யாழினிக்கு பிடித்த இரு சக்கர வாகன பயணம் ஏனோ இன்று ஒருவித மரண பயத்தோடு கணவன் யுவன் பின்னே அமர்ந்து கொண்டு விழுப்புரத்திலிருந்து சென்னை நோக்கி அடர்ந்த மழையில் பயணித்துக் கொண்டிருக்கிறாள்.
கொரோனா ஊரடங்கு ஜூம் வழி கல்யாணம் என வரலாற்று மாற்றங்களோடு திருமணம் நடந்து முடிந்த ஒரே மாதத்தில் கரு தரிக்கும் பாக்கியம் யாழினிக்கு கிட்டியது.
வீட்டிலிருந்து பணி புரியும் முறை சென்ற மார்ச் 2020 முதல் பழகி விட்டோம். திடீரென நேற்று மேலாளர் அலைபேசியில் ஆள் குறைப்பு அறிவித்துள்ளார்கள் பணியில் தொடர அறிவித்தவர்களில் யாழினியும் ஒருவர். உடனே சென்னை வந்து பணி துவங்க வேண்டும் என்றார். தனியார் நிறுவனம். கட்டுப்பட்டு நடந்தால் மட்டுமே பணி என்பது தெரிந்தது தானே.
யுவன் வேலை வேறு சற்று பிரச்சனையில் உள்ளது. குடும்பம் வளர ஆரம்பித்துவிட்டதால் யாழினியின் வருமானம் கருவுற்ற நேரத்தை மகிழ்வோடு கழிக்க அவசியம் என்பதால் இந்த பயணம். கட்டுப்பாடுகளை கடந்து சென்னை வந்தாகிவிட்டது. யாழினி பார்த்து இறங்கு என்றான் யுவன். மேலாளரைப் பார்த்து பணி உறுதி செய்தாகிவிட்டது.
“இனி பிரச்சினை இல்லை” என்ற மனைவியை “இயலாமை” வேதனையோடு பார்த்தான் யுவன். அவன் மனம் அழுவதை யாழினி உணர்ந்தாள். சமாளித்துக் கொண்டு, “ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன்” என உள்ளே சென்றாள்.
புதிதாக அடித்திருந்த சிவப்பு வண்ணம் அடர்ந்த மழையில் கட்டிடம் அழுவது போல் கரைந்து கொண்டிருந்தது. அறியாமல் யாழினிக்காக காத்திருந்தான் யுவன்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

