Karana Kariyam Poetry A Srinivasan கவிதை காரண காரியம் அ சீனிவாசன்

கவிதை: காரண காரியம் – அ.சீனிவாசன்

 

 

 

நீ எதனால் மலர்ந்திருக்கிறாயோ
அதனால் தான்
அவன் வாடியிருக்கிறான்.
நீ எதனால் உடுத்தியிருக்கிறாயோ
அதனால் தான்
அவன் நிர்வாணமாய் இருக்கிறான்..

உனக்கு எதனால் அஜீரணமோ
அதனால் தான்
அவனுக்குப் பசிக்கிறது.
நீ எதனால் அங்கிருக்கிறாயோ
அதனால் தான்
அவன் இங்கிருக்கிறான்.

உன்னிடம் எதனால் இருக்கிறதோ
அதனால் தான்
அவனிடம் இல்லாதிருக்கிறது.
நீ எதனால் கொடுக்காதிருக்கிறாயோ
அதனால் தான்
அவன் எடுக்கிறான்.

நீ எதனால்
உயர்த்தப்படிருக்கிறாயோ
அதனால் தான்
அவன் தாழ்த்தப்பட்டிருக்கிறான்.
நீ எதையெல்லாம்
அபகரித்துள்ளாயோ
அதெல்லாம் அவன் உரிமை.

நீ எதனால் அமைதியாய் இருக்கிறாயோ
அதனால் தான்
அவன் ஆர்ப்பாட்டம் செய்கிறான்.
எதனால் அவன் குரல் உனக்கு
கேட்காமல் இருக்கிறதோ
அதனால் தான்
அவன் எழுதுகிறேன்.

ஒரு நாள்
வலிகள் இடம் மாறும்..

அ.சீனிவாசன்

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *