நூல் அறிமுகம்: ப்ரதிபா ஜெயச்சந்திரன் எழுதிய *கரசேவை* – எஸ். சண்முகம்நூல்: கரசேவை 
ஆசிரியர்: ப்ரதிபா ஜெயச்சந்திரன்
வெளியீடு: பாரதிபுத்தகாலயம்
விலை: ரூ.120
புத்தகம் வாங்க கிளிக் செய்க: https://thamizhbooks.com/product/karasevai/

புனைகதைகள் பெரும்பாலும் ஏதேனும் ஒரு நிகழ்வையே தனது பிரதியாக்க உந்து சக்தியாக உபயோகித்துக்கொள்வது வழக்கமான ஒன்று. இருப்பினும் நவீனத்துவம், மற்றும் நவீனத்துவத்திற்கு பிந்தைய நிலையில், பிரதியாக்கப்படும் சிறுகதைப் பிரதிகள் மரபானவைபோல எழுதப்படுவதும் இல்லை, வாசிக்கப்படுவதும் இல்லை. எழுத்தும் வாசிப்பும் தங்களுக்குள் நிகழ்த்திக்கொள்ளும் பரிமாற்றமாகவே கதைப் பிரதிகள் அமைகின்றன. நிகழ்வு என்பது வெறும் தனிமனித அனுபவமாக உறைந்துவிடுவதில்லை. அதற்கு மாறாகக் கூட்டு நினைவிலி மற்றும் கூட்டு மனோபாவத்தின் அலகாகச் செயல்படுகிறது. புறவயமான சம்பவங்களிலும்  கூட, பங்கேற்பாளனின் ‘தன்னிலை’ வினையாற்றிக் கொண்டேதான் இருக்கிறது. முழுமையான ஒற்றைப் பிரதியியல் என எதையும் வரையறுக்க இயலாது. எண்ணற்ற தன்னிலைகளின் வலைப் பின்னலாகவும் தன்னிலைகளின் புறவியக்கத்தினுள் கையாளும் சொல்லாடல்களின் ஊடுபாவாகவும் இருப்பதே இன்றைய புனைகதை நுட்பமாகும்.

தமிழின் தற்போதைய எழுத்துச் சூழலில் எழுதப்படும் சிறுகதைகளின் போக்கில், ப்ரதிபா ஜெயச்சந்திரனின் ‘கரசேவை’ தொகுப்பு, தன்னை அமைப்பாக்கிக் கொள்ளும் விதம், ஒருவகை கலாச்சார விசாரணை மற்றும் புறச்சூழலில் தனது உள்ளமைப்பாகக் கொண்டு இயங்குகிறது. இதில் தொகுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கதையும் பன்மை அடுக்குகளைக் கொண்டிருக்கின்றன. இயல்பான வாழ்வியல் அனுபவங்கள் துவங்கி மீ – இயல்புடைய அனுபவங்களாக மாறுகின்றன. தன்னிலையின் நிலையற்ற தன்மையைத் தனது கதையாடலாகக் கையாள்கிறார்.

வித்தியாசமானது அதுவும் விவிலிய தொடர்களை தன்வயப்படுத்தும் செய்து இதைப் பற்றி என்று குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்

தன்னுடைய கதையாடல்களின் மொழியாக பெரும்பாலும் விவிலியத்தின் மொழி நடையையும் அதன் சொற்களஞ்சியத்தையும் பிரதீபா கைக்கொள்கிறார். ஆகையால் அவரது சிறுகதைகளை வாசிக்கும் போது ஏற்படும் மொழி அனுபவம் வித்தியாசமானது. அதுவும் விவிலிய தொடர்களை தன்வயப்படுத்தும் செய்நேர்த்தியைப் பற்றி இங்குக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். சில இடங்களில் பகடியாகவும் சில இடங்களில் ஏற்கனவே தமிழில் நன்கு பரிச்சயமான நவீனத்துவ கதையாடல்கள் போலல்லாமல் ஒரு மாற்று நவீனத்துவ கதையாடலை விவிலியத் தொடர்களில் மறுபிரயோகம் மூலமாக எழுதுகிறார். இதன் மூலமாகச் சிறுகதை வாசிப்பாளனின் உணர்வும் கவனமும் இணைக்கப்படுகின்றன. ஒன்று நிகழ்வும் X முற்காலமும் இணையும் புள்ளியாக பிரதிபாவின் கதையாடல் மொழியாக அமைகிறது. கதையில் நிகழ்ந்துகொண்டிருக்கும் சம்பவத்தின் இடையே அதற்கு ஒப்பான அல்லது அதன் உள்ளடுக்கைத் தகர்க்கக் கூடிய விதத்தில், விவிலிய நிகழ்வுகளை எதிரிடையாகப் பகுதிகளுக்கிடையில் வைக்கிறார். இந்த உத்தி வினோதமான ரசவாதத்தை ஏற்படுத்துகிறது. சில சந்தர்ப்பங்களில் எடுத்தாளப்படும் விவிலிய வசனங்கள் கூரிய பகடியாகவும் அவலமாகவும் தொனித்து பிரதியின் பிரதான குரலைக் கீழறுப்புச் செய்கிறது. வாசித்தபின் மரபான பொருண்மை இறுதியில் பிறழ்ந்து விடுகிறது. சிறுகதையின் பிரதானக் கதையாடலின் போக்கை முற்றிலும் பன்மைப்படுத்தி விடுகிறது. ஒரு சம்பவத்திலிருந்து அதன் அடியோட்டமாக உள்ள சமூக அமைப்பின் ஒடுக்குமுறையை புறவயப்படுத்தும் லாவகம் ப்ரதிபாவின் சிறுகதை சாத்தியப் படுத்துகின்றன. அதிகாரப் பாய்விற்கு ஆட்பட்டுள்ளவர்களின் தன்னிலை இழப்பின் அழுத்தத்தை வாசகருக்குக் கடத்துகிறது.

பிரதீபா ஜெயச்சந்திரனின் சிறுகதைத் தொகுப்பில் அதிக கவனத்தைப் பெறும் கதைகள் மூன்று. அவை, சகோ ‘டி’, ’கரசேவை’, ’இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி’ என்பன தான். இக்கட்டுரையின் முற்பகுதியில் கூறியுள்ளது போல விவிலிய தொடர்கள் மற்றும் வசன பகுதிகள் கதாபாத்திரங்களின் வேடிக்கை மனோபாவத்தை வெளிப்படுத்த வல்லதாக இருக்கிறது. சபையில் தேவாலயத்தில் பிரார்த்தனை நேரங்களில், சகோ ‘டி’-யின் உள்ளக்கிடக்கையை ப்ரதிபா, ’வசதி வாய்ப்புகள் சரியாக இருந்தால் அப்புறம் அனைவரும் ஆவியில் நிறைந்து ஜெபிக்க ஆரம்பிக்கும் பொழுது வெளியேறி திருட்டு தம் அடிக்கலாம், அடிக்கடி வாயை மூடு என்று அம்மாவால் கேட்கப்படும் கொடிய தண்டனை கிடையாது; இது தவிர நிறையச் சகோதரிகள் வருவார்கள் பார்க்கலாம், சைட் அடிக்கலாம் ஆபிரகாம் தன் மனைவி சாராளை அந்நிய தேசத்தில் சகோதரி என்று அழைத்ததாகப் பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே சிஸ்டர்களை சைட் சிஸ்டர்களை ’எஸ். எஸ்.’ என்று அழைப்பது குழூஉக்குறி’- (சகோ ‘டி’ – பக்கம் 11)இவ்வாறு எழுதுகிறார். இந்தப் பத்தியை போல் இவரது பல கதைகளில் வருகின்றன இத்தகைய எழுதும் முறை வழக்கமான கதையாடல் தன்மையைக் கீழறுப்புச் செய்கின்றன. இதே பத்தியை மரபான சித்தரிப்பு முறையில் எழுதினால் இத்தகைய கூரிய பகடியைப் பிரதியில் நம்மால் உணரமுடியாது. ஒரு நிகழ்வைக் குறிக்கும் கதையாடல் ஒற்றை சித்தரிப்பில் எழுதினால் காட்சியாக மட்டுமே எஞ்சும். ஆனால் ப்ரதிபாவின் எழுதும் முறை வேறானதாக இருக்கிறது. தனது பிறழ் நடத்தைக்கு மறை வசனங்களில் ஒன்றை இடையீடாக வைக்கிறார். அதன் மூலம் வாசகனின் அனுபவம் பகடியாக முழுமையடைகிறது. ப்ரதிபாவின் பெரும் பகுதி கதைகளில் இந்த உத்தி கையாளப்பட்டிருக்கிறது. இதை, மாற்று நவீனத்துவக் கூறு என்று சொல்லத் தோன்றுகிறது.

கரசேவை தொகுப்பிலுள்ள கதைப்பிரதிகளை வாசிக்கும்போது, நவீனத்துவக் கதையாடலும் மறை வசனங்களும் ஊடுபாவாக செல்வதைக் காண முடிகிறது. இந்த எழுதுமுறையை ப்ரதிபா தேர்ந்தெடுக்கக் காரணம் என்னவாக இருக்கும் என்ற வினா எழாமல் இல்லை. இதற்கான விடை நம் வாசிப்பில்தான் கிடைக்கும் என்று நினைக்கிறேன். அதிலும்கூட வாசக மனோநிலையும், அவர் சார்ந்து இயங்கும் வாசிப்புச் சமூகத்தின் சொல்லாடல்களைப் பொறுத்தே நிகழும். ப்ரதிபாவின் கதைகளின் பேசுபொருள் மதம், சாதியம் ஆகிய இரண்டின் அதிகார வலைப்பின்னலை அகப்படுத்தி இருப்பதைக் குறிப்பிட வேண்டும். மேலும் கதை உயிரிகள் அனைவருமே அதிகாரத்தினால் விசை கூட்டப்பட்டவர்கள் என்ற புரிதலற்றவர்கள். தாங்கள் அதிகாரத்தினால் தன்வயப்பட்டவர்கள் என்ற புரிதலற்றவர்கள். ஆகையால், அவர்கள் செயல்கள் மற்றும் நடத்தையில் நாம் எதிர்கொள்ளும் வினோதத்தின் அடர்த்தியை ப்ரதிபாவின் மொழிநடை மென்மேலும் அடரச் செய்கிறது. தற்கால விழுமியங்களில் மரபான சமய விழுமியங்களில் மட்டும் எத்தகையதாக இருக்கிறது என்பதையும் உடன் யோசிக்க வேண்டும்.யதார்த்த வாழ்வுலகு என்பது, நமது கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக நினைத்துக் கொள்கிறோம். ஆனால் நம்மையறியாமல் எப்படி அதிகாரத்தின் சொல்லாடல்களால் கையாளப்படுகிறோம் எனப் புரிந்து கொள்ள வேண்டும். இதைக் குறிப்பீடு செய்யும் கதைப் பிரதிதான் ப்ரதிபாவின் ‘கரசேவை’. அன்றாடம் ரோட்டு வேலைக்குச் செல்பவனின் வாழ்வில் நிகழும் அதீத திருப்பத்தையும், அதில் ‘தன்னிலை’ எவ்வாறு தன் கட்டுப்பாட்டை இழந்து பிறழ்கிறது என்பதையும் சொல்கிறது. தான் சற்றும் நினைத்திராத ஒன்றை எப்படிச் செய்கிறான் என எழுதப்பட்டுள்ள கதை கரசேவை. சரி, அதையும் தன் உணர்நிலை தன்வசமிருந்ததா? என்ற சந்தேகமே உடனிருக்கிறது. ரோட்டு வேலைக்குச் செல்லும் தொழிலாளியைப் பஜனைப் பாட்டுச் சத்தத்துடன் வரும் லாறி ஏற்றிக்கொண்டு செல்கிறது. லேபர் யூனியன் மீட்டிங் நடக்குமிடத்திற்கு செல்வதாக நினைக்கிறான். ஆனால், பல லாரிகள் இணைந்துகொள்ள, ‘கடப்பாறை, பிகாக்ஸ், மண்வெட்டி சுத்தியல் போன்ற’ கருவிகளை வைத்திருந்தனர் எனச் சொல்கிறது கதை. இதைத் தொடர்ந்து எல்லா வண்டிகளும் ஓரிடத்திற்கு அருகில் வந்து நின்றன. வீடியோ காமிராக்கள் சூழ்ந்திருந்த இடத்தில் வெள்ளையும் சொள்ளையுமாக தலைவர்கள் இருக்கிறார்கள். அதையடுத்து,

“முனுசாமி அண்ணன் முகத்தில் கலவரம் தெரிந்தது. எனக்கு இந்தக் கூட்டத்தைக் கண்டதும் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. கைகள் துறுதுறுவென இருந்தன, எதையாவது செய்ய வேண்டும்போல. கொஞ்ச நேரத்தில் எல்லோரும் ‘ஹோ’வெனக் கத்தியபடி, அங்கிருந்த பழைய மசூதி மேல் ஏறி, அதை இடிக்க ஆரம்பித்தனர். (நான் தான் உச்சியில் போய் இடிக்க ஆரம்பித்தேன்) கேமிராவைப் பார்த்துக் கையசைத்தேன். மகிழ்ச்சிக்கும் ஆரவாரத்திற்கும் இடையே மசூதி இடிந்து விழுந்து தரைமட்டமானது. போலீசெல்லாம் வந்தது, நான் ஓடிப்போய் லாரியில் ஏறிக்கொண்டேன்”.(பக் 87, 88) அரங்கேறும் மசூதி இடிப்பில் உச்சிக்குச் சென்று இடித்துவிட்டு மீண்டும் லாரிக்கு வந்துவிடுகிறான். இந்த இடத்தில், தனக்கு நேர்ந்த உணர்வெழுச்சியில் ஒரு கூட்டு மகிழ்ச்சி மற்றும் ஆரவாரத்தின் பகுதியாக மாறியதை கதையாடல் வாக்குமூலம் போலப் பதிவு செய்கிறது. இந்தக் கதை தொடங்கும்போது, “திருக்கயிலாய மலையில் பாட்டும் ஆட்டமும் அல்லோலகல்லோலப்பட்டது” என்ற தொடருடன் கதை சொல்லப்படுகிறது; அதில், ”கஞ்சாவும் தண்ணியும் அடித்துக்கொண்டு, ஏதாவது ஒரு கட்சிக்குக் கூலிக்குக் கோஷம்போடும் எனக்கு எப்படி திருக்கயிலாய வாசம் சித்தித்தது என்று கேட்டால், அது ஒரு சுவாரஸ்யமான கதை” (பக் 86). இந்தப் பத்தியில் ஆரவாரமும் மகிழ்ச்சியும் சுட்டப்படுகிறது, இதே விடயம் மசூதி இடிப்பிலும் ஒரு இணைப்பிரதியாக ஆக்கப்பட்டுள்ளது. இதன் நீட்சியாக, மசூதி இடிப்பிற்குப் பிறகு கதையின் அடுத்த அடுக்கான கைலாசத்தில் கதையாடல் தொடர்கிறது. உலகின் சுவடற்ற வேறு உலகம். அதில், ‘உடல் துறந்த நிலை’ நிலவுவதாக எண்ணிக்கொள்கிறது, ஆனால், அங்கும் நிலவுலகத்தின் அத்தனை வேறுபாடுகளும் தொடர்கின்றன. ஒருவன் தான் பிறவிச் செவிடு என்கிறான். உடலின் எல்லாக் குறைபாடுகளும் சொர்க்கத்திலும் இருப்பதைக் கண்டு; ஆன்மா குறைகளற்ற பரிபூரணமானது என்ற கருத்தாக்கத்தைத் தகர்ப்பதுபோல் கதை இங்குப் பேசுகிறது.மேலும் இறவா நிலை மையமாகக் கொண்டு கற்பிக்கப்படும் சொர்க்கலோகத்தை பகடி செய்யும் விதமாக “ இதே சூக்கும சரீரத்தின் ஆயுள் அனந்தகோடி ஆண்டுகள் தொடரும் என்றால்போதுமடா சாமி, இப்போதே நான் செத்தால் போதும் தோன்றியது. இப்படி நினைப்பதே ஸ்வர்க லோகத்திற்கு எதிரான பாவனையாகும்” (பக் 95)

இக்கதை முழுவதும் சமயங்களால் கட்டமைக்கப்பட்டிருக்கும் உடல் மீறிய சொல்லாடல்களை எல்லாம், தனது பகடியான கதையாடல்கள் மூலமாக தகர்த்து விடுகிறார் ப்ரதிபா ஜெயச்சந்திரன். ஒரு பழைய மசூதியின் இடிப்பை ஆதார அடுக்காக வைக்கப்பட்டுள்ள கரசேவையின் இறுதிப்பகுதி மிகவும் நேர்த்தியுடன் எழுதப்பட்டுள்ளதை வாசிப்பவர்கள் உணர்வார்கள். அந்தப் பகுதியை வாசிக்கலாம்:

“ கல்லில் ஜகன்மாதா ப்ரத்தியட்சமானாள். அந்த சாந்த சொரூபி இன்னும் இழைத்து உருவாக்கப்பட வேண்டும். நாசூக்காக உடலெங்கும் கடப்பாறை கூர்த்த லயத்துடன் நர்த்தனமாடியது, ஜகன்மாதாவின் பரவசம் அவள் கண்களில் தெரிந்தது. அவள் உடலெங்கும் ஒளிரூப மின்னல் கால்கள் செதுக்கிச் செதுக்கிச் செதுக்கின. கைகள் லாவகமாக கடப்பாறையை எடுத்துச் சிலாவரிசை போட்டது. கம்பீர்யம் குறையாத அவள் கண்கள் கனவுகளின் மயக்கத்தில் கல்லில் துவண்ட சூக்கும உடல் கடப்பாறைக்கு குழைந்து கொடுத்தது. மெல்ல இறங்கிய உயிருடன் இறங்கிய சூடு புதுக்களை விரித்துத் தாண்டவமாடியது. சதங்கையின் ஓசை சக்தியின் ஆலிங்கனமானது. அவளின் மதுர இதழ்கள் கனவு கண்டன, கால்கள் துவண்டு பின்னின. ஓம் சக்தி ஆலிங்கனம் என் சூக்குமா சூக்கும தேஹமெங்கும் புல்லரித்துப் பரவியது. என்னைப்போன்றே சக்தியும் உணர்வதாய் என் காதில் கிசுகிசுத்தாள். சக்தி தன் சக்தியை என்னிடத்தில் புதுப்பித்துக்கொண்டதாக நா குழறினால். நான் அமைதியில் மூழ்கினேன். என் தேஹம் வேறு ரூபம் கண்டது. சக்தி என்னில் பிரவஹித்து நான் அவளிலும் அவள் என்னிலும் லயித்தோம். திருக்கயிலாய மலையெங்கும் சுகந்தம் பரவியது.“முதல் வேலையாக அந்தப் பிறவிச் செவிடனைச் சொஸ்தப்படுத்த வேண்டும், வாயை மூடி மொணமொணப்பவன் வாயை விரிவாய்த் திறந்துவிட வேண்டும். பூணூல் படித்தரங்களை அறுத்தெறிய வேண்டும், இவையெல்லாம் அவன் நினைத்த மாத்திரத்தில் நடந்தேறிக் கொண்டிருந்தன, என் மார்பில் கிடந்த நூலும் அறுந்துவிட்டிருந்தது.

“தூரத்தில் சிவனார் என்னை நோக்கி தன் பதவி பறிபோய்விட்டதுபோல அலறியடித்து ஓடிவந்துகொண்டிருந்தார். நான் இடித்துப்போட்ட மசூதி புதிய கம்பீரத்துடன் இப்போது நின்றுகொண்டிருந்தது.” (பக் 97) கரசேவை.

ஏறக்குறைய, ப்ரதிபாவின் சிறுகதைத் தொகுப்பிலுள்ள கதைகளில் மற்றொரு முக்கியமான கதை ‘ இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி’ என்ற தலைப்பிலானது. இக்கதைப்பிரதி இறை சேவைக்கு வரும் ஆண் X பெண் என இருவரது சமூகம் மற்றும் சாதியப் பின்னணியைத் தனது உட்களமாகக் கொண்டுள்ளது. மானுட பேதமின்மையைப் போதிக்கக் கூடிய சமய நெறிக்குள் ஊடாடும் வேற்றுமையுணர்வும் பேதவுணர்வும் தங்களுக்குள் நிகழ்ந்துகொண்டிருக்கும் போராட்டத்தையே கதையாடல்கள் ஆக வைத்து கொண்டுள்ளது மேலும் லீதியாள் என்ற சகோதரிக்கும் தீமோத்தேயு சகோதரருக்கும் ஏற்படும் தொடர் சாதிய முரணால் நிகழ்ந்துவிடும் உடல் இணைவையும் அதன் கருக்கொள்ளலும் இறையியல் அறிதலாக உருமாற்றம் அடைகிறது. இதையே கன்னிகை கர்ப்பவதியாகி என இம்மாகுலேட் கன்செப்ஷன் என்பதைப் பகடியாகவும் லீதியாளின் அவலமாகவும் பிரதி ஆக்கியுள்ளார். கதையின் களத்தில் தீமோத்தேயுவின் சகோதரிக்கு பாலியல் வன்முறைக்கு எதிரான பழிவாங்கலில் சிறை சென்று விடுகிறான். அங்குக் கிறிஸ்தவ இறை நெறிக்கு ஆற்றுப்படுத்த படுகிறான் திருச்சபைக்குள் பணியில் லீதியாளை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. லீதியாலின் தொடர் அவமானப்படுத்தலுக்கு ஆளாகிறான். தனது ஜாதியைக் குறித்து தப்பெண்ணம் கொண்டு என்னை நடத்துகிறாளே, அதன் முகாந்திரம் என்ன இரட்சிக்கப்பட்டவர்கள் நடந்து கொள்வது போல் இவள் நடந்து கொள்வதிலேயே இப்படிப்பட்டவர்கள் சபையில் இருப்பதால் நிறைய பேருக்கு இடறல் உண்டாகும்படி ஒருவன் நடந்தால் அவன் கழுத்தில் கல்லைக் கட்டி ஆழமான சமுத்திரத்தில் போடும்படி வேதவசனம் சொல்கிறதே, அப்படியிருக்க பாஸ்டரான என்னைக் கடிந்து கொள்வதும் ஆகாரம் கொடுக்காமல் பட்டினி போடுவதும் உடலால் ஒருவரை த் துன்புறுத்துவதும் பாவத்திற்கேற்ற கிரியையல்லவா ” (பக் 131) லீதியாள் தீமோத்தேயு மேல் மிகவும் சினம் கொண்டு எவ்வளவு தைரியம் இருந்தால் என்னைக் குறித்து நீ பெரிய பார்த்த இடம் கொடுத்து இருப்பாய் உன் சாரி புத்தி உன்னை அப்படி செய்ய பண்ணிட்டு இனியும் இங்கே வைத்து விபசாரம் பண்ண எனக்கு மனதில்லை உனது மரியாதையைக் காத்துக் கொள்ளும் பொருட்டு நீயாக இந்த இடத்தை விட்டு போய் விடு என்றாள் பெரிய பாஸ்டர் தேவியைப் பற்றி செய்திகள் இடம் அவளை உரித்து தீமோத்தேயு கொடுத்தது திரும்புவதற்கு உள்ளாக தொலைப்பேசியில் சொல்லி விட்டபடியால் இப்படி ஆயிற்ற
துன்புறுத்துவதும் பாவத்திற்கு ஏற்ற கிரியைகள் அல்லவா (பக்கம் 111)

போடும்படி வேத வசனம் சொல்லுகிறது அப்படியிருக்க ஆண்டவன் ஆகி இருப்பதால் நிறையப் பேருக்கு உண்டாகும் தீமோத்தேயு சகோதரருக்கும் ஏற்படும் தொடர் சாதிய முறைகளை நிகழ்ந்துவரும் உடல் நினைவையும் அதன் 14 நீதியால் மிகவும் மூர்க்கம் கொண்டு நீ யாருடா எனக்குக் கட்டளையிடுவது நீ செயல் நீ சொல்லி செய்வதா நீ வீட்டை விட்டு வெளியே போடா நாயே என்று சொல்லி திமுகவின் தலையிலும் மார்பிலும் ஓங்கி அறைந்தார் 15 இவரின் செயல்கள் மிகவும் மோசமாகி கொண்டிருந்ததாலும் இவருக்குச் சரியான நபருக்கு சரியான படிப்பினை தராவிட்டால் ஒருவராலும் கரையேற்ற முடியாது என்று அவர் ஆவியில் அறிந்தபடி யினாலும் 16 மேலும் அவள் தன்னை அடைந்து விடாதபடிக்கு வீதிகளில் கைகளைத் தடுத்து இறுகப் பற்றிக்கொண்டார் 17 அப்போது தன் பலம் கொண்டமட்டும் அவன் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள திமிரினால் 16 அவளின் இரு கைகளையும் அவளது முதுகு பின்னுக்குத் தள்ளி அவளை தன் முகத்துக்கு அருகே இழுத்து வைத்து அழுந்த அவளை முத்தமிட்டான் அப்போது அவள் மார்புகளையும் கீழே நழுவியது இறுதி நாளில் சிறந்த மார்பில் தன் முகத்தை வைத்து முத்தமிட்டார்21 இவளை அப்படியே அரைகுறையாக விட்டு விடுவது நல்லதல்ல என்று கண்டு அறைக் கதவை தாளிட்டு விட்டு கட்டிலில் ஏமாற்றி விற்கும் நீதிமன்றத்தில் இடையில் ஏற்பட்ட மோதலில் கிடத்தி அவள் அளித்தார் . இது என் உன் அப்பன் வீட்டு முற்பிதாக்களின் ஊழியம் ஆக இருக்கிறது

லீதியாள் தீமோத்தேயுவின் மேல் மிகுந்த சினம் கொண்டு எவ்வளவு தைரியம் இருந்தால் என்னைக் குறித்து நீ பெரிய பாஸ்டரிடம் பிறாது கொடுத்திருப்பாய் உன் ஜாதி புத்தி உன்னை அப்படிச் செய்ய பண்ணிற்று, இனியும் இங்கே வைத்து உபசாரம் பண்ண எனக்கு மனதில்லை உனது மரியாதையைக் காத்துக் கொள்ளும் பொருட்டு நீயாக இந்த இடத்தை விட்டுப் போய் விடு என்றாள்

12. பெரிய பாஸ்டர் தீமோத்தேயுவைப் பற்றி லீதியாளிடம் அவளைக் குறித்து தீமோத்தேயு பிராது கொடுத்துத் திரும்புவதற்கு உள்ளாக தொலைப்பேசியில் சொல்லி விட்ட படியால் இப்படி ஆயிற்று.

13. கர்த்தர் கொடுத்த இந்த கனமான ஊழியத்தை அற்பமாக எண்ணாமல் எனக்கு இடறல் உண்டாக்காமல் இருக்கும் படி நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் என்றார் தீமோத்தேயு

14. லீதியாள் மிகவும் மூர்க்கம் கொண்டு நீ யாருடா எனக்குக் கட்டளையிடுவது நீ சொல்லிச் செய்ய இது உன் அப்பன் வீட்டு ஊழியமோ உக்கிராணத்துவமோ அல்ல இது எங்கள் முற்பிதாக்களின் ஊழியம் ஆக இருக்கிறது நீ வீட்டை விட்டு வெளியே போடா நாயே என்று சொல்லி தீமோத்தேயுவின் தலையிலும் மார்பிலும் ஓங்கி அறைந்தாள்.

15. இவளின் செயல்கள் மிகவும் மோசமாகிக் கொண்டிருந்ததாலும் இவளுக்குச் சரியான படிப்பினை தரப்பட விட்டால் இவளை ஒருவராலும் கரையற்ற முடியாது என்று அவர் ஆவிக்குள் அறிந்த படியாலும்

16. மேலும் அவள் தன்னை அறைந்து விடாதபடிக்கு லீதியாளின் கைகளை தடுத்து இறுகப் பற்றிக்கொண்டார்

17. அப்போது லீதியாள் தன் பலம் கொண்டமட்டும் தீமோத்தேயுவின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காகத் திமிறினாள்.

18. தீமோத்தேயுவோ அவளின் இரு கைகளையும் அவளது முதுகுப்புறமாக பின்னுக்குத் தள்ளி அவளை தன் முகத்துக்கு அருகே இழுத்து வைத்து அழுந்த அவளை முத்தமிட்டார். அப்போது அவள் மார்பு சீலையும் கீழே நழுவியதால் லீதிகளியாளின் திரண்ட மார்பில் தன் முகத்தை வைத்து முத்தமிட்டார்.

19. அப்போது லீதியாள் இப்படிப்பட்ட திடீரென்ற தாக்குதலால் தன்னால் ஒன்றும் செய்ய முடியாதவளாகவும் தன் மேல் ஒரு புருஷனின் ஸ்பரிசம் பட்டதால் என்ன செய்வதென்று தெரியாமலும் ஒருவித மயக்க நிலைக்குள் சென்றாள்

20. என்ன நடக்கிறது என்று சுய உணர்வு இருந்தாலும் அதைத் தடுக்கக்கூடிய நிலையில் அவளால் இயங்க முடியவில்லை

21. இவளை இப்படியே அரைகுறையாக விட்டு விடுவது நல்லதல்ல என்று கண்டு அறைக் கதவை தாளிட்டு லீதியாளை கட்டிலில் கிடத்தி அவளுடன் சயனித்தார்.

22. தன்னைஅண்ணகராக்கிக் கொண்டு இந்த பரிசுத்த ஜீவியத்தை வாழ்ந்து தீர்ப்பது என்ற பிரதிஷ்டையுடன் இத்தனை வருடங்கள் வாழ்ந்த வாழ்வு ஒரு முடிவுக்கு வந்ததால் தன்னை முற்றிலும் இழந்து விட்டதாக உணர்ந்தார்

23. அவள் தவறான போக்கினிமித்தம் ஒரு ஜீவன் பரிசுத்த வாழ்க்கையை விட்டு வழி விலகி அழிந்து போவதை பார்க்கிலும் அவளுக்குக் கிடைத்த பாடம் அவளை முற்றிலும் மாற்றத்திற்கு உள்ளாக்கும் என்று தீமோத்தேயு உறுதியாக கிறிஸ்துவுக்குள் சுவாசித்தபடியால் இப்படி அவர் நடந்துகொண்டார்.தீமோத்தேயுவிற்கும் லீதியாளுக்கும் ஏற்பட்ட மோதலில், அது சாதிய வன்மத்தினால் நிகழ்ந்தது என்பதை தீமோத்தேயு அறிந்துகொள்கிறார். லீதியாளின் அதிகார தொனியும், அவமதிக்கும் செயலும், மீறி உடல் ரீதியாக தீமோத்தேயுவைத் தாக்குகிறாள் லீதியாள். அதற்கான உடலியல் எதிர்வினையாக தீமோத்தேயு அவளுடன் சயனிக்கிறார். அதன் வழியே கன்னியான லீதியாள் கருத்தரிக்கிறாள். ஆனால் இந்த நிகழ்விற்கு முன், அதாவது ஊழியத்திற்கு வருவதற்கு முன்பு, இயேசுவைப்போலப் பரிசுத்தமுள்ள குழந்தை ஒன்று பெற்றுக்கொள்ள ஆவலாக இருந்திருக்கிறாள் (பக் 138) என்கிறது கதை. தான் விரும்பியதே சம்பவித்தது என எண்ணும் படியானது. மெல்லக் கரு வளர்ந்து ஒருநாள் மயக்கமடைய, சலோமி என்கிற ஒரு முதிய ஊழியக்காரியின் மூலம் லீதியாள் கர்ப்பமுற்றிருப்பது தெரிய வருகிறது. பல மன உளைச்சல்களுக்கு உள்ளாகும் லீதியாளை இறைவசனங்களின் வழியே சலோமி ஆற்றுப்படுத்துகிறாள். இந்தக் கருவுறலில் பின்னியிருக்கும் தாம்பத்யத்தை சலோமி இவ்வாறு விளக்குகிறாள்.

23. லீதியாளே, உன் மனதில் மாமிசத்திற்குரிய ஜாதியைக் குறித்த ஒப்புரவில்லாமையை நீக்கும் பொருட்டு பரிசுத்த பவுல் எபேசு சபையாருக்கு எழுதிய திருபத்தின் சில பகுதிகளை வாசித்துக் காட்டுகிறேன், கேள்

-என்று தொடரும் சலோமியின் லீதியாளுடனான உரையாடல்கள், இந்த சிறுகதையின் முக்கிய திறவுகோல்களாக விளங்குகின்றன. சாதிய பாகுபாட்டின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தவளின் ’ஒப்புரவில்லாமை’ தீமோத்தேயுவினால் கீழறுப்புச் செய்யப்படுகிறது. சாதி வெறுப்புக்கு உள்ளாக்கப்பட்ட ஒருவனால் லீதியாளின் உடல் கையாளப்பட்டுக் கலைக்கப்படுகிறது. ஒப்புரவில்லாமை சமன்படுத்தப்படுகிறது. பகைமையை நீக்கும் முகமாகவே இயேசு தன்னை நீத்துக்கொண்டு ஒப்புரவை நிறுவினார் என்ற கருத்தாக்கத்தை

32. பகையை சிலுவையினால் கொன்று அதனாலேயே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாகத் தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.

33. அல்லாமலும் அவர் வந்து தூரமாயிருந்த உங்களுக்கும் சமீபமாயிருந்த அவர்களுக்கும் சமாதானத்தைச் சுவிசேஷமாக அறிவித்தார்.

இது லீதியாளின் தற்போதைய நிலைக்கு எடுத்துரைக்கப்படுகிறது. லீதியாளின் சாதி ஒப்புரவின்மையை விளக்குகிறார் சலோமி. அதன் ஆணிவேராக விளங்கும் சாதிய வேற்றுமை உணர்வை நீக்கும்படியாகச் சொல்கிறார். இது நீ தேர்ந்த இறையியல் பாதையையே புறக்கணிப்பதாக அமையும் என அறிவுறுத்துகிறார் சலோமி. கதையின் நிறையப் பத்தியை வாசிக்கலாம்.

44. இருப்பினும் பாஸ்டர் தீமோத்தேயுவோ நமது திருச்சபையில் பல விஷயங்களுக்கு முன்னோடியாக விளங்கிக் கொண்டிருப்பவர். அப்படிப்பட்ட பரிசுத்தவானுக்கே, நீ இடறல் உண்டாக்கியிருப்பது கர்த்தர் உன்னைத் தண்டிக்கத்தக்கச் செயலாகும் (பக். 143)

ப்ரதிபாவின் கரசேவைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான சிறுகதைகள், சுய பிரக்ஞை மிக்க கதையாடல்களால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதன் உத்தி அல்லது அமைப்பாக்க நுட்பம் எதுவெனப் பார்க்கலாம். ஒரு கதையைச் சொல்லும் விதத்தில் விவிலிய கதையாடலின் குரலில் சொல்லிச் செல்கிறார். கதையில் எழும் பிரத்யேகமான சந்தர்ப்பங்களையெல்லாம், மறைவசனங்களோடு JUXTAPOSE செய்கிறார். அப்போது வாசகர்களான நமக்குக் கதைமாந்தரின் எதிர்வினைகளும் மறைவசனப் பகுதிகளும் ஒருசேர முன்வைக்கப்படுகின்றன. எதை எதைக்கொண்டு பொருள் கொள்ளவேண்டும் என்ற வினா மற்றுமொரு பெரும் விசாரணைக்கு நம்மை இட்டுச் செல்கிறது. அதில் சாதிய வன்மம் மற்றும் பெரு மதங்களின் அதிகார வலைப்பின்னலில் எப்படித் தனி மனிதர்களும் சமூகமும் சிக்குண்டிருக்கின்றன என்பதை முன்வைக்கிறது. இதனால் கையாளப்படும் ’தன்னிலை’களாக நாம் எவ்வாறு மாறியுள்ளோம் என்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது.கரசேவை தொகுப்பிலுள்ள இரண்டு கதைப் பிரதிகளை முன்வைத்து நான் பேசியிருக்கிறேன். அதற்கான காரணம், ப்ரதிபாவின் பிரதியாக்கத்தின் தனித் தன்மையாக நான் கணிப்பது அதன் பகடித்தன்மை. அதுவேகூட, மறைவசனங்களை ஒரு இணைப்பிரதியாக்கி பிரதானப் பிரதிக்குள் ஊடுபாவியிருப்பதைச் சொல்ல வேண்டும். சட்டென எழும் சூழ்நிலைகளைப் பொருள்கொள்ளவும், அதைப் பகடியாக உருமாற்றும் பிரதியாக்க உத்தியாக ப்ரதிபா மறைவசனங்களை உபயோகித்துள்ளார். மேலும் பிரதியின் வாக்கிய அமைப்புகள் ஆசிரியரின் குரலில் அல்லாது,பிரதியின் உள்ளார்ந்த குரலாக ஒலிக்கச் செய்வதும் மிகவும் முக்கியமானது.இதைத்தான் ப்ரதிபா கதைகளின் ‘மாற்று நவீனப் பண்பு’ என்று சொல்கிறேன். மறுமுறை கதையுரைத்தல் என்கிற முறையில் ஆக்கப்பட்டுள்ளன. இதன் வசீகரம் கதைகளில் எல்லாம் மலர்ச்சியுற்றிருப்பதை வாசிக்கும்போது அறியமுடிகிறது. வழக்கமான கதையாடல்களிலிருந்து விலகிய வாசிப்பனுபவத்தை கரசேவையின் அனேக கதைகள் நமக்களிக்கின்றன.

இக்கதைகளின் பிரதியியல் உத்திகளைப் பற்றிய அழுத்தத்துடன் எழுதப்பட்டுள்ள கட்டுரை இது. ஆனால் ப்ரதிபாவின் பிரதிகளில் ஒலிக்கும் சாதிய வன்மத்திற்கு எதிரான குரலின் அரசியலைப்பற்றியும் தனிக் கட்டுரையாக எழுதவேண்டும் என்றே நினைக்கிறேன். அவ்வகையில் எனது சக பயணி விமர்சகர் ஜமாலனின் “ மதப்பெருங்கதையாடலும் சாதியத்தின் நுண்ணரசியல் விளையாட்டும்” -ப்ரதிபா ஜெயச்சந்திரனின் கரசேவை என்ற கட்டுரை விரிவாக விவாதிக்கிறது.

S Shanmugam: [email protected]

(நன்றி : கணையாழி டிசம்பர் 2020)