம் துகள் அளவு மற்றும் கலவை ஆகியவற்றை கட்டுப்படுத்தவும் பராமரிக்கவும் சிறந்த திறனை வழங்குகின்றன. கனிஷ்கா பிஸ்வாஸின் இன்னொரு முக்கியமான கண்டுபிடிப்பு 3D பிரிண்டிங் எந்திரவியலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை இந்த வகை உலோக கலவைகள் எப்படி ஏற்படுத்த முடியும் என்பது சம்பந்தமானது.
தேர்மோ எலெக்ட்ரிக் பொருட்கள் வெப்பத்தை உறிஞ்சி மின்சாரத்தை உருவாக்கும் சிறப்பு பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இருக்கமான கட்டுப்படுத்தப்பட்ட இடைவெளிகளில் சிக்கலான வடிவவியலை பொறுத்து 3D அச்சிடுதல் என்பது எந்த வகையான மின்சாரத்தையும் வெளியிலிருந்து பயன்படுத்திக் கொள்ளாமல் தனக்கு தானே மின்சாரத்தைத் தயாரித்துக் கொண்டு இந்த ஆலைகள் இயங்க முடியும். எனவே ஒரு ஆலையின் பயன்பாட்டுக்கான மின்சாரத்தை இந்த வகையான உலோக கலவைகளை நாம் உட்படுத்துவதன் மூலம் இவ்வகை ஆலைகள் எலெக்ட்ரிக் பொருட்கள் உற்பத்தியில் தானே மின்சாரத்தைத் தயாரித்துக் கொண்டு உற்பத்தியையும் தொடர்கின்றன. இந்த பிரம்மாண்ட சாதனை கனிஷ்கா பிஸ்வாஸின் மாபெரும் பங்களிப்பாகும்.
கனிஷ்கா பிஸ்வாஸ் 1952 ஆம் ஆண்டு அக்டோபர் இருபத்தி ஐந்தாம் நாள் பிறந்தார். பெங்களூரில் பள்ளி கல்வியை முடித்து அங்குள்ள இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நிறுவனத்தில் இளம் அறிவியல் பட்டத்திற்கு வேதியல் பாடத்தை தேர்வு செய்தார். அதே நிறுவனத்தில் எம் எஸ் டிகிரி முடித்த பிறகு முனைவர் பட்ட ஆய்வில் சி.என்.ஆர். ராவ் என்கிற அறிஞரோடு இணைந்தார். மாபெரும் அறிஞர் கனிஷ்கா பிஸ்வாஸ் 2021 ஆம் ஆண்டு சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது பெற்றவர் ஆவார். இன்று உலகம் முழுவதும் இவருடைய கண்டுபிடிப்பு ஆலைகளில் பயன்படுத்தப்படுவது இந்தியாவுக்கு பெருமை.
கட்டுரையாளர் :
தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: உலகம் போற்றும் இந்திய இயற்பியலாளர் ஜெயந்த் நர்லிக்கர் (Jayant Narlikar)
ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.