தமிழில்: அ. வள்ளிநாயகம், வ.அம்பிகா, மறுவரைவு | ரூ: 70 | பக் : 144
‘இதயம் தருவோம் குழந்தைகளுக்கு….என்ற தலைப்பில் சோவியத் நாட்டில் மிகப் பிரபலமான நூல் இது. சுகம்லீன்ஸ்கி, இறுதி நாள் வரை பள்ளிக் குழந்தைகளுக்குக் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்து மறைந்தவர். ‘தாய் தந்தையின் இதய பூர்வப் பிரியம், விவேகம் நிறைந்த கண்டிப்பு, கடுமை ஆகியவை ஒன்றுகலந்த ஆழமான அன்பு, மனிதத் தன்மை ஆகியவை ஆசிரியரின் முக்கியப் பண்புகளிற் சிலவாகும்` என்பது இவரின் கருத்து. வெயிலுக்கும் குளிருக்கும் அச்சப்படாத வகையில் குழந்தைகளை வளர்க்க வேண்டுமென்கிறார். ‘குழந்தை உருவங்களாகச் சிந்திக்கிறது; பெருவெள்ளமாக அறிவைக் குழந்தை மீது கொட்டாதீர்கள்; மனித சிந்தனையின் சாதனைகள் அளவற்றவை. ஒரு புத்தகத்திலுள்ள அழகை, விவேகத்தை, சிந்தனையின் ஆழத்தைக் குழந்தைகளுக்கு எடுத்துக் காட்டுங்கள். என தனது சொந்த அனுபவங்களிலிருந்து பல கருத்துகளைப் பதிவு செய்கிறார் வசிலீன்ஸ்கி.