ஜானே ஜான் (உயிரின் உயிரே) - திரை விமர்சனம் | JAANE JAAN | Kareena Kapoor Khan |

செப்டம்பர் 2023இல் வெளிவந்த இந்தி திரைபடம். சுஜய் கோஷ் இயக்கியுள்ளார்.
கெய்கோ ஹிகாஷினோ எனும் ஜப்பானிய துப்பறியும் புதின எழுத்தாளரின் பிரபல
நாவலான ‘குற்றவாளி எக்சின் அர்ப்பணிப்ப’'(The Devotion of Suspect X)
என்பதை அடிப்படையாகக் கொண்டது என்கிறார்கள். நமக்கு என்னவோ பாபநாசம்
திரைப்படம்தான் நினைவுக்கு வருகிறது.

பாபநாசம் திரைப்படத்தில் கவுதமி மற்றும் அவரது மகளுக்கு உதவுவது அவரது
கணவர் இல்லை: பக்கத்து வீட்டுக்காரர் என்று மாற்றினால்

மகள் மீது கை வைத்தது சக மாணவன் இல்லை; அவளது கணவன் என்று மாற்றினால்

விசாரணை போலீசின் கொடுமையான முறைகள் இல்லை; ஒரு சுவாரசியமான துப்பறியும்
நடவடிக்கை என்று மாற்றினால்

கொலையை சாமர்த்தியமாக மறைப்பவர் ஐந்தாம்வகுப்பே படித்தவர் இல்லை; ஒரு
கணித மேதை என்று மாற்றினால்

என்ன ஆகும்? இந்தி திரைப்படம் ஜானே ஜான் கிடைக்கும்.

Jaane Jaan': Kareena Kapoor Khan, Jaideep Ahlawat, Vijay Varma unveil intriguing teaser and release date | OTT Release - PTC Punjabi

ஆனால் ஒரு மேதையின் ஆய்வு மற்றும் காதல் சோகத்தை  இழையோட விட்டிருப்பது
மற்றும் இரு பழய கல்லூரி நண்பர்களின் நட்பு கலந்த விரோதம் ஆகியவை
சிறப்பு.

அனைவரின் நடிப்பும் சிறப்பு. எந்தப் பகுதியில் நடக்கிறதோ அதன் சூழல்,
ஆட்கள், உணர்வு ஆகியவற்றை கொண்டு வந்திருப்பதை பாராட்டலாம். காட்சிகளை
நேர்கோட்டில் காட்டாமல் முன்பின்னாக காட்டுவதை ரசிப்பதா அல்லது சிலரை
குழப்பும் என்று நினைப்பதா ?

வீணை பாலச்சந்தரின் ‘அந்த நாள்’’, திர்ஷ்யம் (பாபநாசம்), விஜய் சேதுபதி
நடித்த ‘கிருஸ்மஸ்’ போன்றவற்றை ரசிப்பவர் நீங்கள் என்றால் இதையும்
பார்க்கலாம்

எழுதியவர்: 

இரா.ரமணன் 

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *